ஓர் கலியாண விருந்து A WEDDING SUPPER சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா 56-10-04 1. சிறிது நேரம் ஜெபிப்போம். எங்கள் பரலோகப் பிதாவே, கர்த்தராகிய இயேசுவுக்காகவும், அவர் எங்களுக்கு முக்கியமானவராகவும், அவர் எங்களுடைய இரட்சகராகவும், சந்தோஷமாகவும், வரப்போகிற இராஜாவாகவும், சுகமளிக்கிற வராகவும், அவர் எங்களுக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமாக வும் இருப்பதற்காக இன்றிரவு நாங்கள் உமக்கு நன்றி செலுத் துகிறோம். தேவனுக்கு அந்நியராயிருந்த எங்களை, ஒரு காலத்தில் இந்த உலகத்தில் நம்பிக்கையற்ற பாவிகளாயிருந்த எங்களை, கிறிஸ்து பாவிகளாகிய எங்கள் ஸ்தானத்தை சிலுவையில் எடுத்துக் கொண்டு, எங்களுக்காக மரித்து அவருடைய சொந்த ஜீவனின் ஒப்புரவாகுதலினாலே தேவனிடத்திற்கு திரும்ப கொண்டு வந்ததால் நாங்கள் மிகவும் சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கிறோம். நாங்கள் அதற்காக மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். கர்த்தாவே, நீர் இன்றிரவு எங்களை விசேஷித்த விதமாக சந்திக்க வேண்டுமென்றும், எங்களுடைய சகோதரர்கள் இக்கூட்டத்தை தொடர்ந்து நடத்த வருகையில் நீர் இந்த கூட்டத் தில் வாசமாயிருக்க வேண்டுமென்றும் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இந்தக் கூட்டம் முழுவதையும் நீர் அபரிமிதமாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். எங்களுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து, உம்முடைய ஊழியக்காரராக நாங்கள் இருக்க எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 2.இன்றிரவு இங்கே கர்த்தருடைய ஆராதனையில் இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. என்னை மன்னியுங்கள்... இது ஆராதனையின் கடைசி பாகமாக இருப்பதற்காக வருந்துகிறேன். இது என்னுடைய கடமையாக உள்ளது. என்னைத் தொடர்ந்து சகோதரன் டாமி ஆஸ்பார்னும், சகோதரன் டாமி ஹிக்ஸும், சகோதரன் வில்பர் ஆகில்வியும் இங்கிருக்கப் போகிறார்கள். இந்த மனிதர்கள் அற்புதமான மனிதர்கள் என்பதை நான் அறிவேன். சகோதரன் ஆஸ்பார்ன் என்னைத் தொடர்ந்து நாளை இங்கிருக்கப் போகிறார் என் பதை எண்ணிப் பார்க்கிறேன். அது என்ன ஒரு சிலாக்கியமாக உள்ளது! நான் இங்கே தங்கியிருந்து சகோதரன் ஆஸ்பார்ன் கூறுவதைக் கேட்க விரும்புகிறேன். விசுவாசத்தைக் கொண்டுள்ள தேவனுடைய ஒரு அற்புதமான மனிதராகிய சகோதரன் ஆஸ்பார்னிடமிருந்து ஒரு மகத்தான விருந்தை நீங்கள் எதிர் நோக்கி இருக்கிறீர்கள்... 3.எத்தனை பேர் F. F. போஸ்வர்த்தை அறிவீர்கள்? உங்கள் கரங்களை நாங்கள் பார்க்கட்டும். ஓ, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சகோதரன் போஸ்வர்த் உண்மையாகவே நன்றாகச் காரியங்களைச் செய்து வருகிறார் என்பதை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். ஒரு சில வாரங்களுக்கு முன், நான் இன்டியானா போலிஸில் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் போது, அவர்கள் என்னை அழைத்து அவர் ஆக்ஸிஜன் அறையில் இருக்கிறார் என்றனர். திருமதி. போஸ் வர்த் என்னிடம், 'சகோதரன் பிரன்ஹாமே, எங்களோடு கூட இருங்கள். அவர் மரித்துப் போன உடனே, அவருடைய அடக்க ஆராதனையில் நீர் பிரசங்கிக்கும்படி அவர் விரும்புகிறார்' என்றாள். அவர் ஏறக்குறைய எண்பது, எண்பத்தேழு வயதுடையவராக இருந்தார், அதைப்போன்ற ஏதோவொன்று. 'அவர் விரும்புகிறார்... நீர் அவருடைய அடக்க ஆரதனையில் பிரசங்கிக்க அவர் எப்போதும் விரும்புகிறார்' என்றாள். நான் அவளிடம், 'சகோதரி போஸ்வர்த், என்னுடைய சகோதரன் மரித்துப் போவாரென்று நீங்கள் கருதுகிறீர்களா?' என்று கேட்டேன். அவள், 'ஆம். அவர் எந்த நிமிஷத்திலும் போய் விட லாம்' என்றாள். நாங்கள் தரையில் முழங்கால்படியிட்டு, எங்க ளுடைய முழு இருதயத்தோடும் அவருக்காக ஜெபித்தோம், அடுத்த நாள் மாலையில் அவர் என்னைக் கூப்பிட்டு, 'சகோ தரன் பிரன்ஹாமே, உங்களுக்குத் தெரியும், நான் இந்தியானா போலிஸுக்கு வந்து, இந்த கூட்டத்தில் உமக்கு உதவி செய்ய லாம் என்று நம்புகிறேன்' என்றார். எனவே நான்... 4.சகோதரன் ஆஸ்பார்ன் சகோதரன் போஸ்வர்த்துடன் இருந்ததுண்டு. மேலும் சகோதரன் ஆஸ்பார்ன் ஒரு வாலிப சகோதரனாக இருக்கிறார். போஸ்வர்த் சகலத்தையும் அறிந்தவர், அதாவது சகோ.போஸ்வர்த்துக்கு வார்த்தையும் தெரியும், அதற்கு மேலும் அறிந்தவராக இருக்கிறார். ஆகவே நீங்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவரான சகோதரன் T. L. ஆஸ்பார்ன் பேசுவதை கேட்கும் போது, அவருடன் ஒரு மகத்தான விருந்தை அனுபவிப்பீர்கள் என்று நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். மேலும் இப்பொழுது, அவரைத் தொடர்ந்து சகோதரன் டாமி ஹிக்ஸ் வர இருக்கிறார், உங்கள் எல்லோருக்கும் டாமி ஹிக்ஸைத் தெரியும் என்ற நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு வரை டாமி ஹிக்ஸைக் குறித்து தெரியாதிருந்தது. நான் கூட அவரை அறிந்திருக்கவில்லை. என்னால் - என்னால் கூற இயலாது, ஆனால் கூட்டங்களில் ஒன்றில் அல்லது ஏதோ ஒன்றில், கட்டிலிருந்து விடுவிக்கப்பட்டவராய், அல்லது தேவனால் போஷிக்கப் பட்டவராய், அந்த சிறு மனிதர் அர்ஜென்டினாவில் உள்ள ஏதோ ஓரிடத்திற்கு விமானத்தில் பறந்து சென்றார். அவருடைய சட்டைப்பையில் சல்லிக் காசு கூட இல்லாத போதிலும், தேவன் அங்கே அவரைச் சந்தித்து, ஒரு மிகப்பெரிய எழுப்பு தலைக் கொடுத்தார் என்று நம்புகிறேன். கடந்த நாட்களில், தென் அமெரிக்காவிலுள்ள ஜனங்கள் மத்தியில் அது சம்பவித்தது என்று யூகிக்கிறேன். அவர் அங்கேயிருப்பதை எவ்வளவாக நேசித்தார். மகத்தான கூட்டங்கள், அந்த பத்திரிகைகளில் அதைக்குறித்த கட்டுரைகள் வெளிவந்தன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர் ஊக்கமான பேச்சாளராகவும், தேவனுடைய ஒரு உண்மையான மனிதராகவும் இருக்கிறார்: நான் சகோதரன் டாமி ஹிக்ஸுடன் நீண்ட காலமாய் பணியாற்றி யிருக்கிறேன், அவர் ஒரு உண்மையான கிறிஸ்தவ மனிதர் ஆவார். அவர் உங்களிடம் பேசும் ஒவ்வொரு நிமிடத்தையும் நீங்கள் கேட்டு, உங்கள் வியாதிக்காக அவர் ஜெபிக்கும் ஜெபத்தையும் குறித்து மகிழ்ச்சியடைவீர்கள். 5.மேலும் சகோதரன் வில்பர் ஆகில்வியும் கூட இங் கிருக்கப் போகிறார். நான் சகோதரன் ஹிக்ஸையும் சகோதர னையும் அறிந்திருக்கின்ற அளவு சகோதரன் ஆகில்வியைக் குறித்து நான் அறிந்திருக்கவில்லை... அவர் சகோதரன் ஹிக்ஸைக் காட்டிலும் அதிக காலமாக வயல் நிலத்தில் (சுவிசேஷ களத்தில்) இருக்கிறார் என்று யூகிக்கிறேன். ஆனால் நான் சகோதரன் ஆகில்வியை சில தடவைகள் சந்தித்திருக்கிறேன், அவர் ஒரு உண்மையான கிறிஸ்தவ பண்பாளர். நான் அவர் பிரசங்கித்ததை ஒருபோதும் கேட்டதில்லை, ஆனால் அவர் ஒரு ஊக்கமான பேச்சாளர் என்று அவர்கள் என்னிடம் கூறினர். அவர் தாம் நடத்தும் கூட்டங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார், அவர் செய்கிற காரியங்களில் தேவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறார். எனவே நீங்கள் பாருங்கள், இவ் வாரத்தின் மீதியுள்ள நாட்களில் உங்களுக்கு மகத்தான கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. நீங்கள் இக்கூட்டங்களில் நிச்சயமாவே கலந்து கொண்டு, இந்த உண்மையான கிறிஸ்தவர்களின் பிரசங்கத்தையும் ஜெபத்தையும் கேளுங்கள். அவர்கள் பெரும்பாலும் நாளை இங்கிருப்பார்கள், மேலும் அவர்கள் பேசப்போகிறார்கள். அவர்கள் இக்கூட்டத்தில் எங்கோ இருக்கிறார்கள் என்று சகோதரன் ஜோசப் என்னிடம் வந்து கூறினார். நல்லது, சகோ தரர்களே, நான்... நல்லது, நான் அப்படியானால் உங்க ளுடைய முகத்துக்கு முன்னால் அதைச் சொன்னேன். நான் அதை உங்களுடைய பின்னாக சொல்கிறேன். நீங்கள் எங்கே யிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் எப்படி யாயினும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்று நான் அறிந்திருந்தால், நான் ஒருவேளை இவ்வளவு அதிகமாக உங்களைப் புகழ்ந்திருக்க மாட்டேன். ஆனால் எப்படியும் அவர்கள் தேவனுடைய உண்மையான மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். நான் அவர்களை நேசிக் கிறேன். நான் இங்கிருந்து செல்வதற்கு முன்னால், அவர்களுடைய கரங்களை குலுக்க முடியும் என்று நம்புகிறேன். இப்பொழுது, அதைக் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்? அது அவ்விதமாகத்தான் உள்ளது. ஆனால் நல்லது, அவர்கள் உங்களிடம் கூறுவார்கள். அப்பொழுது நான் அதை நிறுத்தி விடுவேன். சரி. 6.நல்லது, நாம் - நாம் ஒரு உண்மையான உயிர்த் தெழுந்த கர்த்தரைப் பெற்றிருக்கிறோம் என்பதற்காக மகிழ்ச்சி யுள்ளவர்களாய் இருக்கிறோம், இல்லையா? ஓ, எனவே - எனவே அதைக்குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். இப்பொழுது, இது சிகாகோவுக்கு என்னுடைய குறிப்பிடத்தக்க பிரயாண மாய் உள்ளது. நான் செய்கிற விதமாக கடினமான காரியங் களின் பேரில் நான் எப்பொழுதாவது பிரசங்கிக்கிறேனா என் பதை ஒருபோதும் நான் எண்ணிப் பார்ப்பதேயில்லை. நான் இப்பொழுது சிந்தித்துப் பார்த்தேன்... சபையைக் கண்டித்து ணர்த்தவும், ஒழுக்கமுறைகளை சபைக்குத் திரும்பக் கொண்டு வரவும்... ஆனால் கடிதங்களின் மூலமாவும், தொலைபேசி அழைப்புகளின் மூலமாகவும் அவர்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, அதுதான் எங்களுக்குத் தேவையாயுள்ளது' என்று கூறுகிறார்கள். அது என்னை நன்றாக உணரச் செய்தது. யாரோ ஒருவருடைய உணர்ச்சிகளை நான் புண்படுத்துகிறேன் என்று நினைத்தேன், எனவே... 7.நான் குறிப்பிட்ட காரியங்களின் பேரில் நான் இரண்டு அல்லது மூன்று தடவைகள் (பேச) வந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். கடந்த இரவில், நான் பிரசங்கிக்கப் போவதாக என்னுடைய சிந்தையில் ஒரு தலைப்பு இருந்தது. நான், 'ஆம்' என்றேன். தாவீது முதலாம் சங்கீதத்தில், 'அந்த மனுஷன் பாக்கியவான்' என்றான். நான், 'ஆசீர்வாதமான மனிதன்' என்பதன் பேரில் பிரசங்கிக்கப் போவதாக இருந்தேன். நான் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, 'முகத்தில் வர்ணம் பூசப்பட்ட யேசபேல்' என்பதன் பேரில் விளக்கமாக எடுத்துரைத்தேன் - பிரசங்கித்தேன். எனவே... நான் இங்கே வந்த பிறகு. அன்றொரு நாள் நான் சபையில் ஏதோவொன்றைப் பிரசங்கிக்கச் சென்றேன். நான் பிரசங்க பீடத்தை அடைந்த போது, 'ஏதோவொன்றைக் குறித்து வேதாகமத்தில் ஏதோவொன்று உள்ளதே' என்று எண்ணினேன். சகோதரன் ஜோசப் ஒரு சிறு பகுதியை வாசித்து, அங்கேயிருந்து பிரசங்கிக்கத் தொடங்கினார். எனவே உங்களோடுள்ள இந்த ஐக்கியமும், நீங்கள் என்னுடன் நீடிய பொறுமையாயிருப்பதைப் பார்க்கும் போதும் எனக்கு அது உண்மையான யூபிலியாக உள்ளது. நான் அதைப் பாராட்டுகிறேன், ஏனெனில் நான் அதிக மாக ஒரு பேச்சாளன் அல்ல; இந்த நேரத்தில் அது உங்களுக்குத் தெரியும். நான் இந்த தலைமுறையினருக்கு முன்பாக நிற்கும் போது, நான் தேவனுக்காக நின்று சரியானதைச் செய்தேன் என்ற உறுதியோடு பரலோகத்திற்குச் செல்ல விரும்பு கிறேன். பாருங்கள்? நான் இதை பரலோகத்தில் உண்மை யாகவே தெளிவாக்க விரும்புகிறேன். நீங்களும் கூட அதை விரும்புவீர்கள் என்று நான் நிச்சயமுடையவனாய் இருக்கி றேன். 8.மேலும் இப்பொழுது, நான்... நாம் இன்றிரவு சுகமளிக்கும் ஆராதனைகளைக் கொண்டிருக்கப் போகிறோம். இப்பொழுது, அவர்கள் - அவர்கள் அநேக ஜெப அட்டைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அங்கே வெளியே அநேகர் இருக்கிறீர்கள், நான் அனேகமாக உங்கள் எல்லாரையும் அழைக்க முடியாது, ஆனால் நான் அதைச் செய்ய மாட்டேன், ஏன், ஒரு குறிப்பிடத்தக்க ஊழியத்துடன் என்னை பின்பற்றும் சகோதரர்கள் ஒவ்வொருவரும், வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வரும்போது என் ஊழியத்தைக் காட்டிலும் மிஞ்சிப் போன ஊழியத்தைக் கொண்டிருக்கிறார்கள், முற்றிலுமாக... இந்த மனிதர்கள் நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதைக் காட்டிலும் அவர்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதில் மகத்தான ஜெயத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நான் ஒரு வகையான தீர்க்கதரிசன வகையுடையவன். உண்மையாகவே இந்த மனிதர்களுக்கு சுகமாக்கும் வரங்கள் உள்ளன. வியாதியாயுள்ள உங்களுக்காக ஜெபிக்கவும் இரட்சிக்கப்பட்ட மற்றும் இரட்சிக்கப்படாத உங்களிடம் சுவிஷேத்தைப் பிரசங்கிக்கவும் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை அறியும் போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 9.இப்பொழுது, எனக்காக ஜெபியுங்கள். என்னால் கூடு மானால், சுதேச ஊழியக்காரர்கள் பின்தொடர உலகத்தின் ஒவ்வொரு பிரதானமான பட்டணங்களுக்கும் போகும்படி நான் இப்பொழுது ஒரு உலகளாவிய சுற்றுப் பயணத்தை வரையறுத்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது, அடுத்த ஜூன் மாதத்தில் அந்த பயணம் இருக்கும். நான் அறிந்துள்ளபடி எனது அடுத்த கூட்டமானது, நான்... இங்கேயிருந்து நான் இடாகோ விலுள்ள சால்மனுக்குப் போகிறேன். ஆனால் உடனே அடுத்து வருகிற கூட்டமானது, ஓஹியோவிலுள்ள லிமாவில் இருக் கும். அந்த கூட்டமானது பாப்டிஸ்ட் ஜனங்களோடு ஜனவரி மாதம் 10 முதல் 15 முடிய நடைபெறுகிறது. பிறகு அங்கே யிருந்து, கிழக்கு நோக்கி சென்று, அதன் பிறகு வெஸ்ட் கோஸ்டுக்குத் திரும்புகிறோம். இல்லை, உங்களுடைய மன்னிப்பைக் கோருகிறேன். ஜனவரி மாதத்தில், நாங்கள் வெஸ்ட் கோஸ்டுக்குத் திரும்பிய பிறகு, கடல் கடந்து போக ஆயத்தப் படுகிறோம். இப்பொழுது, நான் கடல் கடந்து போவது வரையோ அல்லது ஏதோ ஒன்றின் பக்கமாக போவது வரையோ, நான் உங்கள் எல்லாரையும் சிகாகோவில் காண முடியவில்லையெ னில் எனக்காக ஜெபியுங்கள், ஞாபகம் கொள்ளுங்கள், காற்று பலமாக அடித்து, ஒவ்வொரு விதத்திலும் பிசாசு சோதித்து, சூனியக்கார மந்திரவாதிகள் (witch doctors) எழும்பி சவால் விட்டுக்கொண்டு இருக்கும் போது, எனக்காக ஜெபித்துக் கொண்டிருக்கும் உங்கள் மேல் நான் சார்ந்திருக்கலாமா? நல்லது, நல்லது. நாம் மீண்டும் பரலோகத்தின் இப்பக்கத்தில் ஒருபோதும் சந்திக்காமல் இருந்தால், ஏதோவொரு மகிமையான நாளில் பரிசுத்தவான்கள், இராஜாதி இராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமாகிய அவருக்கு கிரீடம் சூட்டி, நாம் மீட்பின் பாடல்களைப் பாடும்போது தூதர்கள் பூமியைச் சுற்றிலும் தலைவணங்கி நிற்கையில், அவருடைய நீதியை வஸ்திர மாக உடுத்திக் கொண்டு, வரப்போகும் அந்த மகத்தான உலகத்திற்குள் செல்கையில், மிகவும் மகிமையான அந்த யூபிலி நாளில் நான் உங்கள் எல்லாரையும் சந்திப்பேன் என்று நம்புகிறேன். அங்கே இனிமேல் வியாதியில்லை, இனிமேல் வியாதியஸ்தருக்காக ஜெபமுமில்லை; இந்த எல்லா காரியங்களும் மறைந்து போகும். அது வரையில், தேவன் உங்களை ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும், அவரை சேவிப்பவர் களாகவும் வைப்பாராக. 10.பரிசுத்த மத்தேயுவின் புஸ்தகத்திலிருந்து, நாம் சிறிது வாசிக்கலாம். அந்த பாகத்திலிருந்து பேசலாம் என்று உணர்கிறேன்; இந்த மற்ற சகோதரர்களும் இங்கிருக்கின்றனர் என்பதை நான் அறிவேன். ஆனால் பரிசுத்த மத்தேயுவின் புஸ்தகத்தில் 12-ம் அதிகாரம் தொடங்கி, 22-ம் அதிகாரம் 12-ம் வசனம் தொடங்கி 12-ம், 13-ம், 14-ம் வசனங்களை வாசிக்கலாம். அதிலிருந்து தேவன் நமக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுப்பாரானால், ஒரு சிறிய பாடத்திற்காக ஒரு வேத பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். (மத்தேயு 22:12-14) சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். 11.கர்த்தர் தம்முடைய வார்த்தையோடு ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. இப்பொழுது, ஒரு - ஒரு மகத்தான பொருளின் பேரில் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அது வேதாகமத்தில் கர்த்தர் போதித்த ஒரு உவமையாக உள்ளது. நான் ஒருபோதும்... நான் சிறு பருவத்தில் ஒரு பிரசங்கியாக இருக்கும் போதே, இந்த உவமையின் அர்த்தம் என்னவென்று நான் அடிக்கடி வியந்ததுண்டு. நான் கிழக்கத்திய நாடுகளுக்குச் சென்று ஒருமுறை பார்க்கும் வரையில் அதை என்னால் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியவில்லை. வேதாகமமானது ஒரு கிழக்கத்திய புத்தகமாகும். ஒரு மேற்கத்திய புரிந்து கொள்ளுதலின் மூலம் நாம் அதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். நீங்கள் கிழக்குக்குச் செல்வீர்களானால், அது உங்க ளுக்கு வித்தியாசமான ஒரு புத்தகமாக இருக்கும். ஏனெனில் அது கிழக்கத்திய அறிவின் வெளிச்சத்தில் எழுதப்பட்டது. கிழக்கத்திய ஜனங்கள் தாம் முதலாவதாக பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர். நாகரிகமானது எப்போதும் சூரிய னோடு பிரயாணிக்கிறது, அது போலவே சுவிசேஷமும் சூரிய னோடு பிரயாணம் செய்தது. ஆனால் என்னுடைய கருத்தின்படி, நாகரீகமானது சுவிசேஷத்தின் மூலமாக வந்ததாகும். தேவனைக் கனம் பண்ணாத எந்த தேசத்தையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்... ஓ, என்னே, அங்கே அதிகமான அளவு நாகரிகமானது இருக்காது. எனவே நாகரிகமானது... கிறிஸ்தவ மானது நாகரிகத்தினுடைய புல்லின் வேராயுள்ளது. நாங்கள் கிறிஸ்தவ வியாபார புருஷர்களுக்காக வாஷிங்டன் டிசியில் ஒரு காலை உணவில் இருந்த போது, திரு. நிக்ஸன் அதைத் தான் குறிப்பிட்டார். 12.இப்பொழுது, சூரியனானது மேற்கை நோக்கிப் பிரயா ணித்த போது, சுவிசேஷமும் மேற்கை நோக்கி பிரயாணித்தது. இப்பொழுது, 'ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்' என்று தீர்க்கதரிசி கூறியுள்ளான். இப்பொழுது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன், கிழக்கத்திய ஜனங்கள் மேல் பரிசுத்த ஆவியானது ஊற்றப்பட்டது, கிழக்கிலுள்ள யூதர்கள் மேலும் மற்றவர்கள் மேலும் ஊற்றப்பட்டது. அதன் பிறகு, அப்போஸ்தலர்களின் முதல் சுற்றானது முடிந்து போகும் தருவாயில் அது மறைந்து போக ஆரம்பித்தது. இரண்டாவது சுற்றிலும் ஏறத்தாழ போய் இருண்ட காலங்களுக்குள் பிரவேசித்தது. சீர்திருத்தக் காலத்தில் சிறிது வெளிச்சம் வந்து, வெஸ்லியின் காலத்தினூடாக அவ்வெளிச்சமானது வந்தது. ஆனால் நாம் எல்லாவகையிலும் கிழக்கிலிருந்து மேற்கு கடற்கரை முழுவதுமாக பிரயாணம் செய்தோம். நாம் எவ்வளவு போக கூடுமோ அவ்வளவாக மேற்குக்கு அருகாமையில் இருக்கிறோம், சுவிசேஷமும் அதனுடன் பிரயாணம் செய்து வந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது, 'ஒரு நாள் உண்டு, அது பகலு மல்ல இரவுமல்ல' என்று தீர்க்கதரிசி உரைக்கிறான். ஒரு வகையான இருண்ட, மந்தாரமான, மேகமூட்டமான நாள். 'ஆம். இயேசுவே தேவனுடைய குமாரன். ஆம், அவர் பாவத் திலிருந்து இரட்சிக்கிறார். ஆனால், ஓ, அற்புதங்கள் மற்றும் காரியங்களின் நாட்கள், முற்காலத்தில் கிழக்கில் இருந்தது' என்று சொல்லும்படிக்கு போதுமான வெளிச்சத்தை நாம் பெற்றுள்ளோம். ஆனால் தீர்க்கதரிசியோ, 'சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும்' என்று கூறினான். 13.மேலும் இப்பொழுது, இங்கே மேற்கத்திய பாகம் - உலகின் அரைப்பாகத்தில், மேற்கத்திய ஜனங்கள் மேல் பரிசுத்த ஆவியின் அபிஷேகமானது ஊற்றப்படுகிறது. சூரியனானது உதிக்கும் போது இருந்த விதமாகவே, மீண்டும் மறையும் போதும் பிரகாசிக்கிறது. கோட்பாடுகளாலும் ஸ்தாபனங்களாலும் நிழலிடப்பட்டிருக்கிற இந்த நாளில் இருளும் இல்லாமல் வெளிச்சமும் இல்லாமல் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன், கிழக்கத்திய ஜனங்கள் மேல் விழுந்த அதே பரிசுத்த ஆவியானவரே ஊற்றப்பட்டிருக்கிறார். ஆனால் இந்த சாயங்கால நேரத்தில், அவள் மறையும் போது, கிழக்கத்திய ஜனங்களால் செய்யப்பட்ட அதே அடையாளங்களும் அதே அற்புதங்களும் அதே அளவோடு கூட பரிசுத்த ஆவியின் அபிஷேகமானது மேற்கத்திய ஜனங்கள் மேல் ஊற்றப்பட்டது, அப்படியே மிகச்சரியாக. எனவே, விசேஷத்த விதமாக வேதாகமத்தின் இந்த உவமையைக் குறித்து அறிந்து கொள்ள நீங்கள் கிழக்கிற்கு போகும் போது, அது உங்களை விழிப்படையச் செய்யும். அவைகள் உண்மையாகவே உங்களுக்கு தத்ரூபமாகத் தோன்றும். அவைகளுக்கு அர்த்தம் உண்டு. கிழக்கில் அவர்கள் எப்பொழுதாவது தங்களுடைய சம்பிரதாயங்களை மாற்றுகிறார்கள். அவர்கள்... அவர்கள் தொடக்கத்தில் இருந்த விதமாகவே, அவர்கள் இன்னும் அந்த சம்பிரதாயங்களைப் பற்றிக் கொண்டிருக்கின்றனர். 14.மேலும் இப்பொழுது, இன்றிரவில், நம்முடைய பாடமானது கலியாண விருந்தைப் பற்றியதாகும். ஓ, நீங்கள் அதைப் பார்க்க வேண்டும். இங்கே இயேசு அதைக் குறித்துப் போதிக்கிறார். அவர் இந்த உவமைகளை அநேக இடங்களில் சொன்னார். நீங்கள் எப்பொழுதாவது கிழக்கத்திய நாடுகளுக்குச் சென்று பார்ப்பீர்களானால், நீங்கள் அந்த உவமை களைக் குறித்து அறிந்து கொள்வீர்கள், அவர்கள் அப்போது செய்த வழக்கத்தின்படியே இன்னும் ஜீவித்துக் கொண்டிருக்கி றார்கள். இப்பொழுது, இவ்விடத்தில், கலியாண விருந்து ஆயத்த மாக்கப்பட்டிருந்தது; மத்தேயு 22- ம் அதிகாரம் அதைக் குறித்து மிகவும் நன்றாக விளக்குகிறது, ஒரு ராஜாவுக்கு ஒரு குமாரன் இருந்ததாக மத்தேயு புத்தகத்தில் அவர் கூறுகிறார். அவர் தன்னுடைய குமாரனுக்காக ஒரு விருந்தை ஆயத்தப்படுத்தினார். அது ஒரு கலியாண விருந்தாகும். இது என்ன வொரு அருமையான உவமையாகவோ அல்லது தீர்க்கதரிசன கம்ப மாகவோ உள்ளது. பரலோக இராஜா தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவுக்காக ஒரு விருந்தை ஆயத்தப்படுத் தினார். அது தான் அந்த உவமையின் அர்த்தமாக உள்ளது. எனவே தேவன் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசு வுக்காக ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துகிறார்... நாம் அதற்குள் தோண்டி, கீழ்த்திசை நாடுகளிலும் கிழக்கத்திய மாதிரியிலும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த விருந்தின் பின்னணியைக் அறிய முயற்சித்து, நீங்கள் அந்த பின்னணியை கவனிப்பீர்களானால், அது தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறந்த நாம் அனைவருக்கும் இந்த நாட்களில் ஒன்றில் இருக்கப்போகிற தேவனுடைய குமாரனின் வருகைக்கும் கலியாண விருந்திற்கும் அது மிகவும் அருமையான காட்சியாக இருக்கும். அருமையானது. 15.இப்பொழுது, முதல் காரியமாக, விருந்தானது ஆயத்த மாக்கப்பட்டிருக்குமானால், அவர்கள் அழைக்கப்பட்டா லொழிய இந்த விருந்திற்கு வர எந்த நபருக்கும் அனுமதி யில்லை. அம்மாதிரியான எந்த விருந்திற்கும் நீங்கள் போவ தற்கு முன்னால், முதலாவதாக நீங்கள் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பொழுது, நான் அதை மாலை விருந்து (dinner) என்று அழைக்க விரும்பவில்லை. அது இன்னும் இரவு உணவாக (supper) இருப்பதை விசுவாசிக்கும்படிக்கு நான் போதுமான அளவு பழைமை நாகரீகம் கொண்டவனாய் இருக்கிறேன். நாம் கர்த்தருடைய மாலை போஜனத்தைப் புசிப்பதில்லை, நாம் கர்த்தருடைய இராப்போஜனத்தைத் தான் புசிக்கிறோம். இங்கே இந்த மாலை விருந்தின் காரியங்கள், என்னை எப்போதும் பசியடையச் செய்கிறது; நான் எங்கோ ஓரிடத்தில் உணவைத் தவறவிட்டேன். எனவே நான் - நான் பகலுணவையும், காலை உணவையும், இரவுணவையும் விரும்புகிறேன். எனவே அது நாம் புசிக்கும் கர்த்தருடைய இராப்போஜனமாக இருக்கிறது என்பதை நான் - நான் இன்னும் விசுவாசிக்கிறேன். எனவே, எப்படியாயினும், நீங்கள் விருந்திற்கு அழைக்கப் படும்போது, நீங்கள்... நீங்கள் வரும்படியாக வரவேற்கப் படுவதற்கு முன்னால், நீங்கள் அழைக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் அழைக்கப்படாதிருந்தாலும் அங்கு போவீர்களானால், நீங்கள் அத்துமீறி நுழைபவராவீர்கள். அது சரியாக இருக்காது. நீங்கள் தகுதியற்றவர்களாக இருப்பீர்கள். 16.இப்பொழுது, ஒவ்வொரு வழியிலும் தேவனுக்குப் பிரீதியாயிருந்த அவருடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு வுக்காக கொண்டாடப்படும்படியாக ஒரு மகத்தான விருந்தை கொண்டிருக்கப்போகும் ஒரு நாளை தேவன் ஆயத்தப்படுத்தி யிருக்கிறார் என்பது என்ன ஒரு அருமையான காரியமாக உள்ளது! பிதாவாகிய தேவன் அவரால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களை அழைத்துக் கொண்டிருக்கிறார். இயேசு, 'முதலாவது என் பிதா ஒருவனை அழைக்கா விட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான்' அது சரியா? 'என் பிதாவிட மிருந்து ஒருவனுக்கு அழைப்பில்லாவிட்டால், அவன் என்னி டத்தில் வரமாட்டான்.' பாருங்கள், எனவே அந்த ராஜா அழைக்க வேண்டியிருந்தது. இன்றிரவு அழைக்கப்பட்டிருக் கிற நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! 17.நான் உங்களிடம் கூறுகிறேன்: ஜனாதிபதி ஐசன் ஹோவர்... நான் ஒரு அரசியல்வாதியல்ல. நான் - நான்... லிங்கனுக்குப்பிறகு வந்த ஜனாதிபதிகளிலேயே ஐசன்ஹோவர் ஒரு மகத்தான ஜனாதிபதிகளில் ஒருவர் என நான் நினைக்கி றேன். நான் அவரை நேசிக்கிறேன். அவர் ஒரு உண்மையான பண்பாளர். மேலும்... ஜனாதிபதி ஐசன்ஹோவர் தாம் கொடுக் கப்போகிற ஒரு மகத்தான பகல் விருந்திற்கோ அல்லது ஒரு மகத்தான இராவிருந்திற்கோ சில ஜனங்களை அழைப்பாரானால், நீங்கள்...? ஓ, நீங்கள் பூரிப்படைவீர்கள். அவர் உங்களை அழைத்திருப்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டு மேன்று நீங்கள் விரும்புவீர்கள். நீங்கள் அர்த்தமில்லாமல், அதின் பின்னாகத் திருப்பி, 'இது தவறான முகவரி, ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதல்ல' என்று எழுதி, அதை திருப்பி அனுப்பி விடுவீர்களா? நீங்கள் அவ்வாறு செய்யவே மாட் டீர்கள், ஏன்... என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள், பழங்காலத்தில் தெருவில் இறங்கி கூவி கும்மாளமடித்து, 'அதைக் குறித்து பெருமை அடித்துக் கொள்ளுதல்' (என்பது போல்.) 'பாருங்கள், ஜனாதிபதி என்னை அழைத்திருக்கிறார்' என்று ஒவ்வொருவரிடமும் அதைக் காண்பிப்பீர்கள். நல்லது, நீங்கள் நிச்சயமாகவே அதைக்குறித்து மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். தேவன் தம்முடைய குமாரனுடைய கலியாண விருந் திற்காக உங்களை அழைத்திருப்பாரனால், நாம் அதை அழைக் கிறபடி, நீங்கள் எவ்வளவு அதிகமாக 'அதைக்குறித்து பெருமை அடித்துக்கொள்ள' வேண்டும்? நீங்கள் அதற்காக எவ்வளவு அதிகமாக நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்? இப்பொழுது, திரு.ஐசன்ஹோவர் ஒரு மகத்தான மனிதர். அவருடன் மேசையில் உட்காருவது என்பது ஒரு கௌரவமாக இருக்கும். ஆனால் தேவ குமாரனுடன் உட்காருவது என்பது அதைக்காட்டிலும் எவ்வளவு அதிகமான கௌரவமாக இருக்கும். அது என்னவொரு மேன்மையாக இருக்கும். நான் ஐசன்ஹோவருடைய விருந்திற்காக அழைக்கப் பட்டதற்காக நான் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு அதிகமாக அதைக்குறித்து கூற விரும்புவேன்? ஏன், நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் தேவனுடைய குமாரனின் விருந்திற்காக, அவருடைய குமாரனுடைய கலியாண விருந்திற்காக நான் அழைக்கப்பட்டதைக்குறித்து நான் அறிந்து கொண்டதற்காக எவ்வளவு அதிகமான சந்தோஷமாக நான் இருப்பேன்? (ஆமென்.), நாம் அங்கே சென்றடையும் போது, அது அதனுடைய ஒரு பாகமாக இருக்கப் போகிறது, அதில் சேர்க்கப் படப்போகிறது. நம்முடைய பெயரானது ஏற்கனவே பதிவேட்டில் உள்ளது. என்ன? 'அவர் எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை நீதிமான்களாக் கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை (ஏற்கனவே, கடந்த காலம்) மகிமைப்படுத் தியுமிருக்கிறார்.' அவ்வாறு தான் வேத வாக்கியம் கூறுகிறது. அப்படியானால் நீங்கள் பயப்பட வேண்டியது என்ன? பாருங்கள்? உங்களுடைய பெயரானது அங்கே எழுதப்பட்டுள்ளது... உங்களுடைய சொந்த இரட்சிப்பைத் தேடுங்கள். ஆனால் உங்கள் பெயர் அங்கே எழுதப் பட்டிருந்து, நீங்கள் அங்கே இருப்பீர்களானால், கவலைப்பட வேண்டாம். இருப்பினும் உங்களுடைய பெயரானது அங்கே எழுதப்பட்டுள்ளதா என்பதில் நிச்சயத்தோடிருங்கள். 18.இப்பொழுது, ஐசன்ஹோவர் உங்களுக்கு அந்த அழைப்பிதழை அனுப்பியிருப்பாரானால், நீங்கள் எவ்வளவு சந்தோஷமுள்ள வர்களாக இருக்க வேண்டும்? வேறொரு காரியம் என்னவெனில், நீங்கள் திரு.ஐசன்ஹோவரின் விருந்திற்கு, பழைய அழுக்கான ஆடைகளை அணிந்து கொண்டு அவமரியாதையாக நீங்கள் அங்கு போக முயற்சிப்பீர்கள் என்று நான் எண்ணவில்லை. நீங்கள் அவ்வாறு நினைக்கி றீர்களா? முழுவதும் அழுக்கானதும், ஆணியடித்து பொருத்தப்பட்ட காலணிகளை அணிந்து கொண்டும், உங்களுடைய முகத்தில் மீசை வைத்துக் கொண்டும், அல்லது ஏதொவொன்று அல்லது மற்றொன்றுடன் நீங்கள் போவீர்களா?... நீங்கள் அவ்வாறு போக மாட்டீர்கள். நீங்கள், 'ஏய், இங்கே பார், நான் உன்னிடம் ஒன்றைக் கூறப் போகிறேன், ஐசன்ஹோவர் (சகோதரன் பிரன்ஹாம் எச்சில் உமிழ்கிறார் - ஆசி.) நான் வரக்கூடுமா என்று என்னை அழைத்தார், (சகோ தரன் பிரன்ஹாம் மீண்டும் துப்புகிறார் - ஆசிரியர்) மேலும் சொன்னார் நான்...' என்று கூறுவீர்கள். ஓ, அது ஐசன் ஹோவருக்கு ஒரு அவமானமாக இருக்கும். நல்லது, கலியாண விருந்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக உரிமை கோருகிற நீங்கள், ஒப்பனை செய்து கொண்டும், உலகத்தாரைப்போல ஜீவித்துக்கொண்டும், புகை பிடித்து மது அருந்திக்கொண்டும், சுற்றித் திரிந்து அவ்வாறு தொடர்ந்து செய்வீர்களானால், அது எவ்வளவு அவமரியாதையான செயலாக இருக்கும். நீங்கள் கலியாண விருந்திற்குப் செல்லப் போவீர்களானால், உங்களைச் சுத்திகரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதைச் செய்ய விரும்ப வேண்டாம். அதை விட்டு வெளியே வாருங்கள். பாருங்கள்? நீங்கள் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் போன்று நடந்து கொள்ளுங் கள். ஆமென். நான் விசுவாசிக்கிறேன் நீங்கள்... நீங்கள் உண்மையாகவே அழைப்பைப் பெற்று அதை ஏற்றுக்கொள்வீர்களானால், நீங் கள் அதைச் செய்வீர்கள். உங்களால் அதை கற்பனை செய்ய முடிகிறதா? என்னே, என்னுடைய கைவிரல் நகத்தின் கீழே யுள்ள எல்லா அழுக்கையும், மற்ற ஒவ்வொன்றையும் சுத்தப் படுத்திக் கொள்வேன். உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு சிறு பழைய அசுத்தமான காரியங்களையும் சுத்திகரித்துக் கொள்ளுங்கள். 'பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக் கடவோம்;' ஓ, என்னே. அவர் என்ன ஒரு உதாரணத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டியுள்ளது? நாம் ஒரு கலியாண விருந்திற்காக எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம். 19.இது தேவன் உங்களுடைய இருதயத்தில் பேசிக் கொண்டிருப்பதாகும். நீங்கள் சுவிசேஷ ஆராதனையில் ஒவ் வொரு இரவும் அதை தள்ளிப்போடுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்வதில்லை. தேவன் உங்களுடைய இருதயத்தைத் தட்டி, 'மகனே, நீ இன்றிரவு என்னிடம் வரும்படி நான் உன்னை அழைக்கிறேன். சிலுவையின் பாதையில் வா, அங்கே என்னுடைய நேச குமாரன் கிரயத்தை செலுத்தினார். வாசலண்டை வா; நான் உன்னை அழைத்துக் கொண்டிருக் கிறேன்' என்று கூறுகிறார். நீங்களோ அவரைத் தள்ளிப் போடுகிறீர்கள். திரு.ஐசன்ஹோவரை நீங்கள் நிராகரிக்க மாட்டீர்கள் என்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். 'ஆனால் தேவன், ஒருவரும் கெட்டுப்போக விரும்பாமல், நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.' அவர், 'வழக்காடு வோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இப்பொழுது வாருங்கள், நான் உங்களுடன் பேசட்டும்' என்று சொன்னார். ஓ, நான் அதை நேசிக்கிறேன். 'இன்றிரவு, நீங்கள் வந்து, இப்பொழுது சபையில் உட்கார்ந்து, பகல் வேளையின் வேலைகளை எல்லாம் மறந்து விட்டு, வழக்காடுவோம் வாருங்கள். வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.' தேவன் உங்களுடைய பிரச்சனைகளைக் குறித்து வழக்காட விரும்புகிறார் என்பதை எண்ணிப் பாருங்கள். எனவே, வார்த்தையைப் பிரசங்கிப்பதன் மூலமாக நீங்கள் எங்கே தவறியிருக்கிறீர்கள் என்று காண்பிக்கிறார், பிறகு நித்திய ஜீவனுக்காக தம்முடைய வீட்டிற்கு வரும் படியான ஒரு அழைப்பை அவர் கொடுக்கிறார். நீங்களோ அதை நிராகரிக்கிறீர்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? நல்லது, ஜனங்கள் அதைத்தான் செய்கிறார்கள். 20.நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு, குதூகலம் அடை யாமலும், சந்தோஷப்படாமலும், மகிழ்ச்சியால் நிரம்பாமலும் இருப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? 'நல்லது, நான் சென்று என்னுடைய பெயரை சபை புஸ்தகத்தில் பதிவு செய்து கொண்டேன். நான் சபையில் ஒரு ஒப்பந்த அங்கத்தினராக ஆகியிருக்கிறேன்' என்று சொல்லுகிறோம். நல்லது, அதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு போதும் உள்ளே வரமுடியாது... நீங்கள் ஒருபோதும் ஒரு பரலோக அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் அதைக் குறித்து ஒவ்வொருவரிடமும் கூறிக்கொண்டிருந்தீர்கள். ஆம். தேவன் உண்மையாகவே இறங்கி வந்து, உங்களுக்கு அழைப்பைக் கொடுக்கும் போது, நீங்கள் உண்மையாகவே உங்கள் இருதயத்திலிருந்து அதை ஏற்றுக்கொண்டு, அதைக் குறித்து ஒவ்வொருவரிடமும் கூறுவதில் சந்தோஷப்படுவீர்கள். 'நான் மகிமைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தேவன் என்னுடைய இருதயத்தில் பேசினார். நிச்சயமாகவே, நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறேன்.' நீங்கள் உண்மையிலேயே அதைக் குறித்து ஆர்வம் கொண்டிருந்தால், நீங்கள் அதைச் செய்யும்படி விரும்புவீர்கள். (பாருங்கள்?) அந்நியர்களாகவும் சத்துருக்களாகவும் இருக்கும் பாவிகளை தேவன் அழைத்துக் கொண்டிருக்கிறார். தேவன் சத்துருக்களை அழைத்து அவர்களுடன் ஒப்புரவாக வேண்டுமென்று விரும்புகிறார். இப்பொழுதுள்ள ஜனாதிபதியல்ல, பரலோக தேவன் அவருக்கு விரோதமாய் அந்நியர்களாகவும் சத்துருக்களாகவும் இருப்பவர்களை அழைத்து, தம்மிடத்தில் ஒப்புர வாக்கி, நித்திய ஜீவனை அவர்களுக்குக் கொடுத்து, என்றென்றுமாக அவருடைய பிள்ளைகளாக ஜீவிப்பதற்கு அவருடைய வீட்டிற்குள் கொண்டு வருகிறார். ஏன், அதைப்போன்ற ஏதோவொன்றை செய்யும் பரலோக தேவனைக் குறித்து சிந்திக்கும் மனித சிந்தையால் அறிவதை விடவும் மேலானதாக உள்ளது. ஆனால் அவர் அதை செய்தார். மேலும் அவர் அதை இங்கே போதிக்கிறார். 21.இப்பொழுது, அழைப்புகள் கொடுக்கப்பட்டாயிற்று. தேவனைத் தவிர யாருமே அழைப்பைக் கொடுக்க முடியாது. அது சரியே. தேவன் தாமே அழைப்பைக் கொடுக்க வேண்டும். சரி. இப்பொழுது, தேவன் அழைப்பைக் கொடுக்கும் போது... அந்த ராஜா விருந்தை ஆயத்தம் பண்ணியிருந்தான். அவன் தன்னுடைய அழைப்பிதழ்களை அனுப்புவதற்கு முன், அவன் எல்லாவற்றையும் ஆயத்தமாக வைத்திருந்தான். கிழக்கத்திய நாடுகளில் நடக்கும் கலியாண வைபவங்களில் மணவாளன் எப்போதும் அதைச் செய்கிறான். எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்துகிறான். வேதாகமத்தில் அவன், 'இதோ, என் விருந்தை ஆயத்தம் பண்ணினேன், என் ஆடுகளும் எருதுகளும் கொளுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, மேசை முழுவதும் பலவகை உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது' என்று கூறினான். அவன் அழைப்பிதழ்களைக் கொடுப்பதற்கு முன்னால், அவன் எல்லா வற்றையும் ஆயத்தம் பண்ணினான். அந்த நாட்களில் அது வழக்கமாக இருந்தது: எல்லாவற்யையும் ஆயத்தம் பண்ணுதல். இப்பொழுது, தேவன் எல்லாவற்றையும் ஆயத்தம் பண்ணியிருக்கிறார். நீங்கள் ஒன்றிற்காகவும் காத்திருக்க வேண் டியதில்லை; அது ஏற்கனவே ஆயத்தமாக்கப்பட்டுள்ளது. நீதி யுள்ளவராகிய கிறிஸ்து அநீதியுள்ளவர்களுக்காக ஒரே தரம் மரித்து, உங்களை அவரிடமாகச் சேர்ப்பதற்கு, தம்முடைய இரத்தத்தினாலே ஒப்புரவாக்கும் ஒரு வழியை உண்டு பண்ணினார். அவர் ஒவ்வொன்றையும் ஏற்கனவே ஆயத்தம் பண்ணியுள்ளார்... பரலோகம் ஏற்கனவே ஆயத்தமாக்கப் பட்டுள்ளது. 'என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்.' உங்களுடைய இரட்சிப்புக்காக எல்லாமே ஆயத்த மாக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து ஒருமுறை மரித்து, பாவ பிரச்சனையை என்றென்றுமாய் தீர்த்து விட்டார். கிறிஸ்து மரித்த அதே மணி நேரத்திலேயே நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். அந்த நேர முதற்கொண்டு உலகத்தில் ஜீவித்த ஒவ்வொரு நபரும், அந்த நேரத்திலேயே இரட்சிக்கப்பட்டனர். இயேசு கல்வாரியில் மரித்த போது, சம்பவிக்கப் போகிற ஒவ்வொரு சுகமாக்குதலுக்காவும் அவர் கல்வாரியில் சிந்தின இரத்தத்தினால் ஒவ்வொரு சுகமளித்தலும் செய்யப்பட்டிருந்தன. பாவத்தைக் குறித்த கேள்வியையும், பாவத்தின் தன்மையைக் குறித்த கேள்வியையும் அது தீர்த்து விட்டது. 22.எவ்வாறு மனிதன்... நீங்கள் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு சுவிசேஷத்தைப் பிரசங்கித்துவிட்டு, தெய்வீக சுகமளித்தலை எவ்வாறு மறுதலிக்க முடியும்? ஏன், அஞ்ஞான ஆப்பிரிக்கர்கள் நீங்கள் முன்வைக்க முயற்சிக்கும் தேவனைக் காட்டிலும் சிறந்த தேவனை முன்வைக்க முடியும். அதை மறுதலிக்கும் நீங்கள் அதை அழைப்பீர்களானால்... நீங்கள் அதை அவ்வாறு அழைப்பீர்களானால், உங்களின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நான் ஆயத்தமாகிறேன். அது தேவனை சிறிது வல்லமையற்றவராக ஆக்கலாம், அவர் செய்வதைக் காட்டிலும் உங்களுக்கு அதிகமாகத் தெரியும். தேவன் பெலமுள்ளவராக இருக்கிறார். அது என்னவாயிருக்கிறது... தேவன் பேசும் பொழுது, மற்ற எல்லாமுமே மூலைக்கு துள்ளிக்குதித்து ஓடி விடும். உங்களுடைய எல்லா வேத சாஸ்திரமும், உங்களுடைய சபைக்காரியங்களும், நீங்கள் அறிந்த எல்லாமும், மற்ற ஒவ்வொன்றும் ஒரு மூலையில் தள்ளப்பட்டு விடும். தேவன் பேசும்போது, அவருடைய வார்த்தையானது அப்படியே நிறை வேறும், அது ஒவ்வொரு மனிதனுடைய வார்த்தைக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தும். 'எந்த மனிதனுடைய வார்த்தையும் பொய்யாகவும் என்னுடைய வார்த்தையோ சத்தியமான தாயும் இருக்கட்டும்.' இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது. என்னைப் பொறுத்த வரையில் அது சரியாயுள்ளது. நிச்சயமாக. அவர் பெலவீனமானவரல்ல; அவர் இன்னும் சர்வ வல்லமையுள்ள தேவனாக இருக்கிறார். எல்லாம் அருளப்பட்டுள்ளன; நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். 23.இப்பொழுது, கிறிஸ்து வந்தார், நியாயப்பிரமாணம் வந்தது, மோசே வந்தான், எலியா வந்தான், தீர்க்கதரிசிகள் வந்தனர், ஒவ்வொன்றும் கல்வாரியையும் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி யையுமே சுட்டிக்காட்டியது. எல்லாம் அருளப்பட்டு, காத்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது, அழைப்பிதழைக் கொடுப்பது தான் அடுத்ததாக செய்ய வேண்டிய காரியமாகும். தேவன் மட்டுமே வந்து அழைப்பிதழைக் கொடுக்கிறார். பிரசங்கி, 'எல்லாம் ஆயத்தமாயுள்ளன' என்று கூறுகிறார். அதுதான் பிரசங்கியுடைய பேச்சாக உள்ளது. 'எல்லாம் ஆயத்தமாயுள்ளன.' அழைப்பிதழ்கள் கொடுக்கப் பட்டு விட்டன; பிரசங்கியார், 'எல்லாம் ஆயத்தமாயுள்ளன' என்று கூறுகிறார். வார்த்தையைப் பிரசங்கம் பண்ணிய பிறகு தேவன் அழைப்பைக் கொடுக்கிறார்... எல்லாம் ஆயத்தமாயுள்ளன என்று நீங்கள் எவ்வாறு அறிவீர்கள்? அது வார்த்தையில் எழுதப்பட்டுள்ளது, 'விசுவாசம் கேள்வியினால் வருகிறது, தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினால் வருகிறது.' உங்களுடைய சுகமாகுதல் ஆயத்தமாயுள்ளது. இன்றிரவு உங்களுடைய மகத்தான யூபிலி ஆயத்தமாயுள்ளது. அல்லே லூயா. உங்களுக்காக தேவனுடைய மகத்தான தெய்வீக சுகமளித்தலின் கூட்டம் ஆயத்தமாயுள்ளது. ஆமென்.... கிறிஸ்து கொல்லப்பட்டார்; அவருடைய இரத்தமானது சிந்தப் பட்டிருக்கிறது; பரிசுத்த ஆவி இங்குள்ளது; பிதாவானவர் ஒரு அழைப்பை உங்களுக்குக் கொடுக்கிறார். 'எல்லாம் ஆயத்தமா யுள்ளன.' யார் அவ்வாறு சொன்னது? 'விசுவாசமானது கேள்வியினால் வருகிறது, கேள்வியானது தேவனுடைய வார்த்தை யால் வருகிறது' என்று வார்த்தை கூறியுள்ளது. வார்த்தையைக் கொண்டுவர தேவன் பிரசங்கிமார்களைப் பயன்படுத்துகிறார். நீங்கள் விசுவாசத்தினால் அதைக் கேட்கிறீர்கள். 24.எலியா அந்த மலையின் மேல் இருந்தான், அவன் கீழே போகும்படி தேவன் அவனிடம் சொன்னார். ஏனெனில் அங்கே கீழே ஒரு விதவை ஸ்திரீ தொல்லையில் அகப்பட் டிருந்தாள். அவள் வெளியே ஒலிமுகவாசலில் இரண்டு விறகு பொறுக்கிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தாள். கீழே தெருவில் பிரசங்கி - தீர்க்கதரிசி வருகிறான். அவன் நடந்து வந்து, வேலியின் மீது சாய்ந்து நின்று கொண்டு, ஒலிமுக வாசலில் இருந்த இந்த விதவையிடம் அவன், 'நான் குடிக்கிற தற்கு கொஞ்சம் தண்ணீரும் கொஞ்சம் அப்பமும் கொண்டு வா' என்றான். அவள் சொன்னாள்... கவனியுங்கள், எப்படி அனுப்புவது என்று தேவன் எவ்வாறு அறிகிறார் என்பதைப் பார்க்கிறீர்களா? தேவன் அவளுக்கு ஏற்கனவே அழைப்பைக் கொடுத் திருந்தார். இங்கே எலியா என்னும் பிரசங்கி வார்த்தையைப்பிரசங்கிக்க வருகிறார். அவன், 'கொஞ்சம் அப்பமும் கொஞ்சம் தண்ணீரும் கொண்டு வா' என்றான். அவளோ, 'என்னிடம் கொஞ்சம் ஆகாரம் மாத்திரமே உண்டு என கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்' என்றாள். வேறு வார்த்தையில் சொன்னால், நான் பானை முழுவதையும் சுரண்டி எடுத்து விட்டேன். 'ஒரு சிறு அடையை செய்வதற்கு போதுமானது மாத்திரமே என்னிடம் உள்ளது. நான் இங்கே இரண்டு விறகு பொறுக்கிக் கொண் டிருக்கிறேன். நான் ரொட்டி சுடப்போகிறேன். இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப் படுத்துகிறேன்' என்றாள். 25.ஓ, அதற்குள்ளாக செல்ல நேரம் இருக்கும் என நான் விரும்புகிறேன். பரலோகத்திலிருந்து அது ஊற்றப்படுவதை நான் இப்போது உணர்கிறேன். பாருங்கள், இரண்டு விறகுகள் என்பது சிலுவையைக் குறிக்கின்றன. பழங்கால இந்தியர்கள் பழைமை பாணியில் நெருப்பு மூட்டுவார்கள், காட்டில் விறகு வெட்டுபவர்களாகிய என்னுடைய சகோதரர்கள் நான் எதை கூற விழைகிறேன் என்பதை அறிவார்கள். இரண்டு மரத் துண்டுகளின் நடுவே நெருப்பை மூட்டி, அதனுடைய ஒரு பக்கத்தை தள்ளிக் கொண்டே இருப்பார்கள். வெப்பமானது நடுவில் இருக்கும். அவள், 'நான் இரண்டு விறகு பொறுக்கி, நெருப்பு மூட்டி, ரொட்டி சுடப்போகிறேன்' என்றாள். அப்பமானது மாவினால் செய்யப்படுகிறது, அது அசைவாட்டப்படும் காணிக்கையைக் குறிக்கிறது, அது கிறிஸ்துவாக இருந்தது. 'நான் நெருப்பினால் அதைச் சுடப்போகிறேன்.' அது பரிசுத்த ஆவியாகிய அக்கினியைக் குறிக்கிறது, சிலுவையின் நடுவில், நாம் அதற்குள் செல்ல சமயமிருந்தால். 'என்னுடைய குமாரனும் நானும் சாப்பிட்டு செத்துப்போகப் போகிறோம்.' 26.கவனியுங்கள். இங்கே பிரசங்கி வார்த்தையைக் கொண்டு வருகிறான். 'விசுவாசம் கேள்வியினாலே வருகிறது, கேள்வி தேவனுடைய வார்த்தையினாலே வருகிறது.' எலியாவைக் கவனியுங்கள். 'போய், முதலாவது தேவனைத் தேடு. ஒரு சிறு அடையைப் பண்ணி என்னிடம் கொண்டு வா. கர்த்தர் உரைக்கிறதாவது, தேவன் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்து போவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்து போவதும் இல்லை' என்றான். ஆமென். நீங்கள் அதைக் காண்கிறீர்களா? பிறகு, அவளை உயிரோடு வைப்பதற்காக அவள் கொண்டிருந்த ஜீவியத்தின் கடைசி அடையையும் சிலுவையின் நெருப்பின் மேல் வைத்து, முதலாவது தேவனைத் தேடினாள். அந்த அடையைச் செய்து அதை கொண்டு வந்து எலியாவிடம் கொடுத்தாள். அவன் அதை சாப்பிட்டான். நானும் அதைப்போன்ற ஒன்றை சாப்பிட விரும்புகிறேன், நீங்களும் அவ்வாறு விரும்பவில்லையா? அவள் திரும்பிச் சென்று, பானையிலிருந்து மாவெடுத்து, ஒரு பெரிய அடையைச் செய்து, அவளுடைய மகனுக்காக ஒன்றையும் செய்து, மழை பொழிவது மட்டும் சாப்பிட்டார்கள். ஏன்? தேவன் தம்முடைய பிரசங்கியை அனுப்பினார். 'விசுவாசம் கேள்வியினால் வருகிறது, கேள்வி தேவனுடைய வார்த்தையினால் வருகிறது.' அழைப்பானது கொடுக்கப்பட்டு விட்டது. 27.இப்பொழுது, அழைப்புகள் கொடுக்கப்பட்ட உடனே, சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினார்கள். ஓ, ஆம், ஒருவன் ஒரு பெண்ணை விவாகம் பண்ணினான், மற்றொருவன் சில ஏர்மாடுகளை வாங்கினான். உங்களுக்கு அந்தக் கதை தெரியும். இன்றும் அவ்விதமாகத்தான் உள்ளது. தேவன் விருந்தை ஆயத்தம் பண்ணி, விசுவாசத்தைக் குறித்துப் பிரசங்கிக்க பிரசங்கிமார்களை அனுப்பினார். என்ன சம்பவித்தது? 'என்னால் போக முடியாது, ஏனெனில் நான் மற்றொரு சபையின் டீகனாக இருக்கிறேன். என்னால் அதைச் செய்ய முடியாது' என்று கூறுகின்றனர். 'நல்லது, என்னால் போக முடியாது, ஏனென்றால் என்னுடைய கௌரவம் குறைந்து போய் விடும்' என்று கூறுகிறார்கள். உங்களுடைய கௌரவம்... அதற்குப் பிறகு, 'ஓ, என்னால் போக முடியாது, எனென்றால் அதைப்போல் நடந்து கொள்கிற பழைய பரிசுத்த உருளுபவர்களை நான் விசுவாசிக்க மாட்டேன். நான்... நான் என்னுடைய வாழ்க்கையை வாழப் போகிறேன்' என்கின்றனர். சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினார்கள். 'ஓ, அந்த வழி மிகவும் நேராக உள்ளது. எனக்கு அதைச் செய்ய விருப்பமில்லை.' 'நல்லது, நான் இரவில் வரும்போது மிகவும் களைப்பாயுள்ளது. எனவே சபைக்கு என்னால் போக முடியாது' என்று சாக்குப்போக்கு சொல்கிறார்கள். அதுதான் இன்றைய சாக்குப்போக்காக உள்ளது. 'ஓ, என்னுடைய கணவனாருக்கு அது பிடிக்காது என்பதற்காக நான் பயப்படுகிறேன்.' 'என்னுடைய மனைவி என்னை உதைத்து வீட்டை விட்டு வெளியே தள்ளி விடுவாள் என்பதற்காக பயப்படுகிறேன்.' நீ அப்படிப்பட்ட மனிதனாக இருந்தால், அவள் நிச்சயமாக அப்படிச் செய்வாள். அது சரியே. ஆனால் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள்: சாக்குப்போக்கு சொல்லுபவர்களாக. அவர்களில் அநேகம் பேர் அவ்வாறு செய்கின்றனர், அதன் பெயர் தான் சாக்குப்போக்கு. 28.இப்பொழுது, அதன்பிறகு அவனுடைய ஊழியக்காரர் அவனிடம் திரும்பி வந்து, 'ஆண்டவனே...' என்றனர். அது லூத்தருடைய காலத்திலிருந்து வெஸ்லியின் காலம் வரை சம்பவித்தது. எல்லா வகையான சாக்குப்போக்குகளும் சொல்லப்பட்டன. 'ஓ, நல்லது, எங்களுக்குச் செய்வதற்கு வேறு காரியங்கள் உள்ளன.' ஆனால், அதற்குப் பிறகு, அந்த ஊழியக்காரன் திரும்பி வந்து, 'நான் எல்லாவற்றையும் செய்து விட்டேன், அவர்களோ எல்லா சாக்குப்போக்குகளையும் சொல்லுகிறார்கள்' என்றான். இப்பொழுது அவன் அந்த பிரசங்கியிடம் என்ன சொன்னான் என்பதைக் கவனியுங்கள். 'விருந்து ஏற்கனவே அயத்தமாகி விட்டது.' ஆமென். அது ஏற்கனவே - கடந்த காலம். 'இப்பொழுது, நீங்கள் விருந்திற்கான அழைப்பைக் கொடுக்கும்படி நான் விரும்புகிறேன். அவர்களைத் தனியே விட்டு விடுங்கள், எப்படியும் அவர்கள் வரப்போவதில்லை' என்றான். ஆனால் சென்று, ஒரு சுகமளிக்கும் கூட்டத்தைத் தொடங்குங்கள். முடவர்களையும், குருடர்களையும், சப்பாணிகளையும் கொண்டு வாருங்கள். இன்று சுகமளிக்கும் கூட்டத்திற்கு பெருந்திரள் கூட்ட மக்கள் வரும் காரணத்தால், அதைக் குறித்து ஒவ்வொருவரும் கொக்கரிக்கிறார்கள். 'பிரசங்கியாரே, உம்மைக் குறித்துள்ள காரியம் என்ன?' அது வேதாகம வெளிச் சமாகும். அது சரியே. 'போய், முடவரையும் சப்பாணிகளையும் அழைத்து வாருங்கள்.' வேதாகமத்தைப் பொறுத்த வரையில் கர்த்தருடைய வருகைக்கு முன்பதாக அது தான் கடைசி அழைப்பாக உள்ளது. போய் ஒரு சுகமளிக்கும் கூட்டத்திற்கு அழைப்பு விடுங்கள். அற்புதங்களும் அடையாளங்களும் அதிசயங்களும் செய்யப்படும். அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், ஏனெனில் என்னுடைய பந்தியை முழுவதுமாக நிரப்பப்போகிறேன். ஆமென். 'நான் அதை ஆயத்தம் பண்ணியிருக்கிறேன். என்னுடைய கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது. நான் ஒரு உண்மையான விருந்தைக் கொண்டிருக்கப் போகிறேன். நீங்கள் வெளியே போய் முடவர்களையும், சப்பாணிகளையும், குருடர்களையும், உபத்திரவப்படுகிறவர்களையும் கொண்டு வாருங்கள்.' சகோதரனே, அதுதான் போஜனத்திற்கான ஒரு அழைப்பு (meal call). தெய்வீக சுகமளித்தல் தான் இன்றைய செயல் திட்டமாய் உள்ளது. அது தான் தேவனுடைய கடைசி அழைப்பாயுள்ளது, அதுவே தெய்வீக சுகமளித்தல். அதை ஏற்றுக்கொள்ளாமல் தங்களுடைய பெரியதான பழைய உலர்ந்த வேத சாஸ்திரங்களுடன் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் இவர்கள், நாம் கூட்டத்தைக் கூட்டுவதற்கு தெய்வீக சுகமளித்தலை செய்தித்தாளில் பிரசுரிக்கிறோம் என்று கூற முயற்சிக்கிறார்கள். இயேசு அதைச் சொன்னார். ஆமென். ஓ, ஒரு பாப்டிஸ்ட் அந்தக் காரியத்தைக் கொண்டிருப்பானானால், அது அவனை சத்தமிட வைக்கும். அது சரியே. தெய்வீக சுகமளித்தல் தான் இந்த நாளின் ஒழுங்காக உள்ளது. 29.இப்பொழுது, அவர், 'இப்போது, இந்தக் கடைசி அழைப்பில் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நீங்கள் வெளியே சென்று அவர்களை உள்ளே கொண்டு வந்து, நீடித்து நிற்கும் அருமையான மகத்தான பெரிய ஸ்தாபனத்தைக் கொடுங்கள். நீங்கள் இதை, அதை அல்லது மற்றதை செய்வது எனக்கு விருப்பமில்லை' என்று கூறிக்கொண்டு பரமேறிச் செல்லவில்லை. அது தேவனுடைய திட்டமல்ல. அவர் சொன்னார்... இப்பொழுது, கிழக்கத்திய தேசங்களில், நாம் முற்காலத்திற்குச் சென்று அவர்களுடைய வழக்கத்தைப் பார்த்து, அவன் என்ன சொன்னான் என்பதைப் பார்க்கலாம். அந்த ராஜா அவனுடைய விருந்தை ஆயத்தப்படுத்தின போது... இப்பொழுது, என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? மணவாளன், அழைப்புகள் கொடுக்கப்பட்ட பிறகு, எல்லா முடவர்களும் சப்பாணிகளும் குருடர்களும் அல்லது யாரெல்லாம் அழைக்கப்பட்டார்களோ யாருக்கு அழைப்புகள் வந்ததோ அவர்கள் வந்த பிறகு, இப்பொழுது, அது வழக்கமாக இருந்தது... அவர்கள் ஏழைகளும் வித்தியாசமான எல்லா ஆடைகளும் அணிந்தவர்களாயும் இருந்தால், அவர்கள் எப்படி அவ்வாறு வர முடியும்? அவர்கள் எவ்வாறு தோற்றமளிப்பார்கள்? ஒருவர் ஒரு அருமையான சூட்டை அணிந்து கொண்டு உட்கார்ந்திருப்பார், மற்றொருவர் ஒரு ஜோடி மேலாடைகளோடு உட்கார்ந்திருப்பார், அது சரியாக காணப்படாது. எனவே அவர் சொன்னார்... இப்பொழுது, அழைப்பு கொடுக்கப்பட்ட பிறகு, மணவாளன் வஸ்திரங்களைக் கொடுக்க வேண்டும். அதுவே கிழக்கத்திய தேசங்களின் வழக்கமாயிருந்தது. மணவாளன் சென்று அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு வஸ்திரத்தை வாங்க வேண்டியதாயிருந்தது, அப்போது தான் அந்த நபர் வரும் போது... அவர்களுக்கு ஒரே வழி மாத்திரமே இருந்தது (மகிமை. அதற்காக தேவனுக்கு நன்றி.), தொள்ளாயிரத்து அறுபது வித்தியாசமான வழிகளில் அல்ல, ஆனால் ஒரே வழியில். 'நானே வழி' என்று இயேசு சொன்னார். 30.இராஜாவின் குமாரனாகிய மணவாளன் அழைப்பு களைப் பெற்றுக்கொள்ள கதவருகில் நின்று கொண்டிருப்பார். ஒரு அழைப்பிதழைக் கொண்டு வரும் ஒவ்வொருவரிடமிருந் தும் மணவாளன் அழைப்பிதழைப் பெற்றுக்கொள்வார். பிதா அழைப்பைக் கொடுக்கிறார், அவன் வந்து அதை மணவாளனிடம் கொடுக்கிறான். அந்த அழைப்புகளைத் திருப்பித் தந்த உடன், மணவாளன், அடையாளமாக ஒவ்வொருவருக்கும் ஒரு வஸ்திரத்தை தரிப்பிக்கிறார். (ஓ, என்னே) அவர் நல்லவரா கவோ அல்லது தீயவராகவோ இருந்தாலும், ஐசுவரியவானோ அல்லது ஏழையோ யாராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; அப்போது எல்லாரும் ஒரே விதமாக காணப்படுவர். ஆமென். இப்பொழுது, இந்த வஸ்திரமானது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைத் தவிர வேறொன்றுமில்லை. அது தான் வஸ்திரமாக உள்ளது. 31.வயதான தீர்க்கதரிசியாகிய எலிசாவின் (எலியாவின்) வஸ்திரமானது - ஒரு மாதிரியாக - அவன் கிறிஸ்துவுக்கு ஒரு மாதிரியாய் இருந்தான். அவனைப் பின்தொடர்ந்த எலிசா, அவனுக்குப் பிறகு தீர்க்கதரிசியானான். அவன் சபைக்கு மாதிரியாய் இருக்கிறான். எலியா நான்கு அற்புதங்களைச் செய்தான் என்று நம்புகிறேன்... (அது எட்டு அற்புதங்களாக இருக்க வேண்டும், நான்கு அல்லது எட்டு. இப்பொழுது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.) பிரமிக்கத்தக்க அற்புதங்கள். எலிசா - சபையானது - அவனுடைய ஆவியின் வரம் இரட்டிப்பாய் கிடைக்க வேண்டுமென்று கேட்டான்: இரட்டிப்பான பங்கு. அவன், 'உன்னுடைய கண்களை பரலோகத்திற்கு நேராக வைத்துக் கொள், நான் மேலே எடுத்துக் கொள்ளப்படும் போது, நீ என்னைக் கண்டால், உனக்குக் கிடைக்கும்' என்றான். எலியா சுழல்காற்றில், ஒரு அக்கினி முகிலில் எலிசாவின் பார்வையை விட்டு, எடுத்துக் கொள்ளப்படுகையில், எலியா தன்னுடைய சால்வையை பின்னே எறிந்தான்; எலிசா அதை எடுத்துககொண்டு, யோர்தானுக்கு நடந்து வந்து அதை அடித்து, 'எலியாவின் தேவன் எங்கே?' என்றான். அவன் எலியா செய்ததைக் காடடிலும் இரண்டு மடங்கு அற்புதங்களைச் செய்தான். இயேசு சபையிடம், 'நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், அதைக் காட்டிலும் அதிக கிரியைகளைச் செய்வீர்கள்' என்று சொன்னார். அதன் இரட்டிப்பான பங்கு. அவர்கள் பெந்தெகொஸ்தே நாளில் பயமடைந்தவர்களாயும், வல்லமையற்றவர்களாயும், உதவியற்றவர்களாயும், மேலே சென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரமேறிச் சென்ற பிறகு காத்திருந்தார்கள், அவர் அதே வல்லமையை, அவர் அணிந்திருந்த அதே வஸ்திரத்தை பரலோகத்திலிருந்து கீழே அனுப்பி (எறிந்து), சபையின் மேல் விழப்பண்ணினார். வஸ்திரமாகிய பரிசுத்த ஆவி... 32.ஒவ்வொரு மனிதனும் அழைக்கப்பட்டிருக்கும் போது ஏதோவொன்று... நீங்கள் சபையின் வாசல் மூலமாக போக முடியாது. இயேசு, 'நானே வழி' என்றார். நீங்கள் சபையின் மூலமாகப் போவீர்களானால், நீங்கள் வேதசாஸ்திரத்தினாலும், போதனைகளினாலும் முழுவதுமாக குழப்பமடைவீர்கள். ஏன், இங்கே சுற்றிலுமுள்ள பழைய குளிர்ந்த பிண அறைகளில் சிலவற்றில் ஆவிக்குரிய வெப்பமானியில் பூஜ்ஜியத்துக்குக் கீழே நாற்பதிற்கு போய்விட்டது (அந்த அளவுக்கு குளிர்ந்து போய் விட்டன). நீங்கள், 'ஆமென்' என்று கூறுவீர்களானால், அவர்கள் உங்களை சபையை விட்டு வெளியே துரத்தி விடுவார்கள். இன்று நமக்கு என்ன தேவையென்றால், மாசத்தை சபை அங்கத்தினர்களை விட்டு அசைத்தெடுக்கும், பழைமை நாகரீகமான, தேவனால் அனுப்பப்பட்ட, பரலோகத்தில் பிறந்த, பரிசுத்த ஆவியின் ஒரு எழுப்புதல்தான். அது அவர்களை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கான சரியான பாதையில் மீண்டும் திருப்பி கொண்டு வரும். அது தான் இன்று நமக்குத் தேவையாயுள்ளது. 33.இயேசு, 'நானே ஆட்டுத்தொழுவத்தின் வாசலாக இருக்கிறேன்' என்றார். அவர் எவ்வாறு ஒரு வாசலாக இருக்க முடியும் என்று நான் வியந்ததுண்டு. கிழக்கத்திய நாடுகளில், மேய்ப்பனே வாசலாக இருக்கிறான் என்பதை நான் கண்டு கொண்டேன். அவன் ஆடுகளை உள்ளே கொண்டு வந்து விட்டு, ஓநாயோ மற்ற எதுவுமோ அவனை அறியாமல் உள்ளே போகாதபடி அவன் வாசலின் குறுக்கே படுத்துக் கொள்கிறான். அது அவனை விழிப்பாய் இருக்கச் செய்யும். அவரே வாசலாக இருக்கிறார். ஆட்டுத்தெழுவத்திற்கு ஒரேயொரு வாசல் தான் உண்டு. மற்றவை எல்லாம் வெறும் அலங்கார காட்சியாகவே இருக்கின்றன. ஆமென். 'நானே ஆட்டுத்தொழுவத்திற்கு வாசலாய் இருக்கிறேன். என் மூலமாய் நீங்கள் உள்ளே பிரவேசிக்கலாம். குமாரன் மூலமாய் அன்றி யாரும் பிதாவினிடத்தில் வர முடியாது.' உங்கள் சபை மூலமாயும் எந்த மனிதனும் வர முடியாது. உங்களுடைய ஆசாரியன் மூலமாயும் எந்த மனிதனும் வர முடியாது. எந்த விக்கிரகத்தின் மூலமாயும் எந்த மனிதனும் வர முடியாது. மனிதனால் உண்டாக்கப்பட்ட எந்த வேதசாஸ்திரத்தின் மூலமாயும் யாரும் வரமுடியாது. 'நானே வாசலாக இருக்கிறேன்.' நீங்கள் கிறிஸ்துவின் வழியாக வருவீர்களானால், நீங்கள்... கிறிஸ்துவின் ஜீவனானது கல்வாரியில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவருடைய பக்கவாட்டில் ஒரு தழும்பை திறந்து கொடுத்தது, அதன் வழியாக இரத்தம் சிந்தப்பட்டு, சபைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அது செய்கிற ஒரே காரியம் என்னவெனில், ஒரு இழக்கப்பட்ட பாவியை பரிசுத்தப்படுத்தி, அவன் எந்த தேவனை விட்டு வெளியே வந்தானோ அதே தேவனிடம் அவனைத் திரும்பவும் கொண்டு போய் சேர்க்கிறது. ஆமென். பரிசுத்த ஆவியானது... இயேசு தாமே, 'ஒருவன் ஜலத்தினாலும் ஆவினாலும் பிறவா விட்டால், அவன் ஒரு போதும் என் விருந்திற்கு வர மாட்டான்' என்றார். நீங்கள் ஜலத்தினாலும் ஆவியினாலும் வந்தாக வேண்டும். 34.அங்கே தான் அவர்கள் இருந்தனர். இந்த வஸ்திரம் வரும்போது... இங்கே சில கம்பெனிகள் இங்கே செய்யும் ஏதோவொரு பெரிய வஸ்திரத்தை நான் பொருள் கொள்ள வில்லை. அது மனிதனுடைய வெளிப்புறத்தைப் பார்க்கும் படியாக அவனுக்காக உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கிறிஸ்து உங்களுக்கு கொடுக்கும் வஸ்திரமானது... நீங்கள், 'அது ஒரு வஸ்திரமா?' என்று கேட்கலாம். ஆம். 'என்னுடைய குமாரர்களில் ஒருவன் உமது ஒரு பாரிசத்திலும் மற்றவன்... உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்ய வேண்டும்' என்று கூறிய ஸ்திரீயிடம் இயேசு சொன்னார். அவர் பிரதியத்திரமாக, 'நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் (அல்லது அந்த வஸ்திரத்தைத் தரிக்கவும்) உங்களால் கூடுமா' என்றார். அவர், 'நீங்கள் பெறுவீர்கள்' என்றார். ஆமென். விருந்திற்காக அழைக்கப்பட்ட அந்த விசுவாசிக்குள்ளே கிறிஸ்துவுக்குள்ளே இருந்த அதே பரிசுத்த ஆவியானவர் வருகிறார். அவன் குமாரனாக எண்ணப்படுகிறான், ஏனெனில் அவன் தகப்பனின் ஒரு பாகமாக (ஆமென்.), ஒரு பிள்ளை யாக ஆகிறான். நான் பித்து பிடித்தவன் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் நான் அப்படி இருப்பேனானால், என்னைத் தனியே விட்டு விடுங்கள்; நான் இவ்விதமாக இருப்பதில் சந்தோஷப்படுகிறேன். நான் என்னுடைய சரியான சிந்தையில் இருக்கும்போது, நான் மற்ற விதமாக இருப்பதைக் காட்டிலும், இவ்விதமாக இருப்பதையே சிறந்ததாக உணர்கிறேன். ஓ, அது அற்புதமானது, அது சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்த சந்தோஷமுமாய் உள்ளது. 35.அந்த வஸ்திரமானது ஒரு சிறு மறைவான வல்லமையுடன் உங்களுடைய இருதயத்தில் வரும் போது, நரகத்திலுள்ள எல்லா பிசாசுகளாலும் உன்னை அதை சந்தேகிக்க செய்ய முடியாது. அந்த மறைவான வல்லமை என்பது, உங்களுடைய நெற்றியில் ஒரு மகத்தான பெரிய ஏதோவொன்று வருவதோ, வேதாகமத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவ் விதமாக எழுதினார் என்பதோ அல்ல... அது ஒரு உள்ளான மறைவான வல்லமையாகும். ஆமென். ஏதேன் தோட்டத்திலோ அல்லது தோட்டத்தின் வெளியேயோ முதலாவது ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்ட முதற்கொண்டு, அது தேவனுடைய திட்டமாக இருந்து வந்துள்ளது. அது சரியே. சிம்சோனிடம் அது இருந்தது. அவனிடம் ஒரு மறைவான வல்லமை, பரிசுத்த ஆவியின் ஒரு தொடுதல் இருந்தது. இப்பொழுது, அநேக ஜனங்கள், 'ஒரு களஞ்சியத்தின் கதவு போன்ற தோள்கள் சிம்சோனுக்கு இருந்தது' என்கின்றனர். நல்லது, அது அப்படி இருக்கவில்லை... நல்லது, அவனுடைய படத்தை வரைய முயற்சிக்கும் இங்கேயுள்ள இந்த ஓவியர்களில் சிலர்... களஞ்சியத்தின் கதவு போன்ற தோள்களையுடைய ஒரு மனிதன் ஒரு சிங்கத்தைக் கொல்வதோ அல்லது வாசல் கதவைப் பெயர்த்துக்கொண்டு அங்கிருந்து நடந்து செல்வதோ எனக்கு புதிராக இல்லை. ஆனால் சிம்சோன் அப்படியே ஒரு சிறு அம்மாவின் பையனாக இருந்தான், அதைப்போன்ற சுருள்முடியை கொண்ட தலையை உடைய சிறு குள்ளனாக இருந்தான். இப்பொழுது, அதுதான் ஜனங்களை முட்டாளாக்குகிறது. அவன் ஒரு சிறு பெண் தன்மை கொண்டவன் போல் தோற்றமளித்த, தன்னுடைய முதுகில் ஏழு சுருள் முடிகளைக் கொண்டவனான ஒரு சாதாரண பையனாக இருந்தான். அது சரியே. ஒவ்வொருவரும் அவனைக்குறித்து நகைத்தார்கள், பரிசுத்த ஆவியானவரின் சபைக்கு ஒரு மாதிரி. மேலும் அவன் ஒரு நோஞ்சானாக இருந்தான். ஆனால், சகோதரனே, தேவன் அவனை பயன்படுத்த விரும்பும் வேளை வந்த போது, அவன் மிகவும் வல்லமை வாய்ந்த ஒருவனாக இருந்தான். தேவன் தம்முடைய கரத்தை அதன் மீது வைத்திருக்கக் கூடிய ஒரு சபையை அவர் விரும்புகிறார். அது எவ்வளவு சிறியதாய் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. 'இரண்டு மூன்று பேர் என் நாமத்தினாலே எங்கு கூடியிருக்கிறார்களோ, அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன்,' வெறுமனே அதைப் பற்றி பேசுவதல்ல. பிறகு நீங்கள், 'நல்லது, நாங்கள் அவருடைய நாமத்தில் கூடிவந்திருக்கிறோம்' என்று கூறலாம். வார்த்தையைக் கொண்டு இயேசுவின் நாமத்தினால் பேசுவது அவர் என்னவா யிருக்கிறார் என்பதை அர்த்தப்படுத்துவதல்ல, இúசுவின் நாமத்தைப் பற்றிய சூழ்நிலையில் நீங்கள் கூடியிருப்பதன் உங்களுடைய மனப்பான்மையை அது பொறுத்தது. 'நீங்கள் என் நாமத்தினால் கூடி வரும்போது, நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்.' அது நீங்கள் வந்திருப்பதன் நோக்கமாகும், மனப்பான்மை. ஒரு நாமத்தைச் சொல்லி கூப்பிடுவதற்குப் பதிலாக அது ஒரு மனப்பான்மையாக உள்ளது. பாவிகள் தெருவில் அந்த நாமத்தைக் கூப்பிட்டு, அதைக் குறித்து சபித்தும் மற்ற ஒவ்வொன்றையும் செய்கின்றனர். ஆனால் அது நீங்கள் இருக் கும் சூழ்நிலையும், நீங்கள் இயேசுவின் நாமத்தில் வந்திருப் பதைக் குறித்துள்ள உங்களுடைய மனப்பான்மையுமாக இருக்கிறது. 36.என்னால் சிம்சோனைப் பார்க்க முடிகிறது; பெண் தன்மை கொண்ட அந்த சிறு பையனான அவன் தன்னுடைய பெண் சிநேகிதியைப் பார்க்கும்படிக்கு சென்று கொண்டிருந்தான். அவனுடைய தாயார் அவனுடைய சுருள் முடியை சுருட்டி விட்டாள்; இங்கே அவன் தன்னுடைய சிறு பெண் சிநேகிதியைக் காணச் சென்று கொண்டிருக்கிறான். அப்போது மகத்தான பெரிய சிங்கம் ஒன்று ஓடி வந்து, அவனைப் பார்த்து கர்ஜித்தது. அவனோ உதவியற்றவனாக இருந்தான். மேலும் தேவனுடைய ஆவி அவன் மேல் வந்ததாக வேதாகமம் கூறுகிறது. அவன் அந்த சிங்கத்தைப் பிடித்து, ஒரு ஆட்டுக்குட்டியை கிழிக்கிறது போல இரண்டாகப் பீறிப் போட்டான். தேவனுடைய ஆவி அவன் மேல் வந்த போது அவன் என்ன ஒரு மனிதனாக இருந்தான்! அவனில் ஒரு மறைவான வல்லமை இருந்தது (ஆமென்.) அது அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. நல்லது, அதே தேவனுடைய ஆவி தான் பரிசுத்த ஆவியாக உள்ளது. அது ஒரு மறைவான வல்லமையாக இருந்தது. ஆம். அது ஒரு சிங்கக்குட்டியாக இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோல அவன் அந்த சிங்கத்தைக் கொன்று போட்டான். அவன் எவ்வளவு வல்லமையுள்ளவனாக இருந்தான்! ஏனெனில் அவனில் மறைவான வல்லமை இருந்தது. இப்பொழுது, இந்த மறைவான வல்லமையுள்ள மனிதன்... உங்களால் அவனை அறுவை சிகிச்சை செய்து, அதை கண்டுபிடிக்க இயலாது. மருத்துவர் அவனை துண்டுகளாக வெட்டலாம், ஆனால் அவன் ஒரு சாதாரண மனிதனைப் போல் காணப்பட்டான். அது என்னவென்று அவர்கள் வியந்தார்கள். அது உங்களுடைய காதுகளுக்குப் பின்னால் சுரண்டும் முயலின் கால் என்று சில ஜனங்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அது அதுவல்ல. அது நம்முடைய பிதாவாகிய தேவனால் தெய்வீகக் கிருபையின் மூலமாக கொண்டு வரப்பட்ட பரிசுத்த ஆவியின் வல்லமையாக உள்ளது. அது தனிப்பட்ட நபரை அவருடைய பிரசன்னத்தினால் நிரப்புகிறது. நீங்கள் ஜீவனை - சோவாகிய (Zoe) நித்திய ஜீவனை பெற்றுக்கொள் வீர்கள். தேவனுடைய சொந்த ஜீவனானது உங்களுக்குள் வாசமாய் இருத்தல். ஓ, என்ன ஒரு மறைவான வல்லமை...?... 37.தானியேலிடம் அது இருந்தது. சிங்கங்கள் அவனிடம் ஓடி வந்த போது, அந்த மறைவான வல்லமையானது காணப்பட்டு, சிங்கங்கள் பயமடைந்தன. தானியேலிடம் கொஞ்சம் மறைவான வல்லமை இருந்தது. எபிரேய பிள்ளைகளிடம் அது இருந்தது. அக்கினியானது அவர்களை எரிக்கத் தொடங் கின போது, அது சாதாரண நெருப்பைக் காட்டிலும் வெப்பமாக இருந்தது. எனவே அது அந்த அக்கினியை அணைத்து கயிறுகளை அறுத்துப் போட்டது. மறைவான வல்லமை... பெந்தெகோஸ்தேவுக்குப் பிறகு பேதுரு அதைக் கொண் டிருந்தான். அவன் அலங்கார வாசல் என்னப்பட்ட வாசலண்டை சென்றான். அங்கே தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய் பிறந்த ஒரு மனுஷன் படுத்திருந்தான். பேதுரு அவனை நோக்கி, 'வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை, ஆனால் நீ விசுவாசிப்பாயானால், உன்னிடம் கொடுக்க என்னிடம் கொஞ்சம் மறைவான வல்லமை உள்ளது' என்றான். அவனைக் கையினால் பிடித்து தூக்கி விட்டு, 'இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எழுந்து நட' என்றான். என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவன் மறைவான வல்லமையைக் கொண்டு வந்தான். அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. அவன் கலை மானைப்போல குதித் தெழுந்து கர்த்தரைத் துதித்துக் கொண்டு, துள்ளிக் குதிக்கத் தொடங்கினான். வேத சாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர்கள் வியப்புற்று, 'இப்பொழுது, இவையெல்லாவற்றையும் குறித்து என்ன?' என்றனர். பாருங்கள்? மறைவான வல்லமை... 38.வஸ்திரங்கள் கொடுக்கப்பட்டன. அந்த ராஜா எவ் வாறு வஸ்திரங்களைக் கொடுத்தான்... ஓ, பாவியான நண்பனே, வெதுவெதுப்பான சபை அங்கத்தினனே, இன்று தேவன் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கிறார். இந்த கடைசி அழைப்பு வரக்காரணம் என்னவெனில், வியாதியஸ் தர், உபத்திரவப்படுபவர், குருடர்கள் ஆகியோரைக் கொண்டு வரும்படியான இந்த அழைப்பிற்குப் பிறகு, கர்த்தராகிய இயேசு வருகிறார். இப்பொழுது, போதகர்களே, நீங்கள் ஒரு வேளை அதைக்குறித்து என்னுடன் கருத்து வேற்றுமை கொள்ளலாம், ஆனால் நான் உங்களிடம் ஏதோ ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இயேசு பரிசுத்த மத்தேயு சுவசேஷம் 24-ம் அதிகாரத்தில், 'நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்' என்று கூறியிருக்கிறார். தேவன் யாரும் கெட்டுப்போக சித்தமில்லாமல், எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று நீடிய பொறுமையுள்ளவராய் இருக்கிறார். இன்று தேவன் நீடிய பொறுமையுள்ளவராய் இருக்கிறார். அவர் உபத்திரவப் படுபவர்களை அழைக்கத் தம்முடைய கடைசி அழைப்பைக் கொடுக்கிறார். 39.இப்பொழுது, கவனியுங்கள். அவர்கள் அனைவரும் உள்ளே வந்து, தங்களுடைய வஸ்திரங்களைப் பெற்றுக் கொண்டு, வாசலாகிய கர்த்தராகிய இயேசுவிடம் வரும் போது... நீங்கள், 'நீங்கள் வருவதற்கு அதுதான் வழியா?' என்று கேட்கலாம். ஆம், ஐயா. ஆம், ஐயா, அது மிகவும் சரியே. பெந்தெகோஸ்தே நாளில் பேதுரு அந்த வழியை அறிமுகப்படுத்தினான். பரிசுத்த ஆவி விழுந்த போது, வேத சாஸ்திர வல்லுநர்கள் எல்லாரும் அதை பரிகாசம் செய்து, 'நல்லது, ஆ, இந்த ஒரு கூட்ட மதவெறி கொண்டவர்களைப் பாருங்கள், அவர்கள் எல்லாரும் குடித்தவர்களைப் போல நடந்து கொள்கின்றனர்' என்றார்கள். என் அருமை சகோதரியே, கன்னி மரியாளும் அதே விதமாக அங்கே இருக்க வேண்டியிருந்தது என்பதை ஞாபகம் கொள். அவள் அந்த மதவெறித்தனத்தைப் பெற்றுக் கொள்ளாமல் அதற்குப் புறம்பாக இருக்கும்படி அவளை அனுமதிக் காமல் இருந்திருப்பாரானால், அவள் செய்ததைக் காட்டிலும் குறைவான ஒன்றை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே குடித்திருந்தவர்கள் போலிருந்த மற்றவர்களைப் போல அவளும் நடந்து கொண்டாள். ஆமென். பெந்தெகோஸ்தே ஜனங்களாகிய உங்களுடைய காரியம் என்ன? பெந்தெகோஸ்தேயினரும் மற்றவர்களைப் போல அந்த பழைமையான சலிப்பூட்டும் ஜீவியத்தைப் பெற்றிருக்கி றார்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் உங்களையே ஸ்தாபித்துக் கொண்டு, எல்லைக் கோட்டையும் தடை வேலியையும் மற்றும் ஒவ்வொன்றையும் வரைந்து கொண்டீர்கள்; அது தான் உங்களுக்கு சம்பவித்துள்ளது. அது சரியே. பிரிவினை சுவர்களை இடித்தெறியுங்கள். அந்த பழைமையான பேய்த்தனத்துக்கடுத்த காரியங்களை உங்களை விட்டு விலக்குங்கள். தேவனிடம் திறந்த மனதோடு இருங்கள். ஜெபக் கூட்டங்களை நடத்துங்கள். 40.இந்தப் பிற்பகல் வேளையில், ஒருவர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதை யாரையும் புண்படுத்துவதற்காகவோ, அல்லது வேடிக்கைக்காகவோ இதைக் கூற விழையவில்லை. கடந்த இரவில், செய்திக்குப்பிறகு ஒரு ஏழை சகோதரி அவரிடம் வந்து, 'அது உங்களுக்குத் தெரியுமா? என்னுடைய முகத்தின் மேலுள்ள முகப்பருக்களை மறைக்கும் படியாக நான் நீண்ட காலமாக பான்கேக் ஒப்பனையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்' என்றாள். ஆனால், 'அந்த பிரசங்கியார் கடந்த இரவில் அப்பிரசங்கத்தை செய்து முடித்த போது, நான் சென்று என்னுடைய முகத்தைக் கழுவினேன்' என்றாள். அது சரியே. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர் வதிப்பாராக. நீங்கள் தேவனுடைய இராஜ்யத்திற்குத் துரமானவர்களல்ல. ஆம், சகோதரனே, பழைமையான வெட்டிச் சரிப்படுத்தும் ஒழுங்கு முறைக்குத் திரும்பி வாருங்கள். 'ஓ, இது யாரென்று உங்களுக்குத் தெரியுமா? இது தான் அந்த மூலையில் வசிக்கும் திரு. ஜோன்ஸ். ஓ, அவர் பகட்டானவர்... அவர் ஒரு காடிலாக் காரை ஓட்டுகிறவர். நல்லது, நம்மால் முடியாது... என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவரை சபையில் சேர்த்துக்கொள்ளாமல் இருக்க நம்மால் முடியாது. ஏனெனில் அவர் தான் கட்டிடத்தில் வண்ண மடிக்கப்பட்ட ஜன்னல்களை வைத்தவர். நாம் அவரை சபையில் சேர்த்துக்கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம்' என்று கூறும் சபை அங்கத்தினர்களை நீங்கள் உள்ளே வர அனுமதிக்கிறீர்கள். சகோதர்களே, அங்கு தான் நீங்கள் பல வீனமாய் இருக்கிறீர்கள். மற்றவர்களைப் போலவே அவரும் கிரயத்தைச் செலுத்த வேண்டியவராய் இருக்கிறார். சமீபத்தில் ஒரு - ஒரு சபையில் சேர்ந்து கொண்ட ஒரு அங்கத்தினரை எனக்குத் தெரியும். அவர் வெளிப்படையாக சபைக்கு வருவதற்கோ, கிறிஸ்துவை அறிக்கை செய்வதற்கோ விருப்பமில்லாத அளவுக்கு மிகவும் உலகப்பிரகாரமாக இருந்தார். போதகர் அந்த முகப்பு அறையில் அவரைத் திரும்பவும் அழைத்து, சபையில் அவரைச் சேர்த்துக் கொண்டார். அவர் மெல்ல காலெடுத்து வைத்து உள்ளே வந்து, அவரைக் கதவுக்கு வெளியே அழைத்துச் சென்றிருப்பார் அல்லது பிரசங்க பீடத்துக்கு. அப்படித்தான் அவர் செய்திருக்க வேண் டும். அது தான் சரி. 41.ஓ, சகோதரனே, ஒரு போதகர் பலவீனமாக இருக்கும் போது, சாப்பாட்டுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்னும் உள்நோக்கம் கொண்டிருப்பார்... நீங்கள் செய்கிற உங்களுடைய சிறிய பழைய பெண்தன்மையான வழிகளுக்கு ஏற்ற பலனை தேவன் உங்களுக்கு அளிக்கப் போகிறார் என்று அறிந்து கொள்ளும்படியாக உங்களுடைய எண்ணத்தில் சிலுவையையும், கிறிஸ்துவையும் கொண்டிருக்க வேண்டும். தேவன் மனிதர்களை விரும்புகிறார். அது சரியே. ஒரு மனிதனுடைய தோள் எவ்வளவு பெரியதாக உள்ளது என்பதைப் பொறுத்து அம்மனிதன் மதிப்பிடப்படுவதில்லை, அல்லது... மனிதன் குணாதிசயத்தைக் (character) கொண்டு மதிப்பிடப்படுகிறான். நிச்சயமாக. பெரிய மனிதன் காட்டு மிராண்டித் தனமுள்ளவனாக இருக்கிறான். 200 பவுண்டு எடையுள்ளவர் களாய் இருந்தும் ஒரு சிறிய அளவு கூட மனிதத் தன்மை இல்லாத மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் மனிதன் அவனுடைய நற்குணங்களால் மதிப்பிடப்படுகிறான். அதே விதமாக ஸ்திரீயும் தன்னுடைய நற்குணத்தினால் மதிப்பிடப்படுகிறாள். நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக இருந்தால், எம்மாதிரியான நற்பண்புகளை நாம் கொண்டிருக்க வேண்டியவர்க ளாயிருக்கிறோம்? இப்பொழுது, இங்கே தான் காரியம் உள்ளது. பெந்தெகோஸ்தே நாளில் பேதுரு சொன்னான்... இவர்கள், 'நல்லது, நாம் எவ்வாறு இந்த விருந்தில் கலந்து கொள்வது?' என்று கேட்டனர். பேதுரு அவர்களை நோக்கி, 'நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்புங்கள்' என்றான், மேலே நடந்து வந்து, போதகருடன் கரங்களைக் குலுக்குவதல்ல, மேலே சென்று முதலா வது இராப்போஜனத்தை எடுப்பதல்ல. இல்லை, ஐயா. அந்த விதமான காரியங்கள் வேதாகமத்தில் எழுதப்படவில்லை. நீங்கள் அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தை இவ்வாறு வாசிப்பதாக கற்பனை செய்து பார்க்கக் கூடுமா? 'பெந்தெகோஸ்தே நாள் வந்த போது, அவர்கள் எல்லாரும் ஒருமனப்பட்டு ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று டாக்டர் பிஷப் அவர்கள் நடந்து வந்து, 'இப்பொழுது, நாம் இந்த மனிதனுக்கு ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுத்து,... சபையில் சேர்த்துக் கொள்வோம்' என்று கூறினார்.' உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? 'பெந்தெகோஸ்தே நாள் வந்தபோது (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.)' அதுதான் பிராட்டஸ்டன்ட் வழியாயிருக்கிறது. கத்தோலிக்க வழி என்னவென்றால்... 'பெந்தெகோஸ்தே நாள் வந்த போது, குருவானவர் வெளியே வந்தார், பாவியானவன் பீடத்துக்கு வந்து, அந்தச் சிறிய வட்டமான அப்பத்தை (wafer) தன்னுடைய நாவால் நக்க, குருவானவர் திராட்சரசத்தைக் குடித்தார் என் பதை அவர்கள் கொண்டுள்ளனர்,' கத்தோலிக்கர்களின் பரிசுத்த இராப்போஜன அப்பம் (Holy Eucharist), வேறு வார்த்தைகளில் சொன்னால் பரிசுத்த ஆவி. நான் அதை சரியாக உச்சரிக்கவில்லை. ஆனால் வேதாகமம், 'பெந்தெகோஸ்தே நாள் வந்திருந்த போது' என்று கூறுகிறது, அவர்கள் ஒருபோதும் பாதையிலோ அல்லது திரையை விட்டு வெளியேயோ வரவேயில்லை, 'அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று' என்று வேதாகமம் கூறுகிறது. அந்த அக்கினியானது நாவுகளைப்போல நக்க தொடங்கின போது, அது மிகவும் உஷ்ணமாய் இருந்தது. அக்காரியங்களை தூக்கி எறிய அது தான் வழி யாகும். 42.சகோதரன் உட்டும் பில்லியும் நானும் இன்று ஒரு ஏரிக்கு நடந்து சென்றோம். அந்த பழைய ஏரி உண்மையிலேயே கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஓ, என்னே. நான் உங்களிடம் சொல்லுகிறேன்; வெண்தொப்பி போன்று தண்ணீர் கொந்தளித்துக் கொண்டிருந்தது. நான் தண்ணீரை நேசிக்கிறேன்: எந்த நல்ல பாப்டிஸ்டும் அதை நேசிப்பான். எனவே, ஓ, அந்த தண்ணீர் எப்படியாக கொப்பளித்துக் கொண்டிருந்தது! நான் அதை நோக்கிப் பார்த்து, சகோ. உட்டிடம், 'அந்த காரியம் கொந்தளிப்பாய் உள்ளதா என்று சொல்லுங்கள்?' என்றேன். நான், 'அது ஒரு எழுப்புதலைப் பெற்றுள்ளது' என்றேன். அவர், 'என்ன?' என்றார். அவர் என்னை நோக்கிப் பார்த்து, 'இப்பொழுது, நீங்கள் ஒரு சீசாக்கராக (Cheechaker) இருக்கிறீர்கள் என்று நான் அறிவேன்' என்றார். ஒரு சீசாக்கர் என்பது, அலாஸ்காவிலுள்ள அனுபவமற்ற வாலிபர்களுக்காக கொடுக்கப்படும் இந்திய பெயராகும். மேலும் அவர் சொன்னார்... நானோ அவரிடம், 'நிச்சயமாக அது ஒரு எழுப்புதலைப் பெற்றுள்ளது. அது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறதென்று நீங்கள் காணவில்லையா? அது கரங்களைத் தட்டி, துள்ளிக் குதிக்கிறது' என்றேன். பாருங்கள்? ஆனால் நான், 'சகோதரன் உட், அது பூரண அமைதலாக இருப்பதைக் காட்டிலும் அதில் இனிமேல் தண்ணீரே இல்லாமல் இருக்கட்டும்' என்றேன். அது சரியே. நல்லது, அப்படியானால் உங்களுக்கு ஒரு எழுப்புதல் ஏன் அவசியமாயுள்ளது என்று நீங்கள் வியக்கலாம். அந்த கொந்தளிப்பான தண்ணீரை எது கொந்தளிப்பாக இருக்கச் செய் கிறது? காற்று அடித்துக்கொண்டிருந்தது. (சகோதரன் பிரன்ஹாம், வாயினால் ஊதிக்காட்டுகிறார் - ஆசி.) அதுவே ஒரு எழுப்புதலை உண்டாக்குகிறது. பரிசுத்த ஆவியானது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வரும் போது, அதுதான் ஒரு எழுப்புதலைக் கொண்டு வருகிறது. அந்த எழுப்புதலானது அந்த ஏரிக்கு என்ன செய்தது? ஏரியில் இருந்த ஒவ்வொரு சிறு குப்பைகளையும் கரைக்கு கொண்டு வந்து ஏரியை சுத்தப்படுத்தியது. சில உலகப்பிரகாரமான குப்பைகளை பரிசுத்த ஆவியின் சபையிலிருந்து கழுவ நமக்கு ஒரு எழுப்புதல் தேவைப் படுகிறது. பரத்திலிருந்து வரும் ஒரு பலத்த காற்று அடிக்கிற முழக்கமே நமக்குத் தேவைப்படுகிறது. சில உலகப்பிரகார மான ஸ்தாபனங்கள் உள்ளே கொண்டு வந்த குப்பைகளை நீக்கி சுத்திகரிக்க. வியூ! என்னே, நான் ஒரு வேளை அதை சொல்ல வேண்டியதாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் இன்னுமாக அது - தேவனுடைய வார்த்தை - சத்தியமென்று சொல்லுகிறேன். ஒரு எழுப்புதலைக் கொண்டிருங்கள்; மீண்டும் துள்ளிக் குதித்து சுழன்று அடிக்கும் அலையை பெற்றவர்களாய் இருங்கள். பெந்தெகோஸ்தே சபையிடம் உள்ள இந்த எல்லா மாக்ஸ் ஃபேக்டர் அழகு சாதனங்களும் வெளியே போவதை நீங்கள் காண்பீர்கள். 43.உங்களில் சில மனிதர்கள், கோழியின் மார்பெலும்பை உங்களை விட்டு நீக்கி விட்டு, உங்களில் உண்மையாகவே முதுகெலும்பை பெற்று, உங்களுடைய மனைவிகளை சரிப்படுத்துங்கள். தெருவில் இறங்கி ஓடும் மகளுக்கு ஒரு அறை கொடு. உங்களுடைய சிறு வயது மகள் தெருவில் ஓடி, ஏதோவொரு மனிதன் அவளிடம் தவறாக நடந்து கொண்டால், நீங்கள் திரும்பிச் சென்று, அம்மனிதனைக் கைது செய்யும்படி நீங்கள் விரும்புவீர்கள். நீங்கள் கண்டிக்க வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். சகோதரர்களே, நீங்கள் மனிதனாக இருக்கிறீர்கள். அது சரியே. நீங்கள் அப்படிப்பட்ட ஒருவராகத் தான் இருக்கிறீர்கள். நீங்கள் வீட்டை ஆளுகை செய்பவர்களாக இருக்க வேண்டும். அந்தப் பெண் அவ்வாறு செய்ய அனுமதித்த காரணத்திற்காக தேவன் உங்களைப் பொறுப்பாளியாக்குவார்: அவள் தன்னுடைய தலை மயிரெல்லாம் அலங்கோலமாகவும், ஒரு சிகரெட்டுடனும், தன்னுடைய முகமெல்லாம் சாயம் பூசினவளாயும் இரவில் வீட்டிற்கு வருவதை நீங்கள் அனு மதிக்கும் காரணத்தால். எனக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், சகோதரனே, ஒரு காரியம் என்னவெனில், என்னுடைய ஜீவன் இருக்கும் வரை, துப்பாக்கி குழாயிலுள்ள நீண்ட மரக்கம்பு (barrel slat) அருகிலேயே வைக்கப்பட்டிருக்கும், நான் என்னுடைய கடமையைச் செய்வேன். ஆம், ஐயா. ஆம், ஐயா. அவர்கள் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். 44.சகோதரனே, கென்டக்கியின் கல்வியறிவில்லாத நிலையைக் குறித்துப் பேசுகிறீர்கள். நீங்கள் அவர்களுடைய மேலான நிலைக்கு வருவதற்கு உங்களுக்கு அதிக காலம் ஆகும். அது சரியே. பெண்களாகிய அவர்களில் ஒருவர் இவ்விதமாக வரட்டும், அந்த சிறிய வயதான தாயார் அந்தச்சிறிய பழமையான தொப்பியோடு (sunbonnet) எவ்விதம் நடந்து கொள்வாள் என்பதைக் கவனியுங்கள். அவள், 'சகோ தரனே, ஒரு மரக்கிளையை இங்கே கொண்டு வாருங்கள்' என்பாள். அவள் மூன்று அல்லது நான்கு நாட்கள் வீட்டை விட்டு வெளியே போகவே மாட்டாள் என்று கூறுகிறேன், ஏனெனில் அவளால் அது முடியாது. அது சரியே. அப்படியிருக்க நீங்கள், 'அவள் பித்துபிடித்தவள்' என்று சொல்லுகிறீர்கள். எலியா தான் சாப்பிட ஏதோவொன்றைக் கொண்டு வரும் காகங்கள் என்று அழைக்கப்படும் சில சுமை தூக்கிகளுடனும், அவன் விரும்பிய எல்லா நேரமும் குடிப்பதற்காக நல்லதொரு (கேரித்) ஆற்றையும் உடையவனாக அவன் அங்கே மேலே உட்கார்ந்திருப்பதைக் குறித்தும் அவர்கள் அதே விதமாகத்தான் கூறினர். அவர்களோ அங்கே கீழே, வேதனையோடு தங்களுடைய நாவுகளையே கடித்தவர்களாக சாப்பிட எதுவும் இல்லாமல் பட்டினியால் மரித்துக்கொண்டிருந்தனர். அவனோ நல்லவிதமாக நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தான். சத்தமிட்டு கர்த்தரைத் துதித்து நல்ல தருணத்தை கொண் டிருந்து, ஒரு பரிசுத்தமான ஜீவியத்தை ஜீவிக்கும் இந்த ஜனங்களுக்காக பரிதாபம் கொள்ள வேண்டாம். அவர்களுக்காக பரிதாபமான உணர்ச்சி கொள்ள வேண்டாம். அவர்கள் உங்களுக்காக பரிதாபம் கொள்வார்கள். அது அவ்வாறு தான் உள்ளது. பரிதாபப்படுவதற்காக அவசியமான ஒருவர் நீங்கள் தான். 45.இப்பொழுது, பேதுரு சொன்னான்... அவன், 'இப்பொழுது, நாங்கள் இதைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டான். அவனோ, 'மனந்திரும்புங்கள்' என்றான். மனந்திரும்புதல் என்றால் என்ன? அதற்கு திரும்பி வருதல் என்று அர்த்தம். உலகத்துடன் சென்று கொண்டிருந்த நீங்கள், திரும்பி தேவனை நோக்கி வர வேண்டும். இப்பொழுது, நீங்கள் இவ்விதமாக நோக்கிப் பார்க்கிறீர்கள்; இவ்விதமாக மேலே நோக்கிப்பார்த்தல். 'மனந்திரும்புங்கள்.' 'நல்லது, தேவன் ஆசீர்வதிக்கப்படுவாராக, நான் 40 வருடங்களாக சபையில் இருக்கிறேன்' என்றவிதமாய் ஒரு பெரிய நீளமான முகத்தோடு ஓடிக்கொண்டிருக்கும் நீங்கள் மனந்திரும்பி, 'அல்லேலூயா, அங்கே அது உள்ளது' என்று கூறி இவ்விதமாக மேலே நோக்கிப் பார்க்கிறீர்கள். அதைத்தான் நீங்கள் செய்ய ஆவல்கொள்ள வேண்டும். திரும்பி வந்து, வித்தியாசமாக நோக்கிப் பாருங்கள். அதைத் தான் நீங்கள் செய்ய வேண்டும். 'நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி,' தெளிப்பதல்ல, அப்படிப்பட்ட காரியம் வேதாகமத்தில் கிடையாது. அது நீங்கள் குவித்து வைத்திருக்கும் கோட்பாடுகளில் ஏதோவொன்றாக உள்ளது. சீர்திருத்தத்துக்கு முன்பு. வேதாகமம் அதைப் போதிப்பதில்லை. 'நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி, பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது ஒரு வஸ்திரத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். (ஆமென்.) வாக்குத் தத்தமானது உங்களுக்காகவே உள்ளது' என்றான். இந்த வஸ்திரங்கள் எவ்வளவு காலம் கொடுக்கப்படப் போகிறது? கலியாண விருந்து நடக்கும் காலம் வரையில். அது சரியே. ஓ, முதலாவது காலத்திற்கா? இல்லை, அது வரையில்... 'வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் (என்ன?), பிதாவானவர் அழைப்பைக் கொடுக்கும் யாவருக்கும் கூட உண்டாயிருக்கிறது.' அது சரியா? 'நம்முடைய தேவனாகிய கர்த்தர் அழைக்கிற யாவருக்கும் உண்டாயிருக்கிறது,' அது வேதவாக்கியமா? நல்லது, தேவன் இன்னும் அழைப்பைக் கொடுப்பாரானால், அவர் இன்னும் வஸ்திரங்களையும் உடையவராய் இருக்கிறார். மகிமை. நான் இன்றிரவு அதற்காக மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன், நீங்களும் அவ்வாறில்லையா? எப்படி? மனந்திரும்புங்கள், உங்களுடைய வாழ்க்கையின் பாதையை மாற்றுங்கள். தேவன் உங்களுடைய இருதயத்தைத் தட்டியிருந்தால், திரும்பி வந்து, மனந்திரும்பி, 'ஆம், கர்த்தாவே' என்று கூறுங்கள். இனிமேலும் சபையை நோக்கிக் கொண்டிருக்க வேண்டாம். இனிமேலும் ஜனங்களை நோக்கிக் கொண்டிருக்க வேண்டாம். அவரை நோக்கிப் பாருங்கள். மனந்திரும்புங்கள்; இவ்விதமாக நோக்கிப் பாருங்கள். 'அதன் பிறகு, உங்கள் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்' என்று அவன் சொன்னான். அவ்விதம் தான் வேதாகமம் கூறுகிறது. '(மேற்கோள் வசனம்) வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது.' கலியாண விருந்து அருகாமையில் உள்ளது; தேவன் இன்னும் அழைப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அது இன்னும் உள்ளது, இயேசுவே வாசலாக இருக்கிறார். 'நானே வாசல்.' அவர் இன்னும் அங்கே நின்று கொண்டிருக்கிறார், அவருடைய அழைப்பினால் வரும் ஒவ்வொருவருக்கும் அவர் ஒரு வஸ்திரத்தைக் கொடுக்கிறார். ஆச்சரியமான காரியம். 46.சமீபத்தில், சகோதரன் பிறைஸ் அப்போது தான் சியாமி லிருந்து திரும்பி வந்திருந்தார். சகோதரன் டாமி இங்கிருப் பாரானால், அவர் அங்கே பின்னால் இருப்பதை நான் பார்க்கவில்லை, ஆனால் அவர் இங்கு எங்கோ இருக்கிறார் என நான் யூகிக்கிறேன். அவர் அவருடன் இருந்தார். மேலும் சகோதரன் பிறைஸ் கிறிஸ்தவ வியாபார புருஷர்களின் கன்வென்ஷனில் கூட்டத்தினர் முன்பாக என்னிடம், 'சகோ தரன் பிரன்ஹாம்' என்றார். அல்லது சரியாக சொன்னால், கூட்டத்தினரிடமாக, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். அவர், 'இந்த ஜனங்கள் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாதவர்களாய் உள்ளனர். அவர்கள் தங்களுடைய ஜீவியத்தில் செய்தித்தாளைக் ஒருபோதும் கண்டதே கிடையாது. ஒரு ஐசன் ஹோவரையோ, அல்லது மக்ஆர்தரையோ அல்லது மற்ற எவரையுமோ அவர்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் திரையுள்ள கதவை அதிகமாக ஒருபோதும் கண்டதே கிடையாது. ஆனால் முழுமையாக அஞ்ஞானிகளாக இருக்கும் அந்த ஜனங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட போது, அவர்கள் சிகாகோவிலுள்ள ஜனங்கள் செய்கிற அதே விதமாகவே நடந்து கொண்டனர், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்ற போது' என்றார். இங்கே கொடுக்கப்பட்ட அதே வஸ்திரம் அங்கேயும் கொடுக்கப்பட்டது. 'நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் துரத்திலுள்ள யாவருக்கும்.' அல்லேலூயா. ஓ, சகோதரர்களே, உங்களுடைய, நான் என்னும் அகந்தையை குலைத்துப் போடுங்கள். அந்த சபை உபதேசத்தை உங்களை விட்டுத் தூர அகற்றிப் போடுங்கள். தேவனிடம் திரும்பி வாருங்கள். இன்றிரவு சபைக்கு அதுதான் தேவையாயுள்ளது. 47.விருந்திற்கான அழைப்பு சென்று கொண்டிருக்கிறது. வஸ்திரங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடைசி நாட்களில் தேவன் புறஜாதியிலிருந்து தமது நாமத்திற்கென ஒரு ஜனத்தைத் தெரிந்து கொண்டு, முடமாயும் குருடராயும் சப்பாணிகளாயும் கைகால் சூம்பிப்போனவர்களாயும் இருக்கிற அவர்களை சுகமளிக்கும் கூட்டங்களுக்குக் கொண்டு வரு கிறார். இந்தக் கடினமான மேட்டிமையான மக்கள் கூட்டங்களுக்கு வருவது கூட இல்லை. அவர்கள் நன்றாக இருப்பதாக எண்ணிக் கொள்கிறார்கள். எனவேதான் இயேசு, 'அவர்கள் என்னுடைய விருந்தை ருசிபார்ப்பதில்லை' என்றார். அல்லேலூயா. 'கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்.' அது கன்மலையின் தேனைப் போல ருசியாயிருக்கும். ஆமென். ஓ, அது எவ்வளவு நல்லதாக உள்ளது. ஜனங்கள் எல்லாரும் எங்கேயோவுள்ள ஒரு ஜெபக்கூட்டத்தின் இடத்தை அடைத்துக்கொண்டு, பிள்ளைகள் கூட தங்களுடைய நாவை நக்கினவர்களாய், மிகவும் நன்றாக ஆவிக்குரிய விதமாக பேசுகிறார்கள். அப்படிப்பட்ட சபையில் நான் அதைப் பார்த்திருக்கிறேன். அது அற்புதமானது. நிச்சய மாக, அது தேனாக உள்ளது. 48.ஒருமுறை நான் பயணித்த அந்த சிறு மீன்பிடிக்கும் பயணத்தை எனக்கு நினைவுபடுத்துகிறது... நான் மீன்பிடிப்பதை நேசிக்கிறேன். வெள்ளை நிற வால்களையுடைய மான்கள் வாழுமிடமான வடக்கு மெயின் அல்லது நியூ ஹாம்ஷயரில் நான் இருந்தேன். நன்னீர் மீன் வகைகள் உள்ள அநேக ஓடைகள் அங்கு உள்ளன. நான் மூன்று நாட்களாக என்னுடைய முதுகில் மூட்டை முடிச்சுகளை கட்டியிருந்தேன். என்னிடம் ஒரு சிறிய பழைய துருப்பிடித்த .22 துப்பாக்கி இருந்தது. அது அங்கே வைக்கப்பட்டிருந்தது, ஆனால் நானோ மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அதிகாலையில், நான் சில அருமையான மீன்களைக் கண்டிருந்த இடத்தில் என்னுடைய கூர்மையாக வெட்டப்பட்ட கம்புகளை மீன் இருக்கும் ஒரு அருமையான குட்டையில் எறிந்து மீன்களைப் பிடிக்கும்படி சில கம்புகளை வெட்டுவதற்காக என்னுடைய சிறிய கூடாரத்தை விட்டு நடந்து வெளியே சென்றேன். நான், 'பகல் உணவுக்காக சில மீன்களை பிடிக்கலாம்' என்று எண்ணினேன். எனவே நான் அதிகாலையில் சென்று சில மரக்கொப்பு களை வெட்டிக்கொண்டிருந்தேன்; நான் இந்த மீன்களைக் கவனித்து, அந்த தூண்டிலில் போட்ட புழுக்களைக் கவனித்து, மீன்களையும் மற்றவைகளையும் பிடித்துக் கொண்டு, மதியீன மான இந்தக் காரியத்தைச் செய்து கொண்டிருந்தேன். நான் என்னுடைய கூடாரத்திற்குத் திரும்பிச் சென்று, ஒருவேளை காலை உணவை சாப்பிடுவது நல்லது என்று எண்ணினேன். 49.எனவே நான் கூடாரத்திற்குத் திரும்பி வந்த போது, அங்கே ஒரு தாய் கரடியும் இரண்டு கரடிக்குட்டிகளும் இருந்தன. அவைகள் வேண்டுமென்றே அந்த காரியங்களை துண்டு துண்டாக கிழித்து எறிந்திருந்தன. அங்கே அவைகள் இருந்தன. ஒரு கரடி, அவன் அதை சாப்பிடுவதில்லை; அவன் துண்டு துண்டாகக் கிழித்தெறிந்து விடுகிறான். அவன் அப்படியே அடுப்பின் ஊதுகுழலை எடுத்து, அதன் சட சட என்ற ஒலியைக் கேட்கும்படியாக அதன் மேல் துள்ளிக்குதிக்கிறான். மேலும் அவன் அப்படியே குறும்புத்தனமாக இருக்கிறான். இந்த சிறு கரடிக் குட்டிகள் பிப்ரவரி மாதத்தில் பிறக்கின்றன; தாய்க்கு அதைக்குறித்து எதுவும் தெரியாது. ஒரு எலி பிறக்கும்போது இருப்பதைப் போல அவைகள் சிறிய குட்டிகளாக இருக்கின்றன. தாய்க் கரடியானது ஆழ்ந்த தூக்கத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் அவள் சுமார் மே மாத நடுப்பகுதி யில் பனி உருகும் போது - அதுவரை வரை அந்த குட்டிகளுக்கு பாலைச் சுரக்கப்பண்ணுகிறாள். அப்போது தாயானது அவனைப் பார்க்கும் போது, அந்த கரடியானது அழகான நல்ல பருமன் கொண்டவைகளாக இருக்கின்றன. அவன் வெளியே போகிறான். பிறகு வருடத்தின் இந்த வேளையில், இதைப்போன்று ஏறத்தாழ ஜூன் மாதத்தில், அவைகள் அழகான நல்ல பருமனுள்ள கரடிகளாக இருக்கின்றன. சற்றே இந்த அளவு உயரத்தில் நான்கு கால்களில் நிற்கின்றன... 50.எனவே நான் அதைக் காண நேர்ந்தது, நான் மேலே வந்த போது, வயதான தாய்க் கரடி என்னை அடையாளம் கண்டு கொண்டது, எனவே அவள் தன்னுடைய குட்டிகளிடம் ஒலி எழுப்பி, அவைகளில் ஒன்றின் காதை தன்னுடைய கையால் தட்டி அங்கிருந்து ஓடியது. அவள் அங்கிருந்து ஓடினாள், ஒரு குட்டியும் அவளைப் பின்தொடர்ந்து சென்றது, மற்ற குட்டியோ போகவில்லை. எனவே அவள் - அவள் ஒலியெழுப்பினாள்... நீங்கள் அதை அறிந்திருக்க வேண்டும்; அவைகள் ஒரு சிறு பாடும் பறவையைப் போல ஒலி யெழுப்புகின்றன. நீங்கள் ஒரு கரடியின் சத்தத்தைக் கேட்பீர்களானால், ஜனங்கள், அவன் செய்கிறான் என்று கூறுவதைக் காட்டிலும் அவைகள் மோசமாக நடந்து கொள்வதில்லை. அவன் ஒரு சிறு சத்தத்தை எழுப்பி, மற்றொரு குட்டியை அழைக்க விரும்பினான். நல்லது, இந்த சிறு வயதான குட்டி தன்னுடைய முதுகைத் திருப்பிய வண்ணமாக உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். நான், 'அவனைக் குறித்த காரியம் என்ன?' என்றேன். நல்லது, அவள் திரும்பி வந்ததைப் போன்று நடந்து கொண்டாள். நல்லது, என்னை விடவும் நன்றாக அவளால் தாவியேற முடியும். எனவே நான் - நான் விரும்பவில்லை - நான் அவளைக் கொன்று அக்குட்டிகளை அநாதையாக காட்டில் போக விட விரும்பவில்லை (நான் என்னுடைய கரத்தில் ஒரு கைக்கோடரியை வைத்திருந்தேன்). எனவே நான், 'இங்கிருந்து போய் விடு, பயலே. நீ அங்கே உன் அம்மாவிடம் போய்விடு' என்று எண்ணினேன். ஆனால் அவன் போகவில்லை. அவன் அப்படியே அங்கேயே உட் கார்ந்து கொண்டிருந்தான். எனவே அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரியவில்லை. அந்த தாய் கரடி பலதடவை ஒலியெழுப்பி கூப்பிட்டு விட்டு, திரும்பி, இந்த மற்ற குட்டிகளிடம் ஓடியது. அவள் முழு மூச்சோடு அதைச் செய்வதைக் கண்டேன். 51.எனவே நான், 'நான் இங்கே ஒரு மனிதனாக நின்றிருந்த போதும் கூட, இந்த கோடரி - வெட்டுவதற்கு உதவும் சிறு கோடரி - என்னுடைய கரத்தில் இருந்த போதி லும் கூட, அந்த சிறு பையனுடைய கவனத்தை கவரும் படியாக அவனுடைய விருப்பத்தை தூண்டுவது எது என் பதைக் காணப் போகிறேன்' என்று எண்ணினேன். மேலும் நான், 'அவன் ஏன் ஓடிப்போகவில்லை என்று வியப்பாக இருக்கிறதே' என்றேன். வழக்கமாக ஒரு கரடியானது அப்படியே பறந்து போய்விடும். ஆனால் நான் திகைப்போடு நடந்து ஒரு பக்கத்துக்கு வந்தேன், அது நான் எப்போதும் கண்டதிலேயே அழகான காரியமாக இருந்தது. நான் - நான் பணியாரங்களையும் வெல்லப்பாகையும் (molasses) விரும்புகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். அது உங்களுக்கு விருப்பமா என்பது எனக்குத் தெரியாது... என்னுடைய பணியாரங்களின் மேல் நிறைய வெல்லப்பாகை ஊற்றுவதை நான் விரும்புகிறேன். மேலும் நான் ஒரு பாப்டிஸ்டாக இருக்கிறேன், நீங்கள் அறிவீர்கள், தெளிப்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது; நான் உண்மையிலேயே அதன் மீது அதிக அளவு ஊற்றுகிறேன். எனவே நான் ஒரு பெரிய பக்கெட்டில் வெல்லப்பாகை எடுத்துச் செல்கிறேன். இந்த வயதான கரடியானது அங்கே உள்ளே வந்து, வெல்லப்பாகு வைத்திருந்த என்னுடைய வாளியை எடுத்துக் கொண்டது. அவன் அந்த மூடியை அதை விட்டு எடுத்துப் போட்டு விட்டான்; அவன் இவ்விதமாக உட்கார்ந்தவாறு, தன்னுடைய கரங்களால் இறுகப் பிடித்துக் கொண்டு, அவனுடைய சிறிய காலை உள்ளே விட்டு தோய்த்துக்கொண்டு, அதை நக்கிக் கொண்டிருந்தான். அதுதான் அது. நல்லது, நான், 'அங்கிருந்து போய்விடு' என்றேன். அவன் சுற்றும் முற்றும் பார்த்த போது, அவனால் என்னைப் பார்க்க முடியவில்லை; அவனுடைய கண்கள் முழுவதும் வெல்லப்பாகு ஒட்டிக் கொண்டிருந்தது; அவன் இவ்விதமாக என்னை உற்று நோக்கி விட்டு, திரும்பிப் பார்த்தவாறு, அந்த வாளியின் உட்புறத்தை சுத்தம் செய்யும் மட்டுமாக மீண்டும் அவனுடைய சிறு காலை நக்கத் தொடங்கினான். நான், 'சகோதரனே, அது நாம் கொண்டிருக்கிற பழைமை கால ஒரு பெந்தெகோஸ்தே கூட்டமாக இல்லாமல் இருந்தால், நான் அப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதே இல்லை' என்று எண்ணினேன். தேன் வாளியைத் தன்னுடைய கரத்தில் பிடித்தவாறு இவ்விதமாக அவனுடைய தோளில் கொண்டு வந்து, ஒரு கண்டனமும் இன்றி, எந்த பயமுமில்லாமல், எதுவும் இல்லாமல் அப்படியே அதை நக்கிக்கொண்டு சென்றான். அவன் செய்கிற ஒரே காரியம் என்னவெனில் நக்குவது தான். ஓ, அது கன்மலையின் தேனைப் போல ருசியாயுள்ளது. ஆனால், வினோதமான காரியம் என்னவெனில், அவன் கடைசியாக வாளி முழுவதும் நக்கித் துடைத்த போது, அவனுடைய தாய் இருந்த இடத்திற்கு அவன் போனான். அவனுடைய சிறு சகோதரனும் அவனுடைய தாயும் அவன் மேல் சிந்தியிருந்த கொஞ்ச தேனை துடைத்தெடுக்கும்படியாக அவனை நக்கத் தொடங்கினர். ஓ, அது அற்புதமானது. எவ்வளவு ஆச்சரியமானது என்று கவனியுங்கள். 52.இப்பொழுது, வஸ்திரங்களெல்லாம் கொடுக்கப்பட்டு, ஜனங்கள் வழியில் வரும்போது... வாசல் வழியாக வரும் ஒவ்வொரு மனிதனும் ஒரு வஸ்திரத்தைப் பெற்றுக் கொள்வான். எனவே வேதாகமமானது இப்பொழுது தொடர்ந்து செல்கிறது, முடிக்கிறதான வேளையில் ஒரு நிமிடம் கவனியுங்கள், அது தொடர்ந்து செல்கிறது, விருந்தானது ஆயத்தமானதாக வேதாகமம் கூறுகிறது, எல்லா முடவர்களும், சப்பாணிகளும், குருடர்களும் ஆயத்தமாகி வந்து, ஒரு வஸ்திரத்தைப் பெற்றுக்கொண்டு, உள்ளே சென்றனர். சிறிது நேரம் கழித்து, அந்த மகத்தான பந்தி ஆயத்தமான போது, மணவாளனாகிய ராஜா தாமே வெளியே வருகிறார். மேலும் அவன்... அங்கே ஒரு மனிதன் எந்த வஸ்திரமும் இல்லாமல் இருந்ததைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான். அவன் எதைச் சேர்ந்தவன் என்பதைக் குறித்து ஆச்சரியப் பட்டானா? அவன் ஒரு பிரஸ்பிட்டேரியனா? அவன் ஒரு பெந்தெகொஸ்தேயினனா? பாருங்கள்? அவனிடம் எந்த வஸ்திரமும் இருக்கவில்லை. அவன் வெறுமனே தன்னுடைய சாதாரண தெருவில் அணியும் வஸ்திரத்தை அணிந்திருந்தான். இப்பொழுது, இயேசு அவனை ஒருபோதும், 'பிசாசே' என்று அழைக்கவில்லை. அவர், 'சிநேகிதனே, நீ எப்படி உள்ளே வந்தாய்?' என்றார். ஒரு காரியம் நிச்சயமாக உள்ளது, அவன் வாசலின் வழியாக வரவில்லை. அவன் வாசலின் வழியாக வந்திருந்தால் அவனுக்கு ஒரு வஸ்திரம் கிடைத்திருக்குமே. ஆனால் அவன் மற்ற ஏதோவொரு வழியாக தாவி குதித்து வந்திருந்தான். அவன் தன்னுடைய சபையின் மூலமாக அங்கு சென்றிருந்தான். இப்பொழுது, நான் இங்கே நிற்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, அம்மாதிரியான ஜனங்கள் அங்கே இருக்கப் போகிறார்கள். அவன் ஒரு சபையின் வழியில் வந்திருக்க வேண்டும். அவன் மனிதனால் உண்டாக்கப்ட்ட ஏதோ வொரு வேதசாஸ்திரத்தின் மூலமோ, கையை குலுக்குவதன் மூலமோ தெளிப்பதின் மூலமோ, அல்லது ஏதோவொன்றின் மூலமோ தான் வந்திருக்க வேண்டும். அவன் வாசல் வழியாக உள்ளே வரவில்லை; அவன் வாசல் வழியாக வந்திருப்பானானால், அவன் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று, அப்போஸ்தலர்கள் செய்த விதமாகவே சரியாக அதை செய்திருப்பான். அவர்கள் சென்ற வழி - வாசல் அதுவே. அந்த வாசல் வழியாகத்தான் நீங்கள் செல்ல வேண்டும். ஏனெனில் அவரே வாசலாக இருக்கிறார்; அவர் தான் மணவாளனாக இருக்கிறார். அவர் அங்கே நிற்கிறார், பிதா அழைப்பைக் கொடுக்கிறார், உங்களை அழைக்கிறார், நீங்கள் வருகிறீர்கள், நீங்கள் உள்ளே வரும்படி அவர் உங்களுக்கு வஸ்திரத்தைக் கொடுக்கிறார். ஒவ்வொரு மனிதனும் அதே விதமாகவே அதைப் பெற்றுக் கொள்கிறான். பரிசுத்த ஆவியின் அபிஷேகமானது சரியாக வந்து நீங்கள் தேவனைப் பெற்றுக் கொள்கிறீர்கள், தேவனை ஏற்றுக்கொண்டு, ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், கர்த்தருடைய நாமத்தை சொல்லிக் கூப்பிடுங்கள், பரிசுத்த ஆவி வந்து, பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் செய்த விதமாகவே உங்களை நிரப்புவார், அதே விதமாகவே. 53.ஆனால் இம்மனிதன் ஒரு ஜன்னல் வழியாகத்தான் உள்ளே வந்திருக்க வேண்டும். அவன் திருட்டுத்தனமாக உள்ளே வந்திருந்தான். இப்பொழுது கவனியுங்கள். மணவாளனான ராஜா அவனை நோக்கி, 'சிநேகிதனே, நீ எப்படி உள்ளே வந்தாய்?' என்று கேட்டான். அங்கே சில பழைமை நாகரீகமான பரிசுத்த ஆவி போதகர்கள் பூமியில் அந்நிலையில் இருந்ததை அது காட்டுகிறது. அவன் பேசாமல் நின்றான். அவன் ஒருவேளை இந்த சிகாகோ கூட்டத்திலும் உட்கார்ந்து கொண்டிருக்கலாம். பாருங்கள்? அவன் நன்றாக அறிந்திருந்தான், 'அதைக்குறித்து எனக்கு எதுவும் தெரியாது' என்று தேவனுக்கு முன்பாக கூற முடியாது என்று அவன் அறிந்திருந்தான். அவன் ஏதோவொரு பரிசுத்த ஆவி கூட்டத்தில் இருந்திருக்கிறான். முடவர்களும் குருடர்களும் சுகமாவதையும் கண்டிருந்தான், தேவனுடைய மகத்தான அற்புதங்களை கண்டிருந்தான், எனவே அவன் பேச முடியாமல் நின்றிருந்தான். தேவன் அந்த மனிதனிடம் என்ன சொன்னார்? 'இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள்' என்றான். நண்பர்களே, உங்களையே பொருத்திக்கொள்ளுங்கள். அது தான் சுவிசேஷம். அது இயேசு கிறிஸ்துவின் சொந்த வார்த்தையாக இருக்கிறது. அது ஒரு உவமை மாத்திரமே; அது ஒரு தீர்க்கதரிசனமாய் இருந்தது. ஏதோவொரு நாளில் அவ்வித மாகவே சம்பவிக்கும். எனவே இன்றிரவு வாசல்கள் திறந்து, தண்ணீரானது இலவசமாக பாய்ந்து கொண்டிருந்து, சகலமும் ஆயத்தமாயிருக்கும் நேரத்தில், பிதாவானவர் உன்னுடைய இருதயத்தைத் தட்டி, 'மகனே, நீ சபையில் போதுமான காலம் விளையாடிக் கொண்டிருக்கிறாய்; நீ சரியாவதற்கு இதுவே தருணம்' என்று கூறுகிறார். நீங்கள் வாசல் வழியாகப் பிரவேசித்து, ஒரு வஸ்திரத்தைப் பெற்றுக் கொண்டு, விருந்திற்கு வாருங்கள் என நான் உங்களுக்கு ஆலோசனை சொல்லுகிறேன். நாம் ஜெபிக்கலாமா? 54.அன்புள்ள கர்த்தாவே, உம்முடைய வார்த்தையை கேட்பதைக் காட்டிலும் வேறு எதுவும் அதிகமாக எங்கள் இருதயத்தைக் கிளர்ச்சியூட்டுவதில்லை. 'விசுவாசமானது கேள்வியினால் வருகிறது, கேள்வியானது உம்முடைய வார்த்தை யைக் கேட்பதினால் வருகிறது.' தேவனே, இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் இந்த எழுப்புதல் அல்லது இந்த கன்வென்ஷனானது ஒரு பழைமை நாகரீகமான பரிசுத்த ஆவி எழுப்புதலை வரப்போகிற வாரங்களிலோ, சரியாக சொன்னால் வரப்போகிற நாட்களிலோ உண்டாக்க வேண்டுமென்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். முடவர்களையும், குருடர்களையும், சூம்பின உறுப்புடையவர்களையும், சப்பாணிகளையும், ஊனமானவர்களையும் சுகப்படுத்து மட்டாக நீர் ஜனங்களின் மேல் அப்படிப்பட்ட அபிஷேகத்தின் ஆசீர்வாதங்களை அனுப்ப வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இன்று பாதையோரம் படுத்துக்கொண்டும், தெருவில் படுத்துக் கொண்டும் உள்ள அநேகர் உள்ளே கொண்டு வரப்பட்டு, சரீரப்பிரகாரமாக மாத்திரம் சுகமடையாமல், கொடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டு, கலியாண விருந்துக்கு வந்து, ஒரு வஸ்திரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அதை அருளும், பிதாவே. ஆசீர்வதியும்... பிதாவே, இன்றிரவு அம்மாதிரியான யாராவது இங்கே இருப்பார்களானால், பிதாவே, நீர் அவர்களுடைய கதவை, இருதயத்தின் வாசலை, ஆத்துமாவின் கதவைத்தட்டிக் கொண்டிருக்கிறீர் என்பதை அவர்கள் இப்பொழுது அறிவார் களாக. பிதாவே, உம்மிடம் வராமலும், மறுபடியும் பிறக்காமலும், பரிசுத்த ஆவியை ஒருபோதும் பெற்றிருக்காமலும் யாராவது இங்கே இருப்பார்களானால், இக்கணத்தில் அவர்களுடைய இருதயத்தில் உணர்த்துதலைத் தந்து, அவர்கள் தங்களுடைய கரத்தை பயபக்தியாக உம்மிடம் உயர்த்தி, 'கர்த்தாவே, இதன் மூலமாக, நான் தவறாய் இருக்கிறேன் என்பதை அறிகிறேன். நீர் என்மேல் இரக்கமாயிருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். தேவகுமாரனின் நீதியின் வஸ்திரத்தை எனக்குத் தாரும்' என்று கூற வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தராகிய இயேசுவே, இன்றிரவு இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், உலகத்தில் எங்களுக்கு முன்பாக ஒரு பெரிய இருண்ட கதவு வைக்கப்பட்டுள்ளது; அது மரணத்தின் வாசல் என்று அழைக்கப்படுகிறது. எங்களுடைய இருதயம் ஒவ்வொரு தடவை துடிக்கும் போதும், நாங்கள் அந்த கதவுக்கு ஒரு படி அருகாமையில் வருகிறோம். எதோவொரு நாளில் நாங்கள் அதற்குள் செல்ல வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஓ, தேவனே, என்னைக் குறித்துப் பேசும் போது, கர்த்தாவே, நான் அந்த கதவினிடமாக இந்த ஒரு காரியத்துடனே தான் போக விரும்புகிறேன்: அவருடைய நீதியின் வஸ்திரத்தைப் போர்த்திக் கொண்டு, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அவரை அறிந்த நிச்சயத்தோடு, அவர் அழைக்கும் போது, மரித்தோரிலிருந்து அவர் என்னை அழைக்க வேண்டும் என்ற நிச்சயத்தோடு இருக்க விரும்புகிறேன். அன்புள்ள தேவனே, இன்றிரவு உண்மையாகவே ஒவ்வொரு இருதயத்தின் வாஞ்சைகளை அருளும். நாங்கள் நித்தியத்தை சந்திக்கும் முன்பாக இன்னும் எத்தனை துடிப்புகள் உண்டென்று எங்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு இருதயத்திலும் அந்த வாஞ்சையைத் தாரும், தங்களுடைய கரங்களை உயர்த்த வேண்டுமென்று நான் கேட்கும் போது, அவர்களும் அதையே தெரிவிக்கட்டும். 55.நாம் தேவனுடைய பிரசன்னத்தில் நம்முடைய தலைகளை பயபக்தியோடு தாழ்த்தியிருக்கையில், இன்றிரவு நீங்கள் வஸ்திரமில்லாமல் இருக்கிறீர்களா என்று நான் வியக்கிறேன். இயேசு வருவாரானால், இங்கே பூமியில் நீங்கள் எழுத்து பிரகாரமாக சபையில் ஒரு அங்கத்தினராக இருந்த போதிலும், நீங்கள் ஒருபோதும் வாசலண்டை வராமல், கிறிஸ்துவின் வஸ்திரத்தைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால்... உங்களுடைய சொந்த நீதியில் நிற்க முயற்சிக்க வேண்டாம்; தேவனுடைய வார்த்தையைப் பற்றிய உங்களுடைய சொந்த திறமையில் நிற்க வேண்டாம். நீங்கள் ஒருவேளை அற்புதமான ஒரு போதகராக இருக்கலாம். சாத்தான் எந்த சமயத்திலும் உங்களுக்குப் போதிக்க முடியும். நீங்கள் எப்போதும் அறிந்ததைக் காட்டிலும் அவனுக்கு தேவனுடைய வார்த்தையைக் குறித்து அதிகம் தெரியும். நிச்சயமாக. ஏன், நம்முடைய எந்த வேதப் பண்டிதர்களும் எப்போதும் அறிந்திருப்பதைக் காட்டிலும் பரிசேயர்களும் சதுசேயர்களும் தேவனுடைய வார்த்தையைக் குறித்து அதிகமாக அறிந்து வைத்திருந்தனர். ஆனால் அவர்கள் இயேசுவை அறிந்திருக்கவில்லை. வார்த்தையை அறிவது ஜீவனல்ல. உங்களுடைய கிறிஸ் தவ வினா விடை பாடத்தை (catechism) அறிவது ஜீவனல்ல. உங்களுடைய சபை உபதேசங்களை அறிவது ஜீவனல்ல. ஆனால் அவரை அறிந்து கொள்வது தான் ஜீவன். நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்களா? அவர் உங்களுக்கு ஒரு அழைப்பைக் கொடுக்கும்படி அவர் தாமே உங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார், நீங்கள் அவருடைய நீதியாகிய வஸ்திரத்தைப் பெற்றீர்கள்... தேவன் தடுத்து நிறுத்துகிறார், நான் என்னுடைய நீதியில் நிற்க முடியாது, என்னிடத்தில் ஒன்றுமில்லை. உங்களிடத்திலும் ஒன்றுமில்லை. நாம் இன் றிரவு அவருடைய வஸ்திரத்தை எடுத்துக் கொண்டு, நம்மை நாமே அவருக்குக் கொடுப்போம், அவர் பரிசுத்த ஆவியாகிய தம்முடைய நீதியால் முழுவதுமாக நம்மை நிறைப்பாராக, அதன் பிறகு அவர் வருமட்டுமாக அவருக்காக உழைப்போம். 56.இருதயத்தில் அந்த வாஞ்சையுள்ள இங்கே இருக்கிற எவரும் உங்களுடைய கரத்தை தேவனிடத்தில் உயர்த்துவீர்களா? வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, நீ அவருக்காக ஒரு ஊழியக்காரனாய் ஆவாயாக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, மேலும் உன்னையும், உன்னையும், உன்னையும். ஓ, என்னே, சற்று அந்த கரங்களைப் பாருங்கள். மேலே பால்கனியில், அங்கே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது சரியே. உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். அது ஒருவேளை மிக அதிகமாக காணப்படாமல் இருக்கலாம். ஆனால் நான் இங்கே நிற்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக பதிவு செய்யும் தூதன் அதை பதிவு செய்கிறான். அங்கேயுள்ள என்னுடைய கறுப்பின சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது சரியே. உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். பாதையை விட்டு வெளியே இருக்கும் மூர்க்கமானநபர் யாராவது இங்கே உண்டா? இங்கேயுள்ள சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறுயாராவது? என்னுடைய சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வாலிப ஸ்திரீயே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னையும், உன்னையும், சீமாட்டியே. அது சரியே... பாதையை விட்டு விலகி - மந்தையை விட்டு வழிதவறிப் போனவர்கள், உங்கள் கரத்தை உயர்த்தி, 'யெகொவாவே, நீர் என்னுடைய இருதயத்தைத் தட்டிக் கொண்டிருக்கிறீர். 'நீ தவறாய் இருக்கிறாய். நீ ஒரு போதும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை; நீ அதைப் பெற்றிருக்கவில்லையென்று உன்னுடைய ஜீவியம் நிரூபிக்கிறது' என்று சரியாக இப்பொழுதே என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறவர் நீர் தான்' என்று கூறுங்கள், நீங்கள் அந்நிய பாஷையில் பேசுகிறீர்களா என்பது எனக்குக் கவலையில்லை; நீங்கள் துள்ளிக்குதித்து சத்தமிடலாம்; அவையெல்லாம் அதனுடன் சேர்ந்து நிகழ்கிறது. ஆனால் தேவன் அதை நிரூபிக்காவிட்டால், அதனுடன் செய்வதற்கு எதுவுமில்லை. சூனியக்காரிகள் அந்நிய பாஷையில் பேசி அதற்கு அர்த்தம் உரைத்து, துள்ளுவதையும் நடனம் ஆடுவதையும், மற்ற ஒவ்வொன்றையும் செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் உங்களுடைய இருதயத்திற்குள் ஊற்றப்படும் தேவனுடைய அன்பின் ஒரு உண்மையான நிரூபணத்தை அர்த்தப்படுத்துகிறேன். பின்பு அம்மாதிரியான ஜீவியம் அது உண்மையென தெளிவுப்படுத்தும் போது, உங்களுடைய அந்நிய பாஷை பேசுதலும் மற்றும் காரியங்கள் எல்லாம் சரிதான். ஆனால் நீங்கள் கோபமும், சுயநலமும், ஸ்தாபன சிந்தையும் கொண் டிருந்து, மற்ற எவரும் உங்களுடைய சபையை சார்ந்திராத காணத்தால் அவர்களுடன் ஐக்கியம் கொள்ள விரும்பாமலிருந்தால், சகோதரனே, நீங்கள் தவறாய் இருக்கிறீர்கள். தேவனுடைய ஆவி அதைச் செய்யாது. அது அதனுடைய சகோதரனை நேசிக்கிறது - அவன் எந்த சபையை சேர்ந்தவ னாய் இருந்தாலும். 57.அதைப் பெற்றிருக்காத யாராவது உங்களுடைய கரத்தை கிறிஸ்துவிடம் உயர்த்துவீர்களா? 'தேவனே, இதன் மூலமாக, என்னுடைய மதிகேட்டை எனக்கு மன்னித்தருளும், நீர் மாத்திரம் வஸ்திரத்தை எனக்குக் கொடுப்பீரானால், நான் இப்பொழுது அதை ஏற்றுக் கொள்ளுவேன்' என்று கூறுங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அங்கேயுள்ள உன்னை தேவன் அசீர்வதிப்பாராக. சரி, இன்னும் யாராவது, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சீமாட்டியே, உன்னையும், உன்னையும். இங்கே கீழ்ப்புறத்திலுள்ள யாரோ ஒருவரை நான் காண்கிறேன். பால்கனியின் வலது பக்கத்தைச் சுற்றிலும். என் அன்பான நண்பர்களே, நீங்கள் அதைப் பெற்றிருக்கவில்லையெனில், நாம் இவ்வுலகத்தில் ஒருவேளை மீண்டும் ஒரு போதும் சந்திக்காமலே இருக்கலாம்; நாம் மீண்டும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே இங்கிருந்து போய் விடலாம். ஆனால் நான் இன்றிரவு பரலோக புத்தகங்கள் அண்டை செல்லட்டும், பதிவு செய்யும் தூதன் அதை எழுதட்டும்: கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவும், மறுபடியும் பிறக்கவும் நான் உங்கள் ஒவ்வொருவரையும் அழைத்திருக்கிறேன். அது சிலசமயம் உங்களைப் புண்படுத்திய போதிலும், முழு சுவி சேஷத்தையும் உங்களுக்கு அறிவிப்பதை விட்டு விடவில்லை. ஆனால் நான் ஒன்றை உங்களுக்குச் சொல்லுகிறேன், மனிதர்கள் மற்றும் ஸ்திரீகளின் இரத்தப்பழிக்கு நான் குற்றமற்வனாக இருக்கிறேன். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள நீங்கள் ஆயத்தமா? ஒருமுறை கூட. வீட்டிற்கு வாருங்கள், வீட்டிற்கு வாருங்கள், சோர்வுற்றிருப்போரே, வீட்டிற்கு வாருங்கள்; (கிறிஸ்தவர்களே, ஜெபியுங்கள்.) அக்கறையுள்ள, மென்மையான இயேசு அழைத்து கொண்டிருக்கிறார், அழைத்துக்கொண்டிருக்கிறார், ஓ பாவியே, வா... 58.இசையானது இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பாவி என்பவர் யார்? சந்தேகப்படுகிற ஒருவர், ஒரு அவிசுவாசி. பாவம் என்பது அவிசுவாசமாகும். ஆனால் நீங்கள் சென்று, 'நான் ஒரு சபையைச் சேர்ந்து கொள்கிறேன்' என்று கூற முடியும். நான் அவிசுவாசத்தைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன்: இயற்கைக்கு மேம்பட்டவைகளில் உங்களுக்கு விசுவாசம் இல்லை; பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் உங்களுக்கு விசுவாசம் இல்லை; நீங்கள் ஒரு பாவியாக இருக்கிறீர்கள். நீங்கள் பாவியாக இருப்பதாக வேதாகமம் கூறுகிறது. 'தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.' இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் இவ்விதமாக ஒரு செய்தியைக் கொடுத்துக் கொண்டிருந்தேன், 'மனுஷ னுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; (ஒரு மனிதன் தான் சரியாக இருப்பதாக எண்ணிக் கொள்கிறான்.) அதன் முடிவோ மரண வழிகள்.' நான் ஒரு மனிதனை கையினால் பிடித்திருந்தேன், அவர்கள் சரியாக இருப்பதாக எண்ணிக் கொண்டனர்; எனவே நான் அவனைப் பிடித்திருந் தேன். ஆனால் மரணம் அவர்களைத் தாக்கிய போது, அவர்கள் கண்கள் இவ்விதமாக பளபளப்பாகி, அவர்கள் அலறி கூச்சலிடத் தொடங்கினர். அப்போது அது மிகவும் காலதாமதமாகி இருந்தது. அவர்கள் போய் விட்டனர். 'மனுஷனுக்கு செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு.' எனவே ஏன்... இப்பொழுது நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்கு கடந்து சென்று விட்டீர்கள் என்ற நிச்சயம் உங்களுக்கு இல்லாமலிருந்து, தேவனுடைய ஆவியானவர் உங்களுடன் சாட்சி கொடுக்காமல் இருந்தால்... ஒரு வரி கூட, நாம் இந்த பாடலின் இந்த வரியைப் பாடிக்கொண்டிருக்கும் போது, எனக்காக அல்ல, வேறு யாருக்காவும் அல்ல (ஒவ்வொருவரும் தலைவணங்கி, உங்களுடைய கண்கள் மூடிக்கொண்டிருக்கட்டும்.) தேவனிடம் உங்கள் கரத்தை உயர்த்தி, 'பிதாவே, என்னை நினைவுகூரும்; நான் இன்றிரவு பரலோகத்தில் என்னை பதிவு செய்ய விரும்புகிறேன் - என்னுடைய பெயரை - நான் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறேன்; என்னுடைய மதிகேடான பாவங்கள் மன்னிக்கப்பட விரும்புகிறேன். நான் மன்னிக்கப்பட விரும்புகிறேன், மேலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை விரும்புகிறேன். நான் அதை விரும்புகிறேன் என்று உம்மிடம் சொல்லும்படியாக என் கரத்தை உம்மிடம் உயர்த்துகிறேன்' என்று கூறுங்கள். வீட்டிற்கு வாருங்கள்... தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது சரியே. பன்னிரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டோர்... நிச்சயமில்லாதவர்களே, வீட்டிற்கு வாருங்கள்; அக்கறையுள்ள, (அந்த அக்கறை என்னவாக உள்ளது? பிதா இன்றிரவு உங்களுக்கு ஒரு அழைப்பைக் கொடுக்கிறார்.) ... அழைத்துக் கொண்டிருக்கிறார், அழைத்துக்கொண்டிருக்கிறார், ஓ பாவியே, வீட்டிற்கு வா! 59.எங்கள் பரலோகப் பிதாவே, அவர்கள் ஒவ்வொரு வருடைய கரங்களையும் நீர் நோக்கிப்பாரும். நாங்கள் ஒரே சமயத்தில் இயற்கையான மற்றும் இயற்கைக்கு மேற்பட்ட ஒரு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை அறிந் திருக்கிறோம். தூதர்கள் இங்கே குழுமியிருக்கிறார்கள்; கிறிஸ்துவும் இங்கே இருக்கிறார். மேலே உயர்த்தப்பட்ட ஒவ் வொரு கரமும் - அவர்கள் பிதாவிடமிருந்து அழைப்பை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர் அவர்களுடைய இருதயத்தைத் தட்டினார். நீர், 'பிதா எனக்கு கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்' என்றீர். பிதாவே, அது உண்மை யென்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் மிகவும் நன்றி யுள்ளவர்களாயிருக்கிறோம். இப்பொழுது, உம்முடைய சொந்த வழியில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அவர்களுக்கு கொடுப்பீரா? கிறிஸ்துவின் வஸ்திரத்தை அவர்களைச் சுற்றி போர்த்துவீராக. அவர் கள் அவருடைய நீதியில் மட்டும் நிற்பார்களாக. அதை அருளும், கர்த்தாவே. தங்களுடைய கரத்தை உயர்த்திய வாலிப மனிதர்கள் அனைவருடைய ஆத்துமாக்களையும் ஆசீர்வதித்து, அவர்களை ஊழியத்திற்கு அழைத்தருளும், கர்த்தாவே. அவர்கள் அந்த வேலிகளுக்குள்ளும், நெடுஞ்சாலைகளிலும், வாய்க்கால்களிலும் சென்று, முடவர்களையும், சப்பாணிகளையும், குருடர் களையும் அங்கிருந்து வெளியே கொண்டு வருவார்களாக. அதை அருளும், பிதாவே. நாங்கள் அனைவரும் அந்நாளில் அங்கே சந்திக்கும் போது, நாங்கள் உம்மைத் துதிப்போம். இப்பொழுதும், உம்முடைய வார்த்தையானது, 'என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக் குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்' என்று கூறியுள்ளது. கர்த்தாவே, அதை அருளும், அவர்கள் ஒரு சமாதானமான, மகிழ்ச்சியான ஜீவியம் செய்து, உம்மை நேசித்து, உம்மை சேவித்து, கனிகளைக் கொடுக் கட்டும். அந்த மகத்தான நாளில் நாங்கள் உம்மை சந்திக்கும் மட்டுமாக அதை அருளும் கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். 60.தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் எப்பொழு தும் இருந்ததைக்காட்டிலும் பிந்திய இன்றிரவில் உங்களுடன் பேசவும், சிறிது ஐக்கியம் கொள்ளவும் கிடைத்த இந்த வேளைக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்... பையன்களும் மற்றும் எல்லாரும் இன்றிரவில் ஏறத்தாழ 300 மைல்கள் காரை ஓட்டிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இப்பொழுது, எத்தனை பேர் உண்மையாகவே நன்றாக உணர்கிறீர்கள்? 'கர்த்தர் என்னை ஆசீர்வதித்துக் கொண்டிருக் கிறார், நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்' என்று கூறுங்கள். உங்களுக்கு நன்றி. நானும் உங்களோடு கூட மிகவும் நன்றாக உணர்கிறேன். இப்பொழுது, ஜெபிப்பதற்காக இங்கே அநேகர் உள்ளனர். இக்கட்டிடத்தில் ஜெபிப்பதற்காக எத்தனை பேர் இருக்கி றீர்கள்? பார்ப்போம்... ஜெபிக்க விரும்புகிறவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள், ஜெபிப்பதற்காக வாஞ்சிக்கிறவர்கள், எங்கும், பால்கனியிலும் மற்றும் எல்லாவிடங்களிலும் இருக்கிறார்கள். ஓ, சகோதரர்களே, நீங்கள் எங்காவது இருப்பீர்களானால், இப்பொழுது, உங்களுடைய கரத்தின் மேலுள்ள கடமை எத்தகையது என்பதைப் பாருங்கள். 61.இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருப்பாரானால், அவர் அங்கிருந்த போது செய்த அதே காரியங்களை இன்றிரவும் செய்வார். அவர் அதை செய்வாரா? அவர் செய்வாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு இங்கே இருந்திருந்தால் அவர் ஒரு சுகமளிப்பவர் என்று உரிமை கோருவாரா? இப்பொழுது கவனியுங்கள். இல்லை. அவர் சுகமளிப்பவரல்ல என்றே உரிமை கோரினார். அது சரியா? 'அந்த கிரியைகளைச் செய்வது நானல்ல; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்து வருகிறார்.' இப்பொழுது, தேவன் நோவாவில் இருந்தார் என்று விசுவாசிக்கிறீர்களா? கிறிஸ்துவின் ஆவி நோவாவில் இருந்தது என்று விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக. அது ஆபிரகாமிலும், ஈசாக்கிலும், யாக்கோபிலும், யோசேப்பிலும் இருந்ததா? தாவீது ராஜா பதவியிலிருந்து தள்ளப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, எருசலேமை நோக்கிப்பார்த்து அழுத போது, தாவீதுக்குள் அது இருந்ததா? மேலும் தாவீதின் குமாரனும் கூட சில நூறு வருடங்கள் கழித்து எருசலேமிற்காக கதறி அழுதாரே. அது தாவீதுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவியே. ஆனால் தீர்க்கதரிசிகளிலும் மற்றவர்களிலும் அது ஒரு பாகமாக இருந்தது. ஆனால் அது கிறிஸ்துவில் வரும்போது, அவர் சரீர பிரகாரமாக தேவத்துவத்தின் பரிபூரணமாக இருந்தார். அவரில் எல்லாம் வாசமாயிருந்தன. தேவன் கிறிஸ்துவில் இருந்தார். கிறிஸ்து தேவனாக இருந்தார். தேவன்... கிறிஸ்து யெகோவா தேவனின் மாம்ச சரீரமாக இருந்தார். தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே. தேவன் அவரில் வாசமாயிருந்து உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார். எனவே அவர் அளவில்லாமல் ஆவியைக் கொண்டிருந்தார். பிதா அவரிடம் காண்பித்தாலொழிய அவர் எதையுமே செய்யவில்லை என்று அவர் சொன்னார். இப்பொழுது, இருதயத்தின் இரகசியங்களை அறிந்து கொண்டார். அவர்களுடைய நினைவுகளையும் எல்லாவற்றையும் அறிந்து கொண்டார். அதன் பிறகு பிதா அவரிடம் காண்பித்த பிரகாரமாக அவர் வியாதியஸ்தர்களை சுகமாக்கினார். அவரிடம் தொடர்பு கொண்ட ஒவ்வொருவரையும் அவர் சுகமாக்கினாரா? இல்லை. ஊ-ஊ. இல்லை. அப்படியே பிதா அவருக்கு காண்பித்தபடியே அவர் காரியங்களைச் சொன்னார். பரிசுத்த யோவான் 19 அல்லது 5:19-ல், அவர், 'மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லு கிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்' என்று சொன்னார். 62.இப்பொழுது, அங்கே சில ஜெப அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. கூட்டத்தில் ஒருபோதும் இருந்திராத அந்நியர்கள் நம்முடன் உள்ளனர். இப்பொழுது, நண்பர்களே, நாம் சுகமளிப்பவர்கள் அல்ல. சகோதரன் ஆஸ்பார்னோ அல்லது சகோதரன் டாமி ஹிக்ஸோ அல்லது சகோதரன் ஆகில்வியோ, அவர்களில் வேறு எவருமோ தாங்கள் சுகமளிப்பவர்கள் என்று கூறுவதை நீங்கள் கேள்விபடவே மாட்டீர்கள். நாங்கள் சுகமளிப்பவர்கள் அல்ல. இல்லை, ஐயா. அவர்கள் நேர்மை வாய்ந்த நல்ல மனிதர்கள். அவர்கள் தாங்கள் சுகமளிப்பவர்கள் என்று கூறவே மாட்டார்கள். தேவன் தம்முடைய வியாதியாயுள்ள பிள்ளைகளுக்காக ஜெபிக்கும்படியாக அவர்களை அனுப்பியிருப்பதாக அவர்கள் கூறுவர். நாம் அதை தான் செய்ய வேண்டும். இப்பொழுது, ஆனால் நாம் செய்யக் கூடாது... இப் பொழுது, அவர்களுக்கு ஒரு வரமானது கொடுக்கப்பட்டுள்ளது. இப்பொழுது, சகோதரன் ஆஸ்பார்ன் ஒரு அற்புதமான போதகர், சகோதரன் டாமியும் கூட போதகர் தான், உண்மை யாகவே இரண்டு பேருமே விசுவாசத்தை உறுதியாக பற்றிக் கொண்டவர்கள். சகோதரன் ஆகில்வியும் அதே விதமாகவே இருக்கிறார். இவ்விதமாக அவர்கள் தேவனை உறுதியாக பற்றிக் கொண்டவர்கள். எனக்கு தீர்க்கதரிசன வரமுண்டு. அது காண்கிறது, முன்னுரைக்கிறது. எனவே அதுதான் வித்தியாசம். ஆனால் அதெல்லாம் அதே ஆவி தான். 63.இப்பொழுது, நாம் ஜெப (அட்டைகளில்) சிலவற்றை அழைக்கப் போகிறேன்... எதில் 1 முதல் 100? எது? Q கள். கடந்த இரவு 7-லிருந்து தொடங்கி எதுவரைக்கும் சென்றது? 15 அல்லது 20? இன்றிரவு 25 லிருந்து தொடங்கலாம். Q -25, யார் Q -25? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். சரி. சரி, நீங்கள் விரும்பினால், சரியாக அங்கே கீழே செல்லுங்கள். சரி. பில்லி, உனக்கு விருப்பமானால், சிறிது நேரம் அங்கே கீழே செல். இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் உண்மையாகவே பயபக்தியாய் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இப்பொழுது, நீங்கள் யாராவது அடுத்த பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள் போக வேண்டுமென்று நினைத் தால், நான் சரியாக இப்பொழுதே உங்களை விட்டு விடுகிறேன், எனவே நீங்கள் இடைஞ்சலாக இருக்க மாட்டீர்கள்... என்ன சொன்னேன்? 25. இப்பொழுது... நீங்கள் இதை செய்ய வேண்டுமென்று நான் - நான் விரும்புகிறேன். இப்பொழுது, உங்களுக்கு போக வேண்டுமானால், உங்களுக்கு உண்மை யாகவே போக வேண்டுமானால்... (ஒலிநாடாவில் காலியிடம் -ஆசி.) 64.அவர் இருந்ததான வெளிப்பாடு மற்றும் ஒவ்வொன் றும், அவர் இன்றிரவும் மாறாதவராக இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? இப்பொழுது, அவர் இந்த கூட்டத்தினரிடம் திரும்பி வருவாரானால்... இப்பொழுது, தேவன் எனக்குக் கொடுத்த இந்த சிறிய வரத்தை நீங்கள் அறிய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். மேலும் நான் அதைப் பாராட்டுகிறேன். நான் - நான் ஒரு போதகரல்ல, நான் அவருடைய ஊழியக்காரன். பாருங்கள்? மேலும் இப் பொழுது, நான் அதை இயங்கச் செய்யமாட்டேன்; நீங்கள் தான் அதைச் செய்கிறீர்கள். உங்களுடைய விசுவாசமானது அதைச் செய்கிறது. நான் அதனுடன் செய்வதற்கு எதுவுமில்லை. நான் பரிசுத்த ஆவிக்கு விட்டு கொடுப்பதாக அது உள்ளது. இப்பொழுது, பாருங்கள், ஒரு சமயம் பெரும் பாடுள்ள வளாய் அவதிப்பட்ட ஒரு ஸ்திரீ இருந்தாள். தேவன் கிறிஸ்து வில் இருந்தார் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? நிச்சயமாக. சரி. பெரும்பாடுள்ளவளாய் அவதிப்பட்ட ஒரு ஸ்திரீ நடந்து வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு, திரும்பிச் சென்று, தன்னை மறைத்துக் கொண்டாள், அவள் அவரை தொடவேயில்லை என்று மறுதலிக்கவும் கூட செய்தாள். இயேசுவோ, 'யாரோ என்னைத் தொட்டார்கள்' என்றார். பேதுருவோ, 'ஒவ்வொருவரும் உம்மைத் தொடுகின்றனரே. நீர் ஏன் அவ்வாறு சொல்லுகிறீர்?' என்றான். அவரோ, 'ஆனால் நான் பலவீனமடைந்தேன்' என்றார். அவரிலிருந்து வல்லமை புறப்பட்டு சென்றது. அவர் சுற்றும் முற்றும் பார்த்தார்; எல்லாரும் மறுத்தனர். அவரிலிருந்து புறப்பட்டு சென்ற வல்லமையானது எங்கு சென்றது? அந்த சிறு ஸ்திரீயிடம் சென்றது, அவளிடம் கூறினார். அது சரியா? இப்பொழுது, அது என்னவாக இருந்தது? இயேசுவுக்கு அது தெரியாது. அவர் மாம்ச சரீரத்தில் இருந்த ஒரு மனிதனாக இருந்தார். அவர் ஒரு மனிதனாக இருந்தார். ஆனால் அந்த ஸ்திரீ கிறிஸ்து வழியாக தேவனைத் தொட்டாள். நான் என்ன பொருள் கொள்கிறேன் என பார்க்கிறீர்களா? இப் பொழுது, நீங்களும் அதேவிதமாக அவரைத் தொட முடியும். 65.இப்பொழுது, இயேசுவின் மனுஷீக சரீரமானது ஒரு பாவ நிவாரண பலியாக உன்னதத்தில் மகத்துவத்தில் தேவ னுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு அந்த சரீரத்தில் இருந்த அவருடைய ஆவியானது, சபையிலுள்ள முன்குறிக்கப்பட்ட, முன்தீர்மானிக்கப்பட்ட ஊழியங்களுக்குள் திரும்பி வருகிறது. இந்த சரீரங்களின் வழியாக அதே விதமாகவே நீங்கள் தேவனைத் தொடுகிறீர்கள், அவைகளின் சொந்த அகங்காரத்திலல்ல, அது தகுதியானதல்ல, நிச்சயமாக இல்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய சொந்த நீதியில் நிற்கக் கூடாது; அவருடைய கிரியைகளை அறிவிக்கும்படி, அவர்கள் கர்த்தராகிய இயேசுவி னுடைய நீதியாகிய வஸ்திரத்தை தரித்தவர்களாய் நிற்க வேண்டும். நான் என்ன கூற விரும்புகிறேன் என்பதை பார்க்கிறீர்களா? சரி. இப்பொழுது, விசுவாசம் கொண்டிருங்கள். இப்பொழுது, அதை செய்யும் ஒருவர் நீங்களே. பிதா தமக்கு காண்பித்ததையே இயேசு செய்தார். இப்பொழுது, தேவன் அதைச் செய்து, நம்முடைய அருமையான சுவிசேஷகர்களான சகோதரர்களிடம் இந்த ஆராதனையை கொடுப்பதற்கு முன்பாக அவர் இவ்விரவு திரும்பி வருவாரானால், உங்களில் எத்தனை பேர், 'என்னுடைய முழு இருதயத்தோடும் பயபக்தியோடு அதை விசுவாசிக்கிறேன். அவர் இன்றிரவு அதை மீண்டும் செய்வாரானால், நான் அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசித்து, அதை ஏற்றுக் கொள்வேன்' என்று கூறுவீர்கள். உங்கள் கரங்களைப் பார்க்கட்டும், இப்பொழுது, தேவனுக்கு முன்பாக எல்லா இடங்களிலும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி. 66.இப்பொழுது, சகோதரன் உட் அவர்களே,... சரி. ஆம். நான் மறந்து விடுவதற்கு முன்பாக இந்தக் கைக்குட்டைகளுக்காக ஜெபிக்கப் போகிறேன். பரலோகப் பிதாவே, இந்த கைக்குட்டைகளை அனுப்பி யிருக்கிற ஜனங்களை நீர் அறிந்திருக்கிறீர், நான் ஜெபித்து உம்முடைய ஆசீர்வாதங்களைக் கோருகிறேன். கர்த்தாவே, அது அதிகமாக அல்ல என்று உணர்கிறேன், ஆனால், நீர் இந்த அற்பமான தகுதியற்ற ஊழியக்காரனின் ஜெபத்தை ஏற்றுக் கொண்டு, இந்த கைக்குட்டைகள் பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒவ்வொருவரையும் சுகப்படுத்துவீரா? பிதாவே, அது வியாதிப்பட்ட சிறு பிள்ளைகளிடமும், தகப்பன்மார் களிடமும், தாய்மார்களிடமும், குமாரர் குமாரத்திகளிடமும் போகும் போது, அவர்கள் ஒவ்வொருவரையும் நீர் சுகப்படுத்த வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 67.இப்பொழுது, நீங்கள் எல்லாரும் என்னுடன் தரித்திருந்து ஜெபிக்கப்போகிறீர்களா? இப்பொழுது, கவனியுங்கள், நண்பர்களே, இது கடினமாக இருக்கிறது. இங்கேயுள்ள நீங்கள் எல்லாரும் கிறிஸ்தவர்கள் என்று நான் - நான் யூகிக்கிறேன்; நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? நீங்கள் அவ்வாறு இல்லையென்றால், கிறிஸ்தவர்கள் ஆகவேண்டும். ஆனால், இப்பொழுது தேவன் அவருடைய வார்த்தையில் வந்து, அவருடைய வார்த்தையை சத்தியமென்று நிரூபிக்கிறார். உங்களுக்கு அதிக நேரம் இருக்கிற அளவுக்கு இப்பொழுது, நீங்கள் உண்மையான பயபக்தியோடு இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். உணர்ச்சிவசப்பட வேண்டுமென்று நீங்கள் விரும்ப வேண்டாம். நீங்கள் கவலைப்படுவீர்களானால், அப்போது வேறுயாரோ ஒருவரையும் கவலைப்பட வைப்பீர்கள். நீங்கள் எல்லாரும் தேவனுடைய ஒரு பாகமாக இருக்கிறீர்கள். பாருங்கள்? அது அசைவாடுகிற சரீரமாக உள்ளது. இந்த கரமானது காயப்பட்டும் சுளுக்கு கொண்டும் இருந்தால், இந்த கரமானது எப்படி நன்றாக வேலை செய்ய முடியும்? பாருங்கள்? பெந்தெகோஸ்தே நாளில் இருந்தது போன்று எல்லாரும் ஒன்று சேர்ந்து அமைதியாக இருந்து, எல்லாரும் ஏதோவொன்று சம்பவிக்க வேண்டுமென்று எதிர்பார்த்திருக்க வேண்டும். 68.இப்பொழுது, வேதாகம காலத்தில் அவர்கள் செய்தது போன்று, மீண்டும் இரண்டு பேர் ஒருவரையொருவர் சந்திக்கும் ஒரு குறிப்பிடத்தக்க வேளையாக இது உள்ளது, இன்றிரவும் அது சம்பவிக்க வேண்டும். அன்றொரு இரவு நான் கூறினது போலவே, 400 தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக மிகாயாவிடம் சத்தியம் இருந்தது, ஏனெனில் தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமம் அவனிடம் இருந்தது. அவன் வேதாகமத்தோடு தரித்திருந்தான். ஒவ்வொன்றும் வேதாகமத்துடன் சரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், தேவனால்...?... செய்ய முடியும் என்று நான் - நான் கூற மாட்டேன். ஆனால் அவர் என்ன சொல்லி யிருக்கிறாரோ அதை நான் விசுவாசிக்கிறேன், அது எனக்கு போதுமானது. பாருங்கள்? 69.இப்பொழுது, இங்கே ஒரு ஸ்திரீ, ஒரு - ஒரு கறுப்பின ஸ்திரீ இருக்கிறாள், நானோ ஒரு வெள்ளை மனிதனாக இருக்கிறேன். இன்றிரவு அவள் இங்கே மேலே நடந்து வருகிறாள். இந்த ஸ்திரீயை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதேயில்லை. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம் என்று யூகிக்கிறேன், அப்படித்தானே, ஸ்திரீயே? உங்களுக்கு - உங்களுக்கு என்னைத் தெரியுமா? இந்த ஸ்திரீ நான்கு வருடங்களுக்கு முன்பு பிலதெல்பியன் சபைக்கு வந்ததாக கூறுகிறாள், புற்று நோயால் தின்னப்பட்டு, இவ்விதமாக ஒரு சிறு காரியமாக இருந்தாள், நான் அவளுக்காக ஜெபித்தேன், இப்பொழுது அவளைப் பாருங்கள். அது ஒரு அற்புதமான சாட்சியாக இல்லையா? தேவன் அவளை ஆசீர்வதிப்பாராக. ஆனால் இப்பொழுது, நான்கு வருடங்களில் அநேகமாக எவ்வளவு - அதற்குப் பிறகு நான் அநேகமாக இலட்சக்கணக்கான ஜனங்களுக்காக ஜெபித்துள்ளேன். நீங்கள் அப்படியே மேடையின் மேல் வந்து கொண்டிருக்கிறீர்கள், முக்கியமாக இன்றிரவு அபிஷேகமானது வல்லமையோடு என்னிடம் வருமானால்... நான் உங்களிடம் சொல்லும்படி நான் அறிந்துகொள்ளும்படியான ஒரே வழி என்னவென்று நீங்கள் நாளைய தினம் அறிவீர்களா? சரியாக அங்கேயிருக்கும் பதிவு செய்பவர்கள், அவர்கள் போவதைப் பாருங்கள், இங்கே பாருங்கள்? அந்த பதிவு செய்பவர்கள் பின்னால் அதை என்னிடம் இயக்கிக் காண்பிக்கும்போது, நான் சொன்னதை அறிகிறேன். பாருங்கள்? ஆனால் உங்களை அறிந்து கொள்வதற்கு அல்லது நீங்கள் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் என்பதை அறிவது - அது எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாதல்லவா? அது எனக்குத் தெரியாது, அதைக்குறித்த ஒரு காரியமும் எனக்குத் தெரியாது. 70.இங்கே ஒரு - ஒரு கறுப்பின ஸ்திரீயும் ஒரு வெள்ளை மனிதனும் இருக்கின்றனர். ஒரு சமயம் இயேசு எரிகோவுக்குச் செல்லும்போது இந்த விதமாக நடந்தது. அவர் சமாரியா வழியாக போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இப்பொழுது அதற்கு என்ன காரணம் என்று வியக்கிறேன்? பிதா அவரை அங்கு அனுப்பினார் என்று நான் விசுவாசிக்கி றேன். நீங்களும் அவ்வாறு விசுவாசிக்கவில்லையா? ஏனெனில் அவருடைய... நீதிமானுடைய நடைகள் தேவனால் உறுதிப்படும், தேவனால் நடத்தப்படும். இப்பொழுது, இயேசு அங்கே செல்கிறார், எனவே அவர் தம்முடைய எல்லா சீஷர்களையும் அங்கிருந்து அனுப்பி விட்டார். ஒரு சமாரிய ஸ்திரீ... வித்தியாசமான இன மக்களிடை யே இன்று பிரிவினை இருப்பது போலவே அவர்களுடைய நாட்களிலும் ஒரு பெரிய பிரிவினை இருந்தது. ஆனால் இயேசு அங்கே வித்தியாசம் இல்லையென்று சரியாக அவளிடம் சொன்னார்; நாம் எல்லாரும் ஒன்றாயிருக்கிறோம். நீங்கள் வளர்ந்த நாடும், உங்களுடைய சொந்த வீடும் தென் ஆப்பிரிக்காவில் இருந்ததால், அந்த வெயிலின் காரணமாக உங்கள் தோல் கறுப்பாக மாறிவிட்டது. ஆங்கிலோ சாக்ஸன் தேசத்திலிருந்து நான் வருகிறேன். அங்கே குளிராய் இருக்கும், அதனால் நாங்கள் நிறம் மாறி விட்டோம்... ஆனால் நாமெல் லாரும்... நாம் ஒருவர் மற்றொருவருக்கு இரத்தத்தை கொடுக்க முடியும். நாம் ஒரேவிதமாகவே இருக்கிறோம். தேவன் ஒரே இரத்தத்தினால் எல்லா தேசங்களையும் உண்டாக்கினார். அது சரியே. 71.இன்றிரவு அதே காட்சியானது மீண்டும் திரும்ப வந்து சம்பவிக்கிறது, அது சரியல்லவா? இங்கே ஒரு... எனவே அவள் வெளியே வந்த போது, இயேசு அந்த ஸ்திரீயிடம் சொன்னார்... அவள் மோசமான ஒரு ஸ்திரீயாக இருந்தாள் என்று நம்புகிறோம். இயேசு அவளிடம் சொன்னார், அவர் அவளை அறிந்திருக்கவில்லை, அவருடைய ஜீவியத்தில் அவளை ஒருபோதும் கண்டதேயில்லை. அவர், 'தாகத்துக்குத் தா' என்றார். அவள், 'ஏன், யூதர்கள் சமாரியரிடம் அவ்விதமாக கேட்பது வழக்கமில்லையே, நாங்கள் அவர்களோடு கூட சம்பந்தப் படவில்லையே' என்றாள். அந்த இனப்பிரிவினையைப் பாருங்கள்? இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக, 'ஆனால் நீ யாரி டத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்திருந்தா யானால், நீ என்னிடத்தில் தாகத்துக்குக் கேட்டிருப்பாய். நீ இங்கே குடிக்க வராதபடி நான் உனக்கு தண்ணீர் கொண்டு வந்து அந்த தண்ணீரை உனக்குக் கொடுத்திருப்பேன்' என்றார். சிறிது நேரமாக உரையாடல் நடந்து கொண்டிருந்தது. இயேசு ஏன் அவ்வாறு உரையாடிக்கொண்டிருந்தார் என்று நீங்கள் எப்பொழுதாவது நின்று சிந்தித்திருக்கிறீர்களா? கூட்டத்தினர் அதைக் குறித்து எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? ஊழியக்காரரே, அவர் ஏன் அவளிடம் பேசினார் என்று எப்பொழுதாவது சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? இப்பொழுது, இது என்னுடைய சொந்த விசுவாசம். அவர் அவளுடைய ஆவியுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்று எண்ணுகிறேன். பாருங்கள்? ஏனெனில் இங்கேயும் அது அதேவிதமாகவே கிரியை செய்கிறது என்பதை நான் அறிவேன். பாருங்கள்? அவளுடைய ஆவியுடன் தொடர்பு கொள்ளுதல்... அவர் அவளுடன் தொடர்பு கொண்ட உடனே, அவளுடைய பிரச்சனை என்னவென்று கண்டுபிடித்தார். அவளுக்கு என்ன பிரச்சனை என்று அவளிடம் கூறினார். (அது சரியா?) அவளுடைய பிரச்சனை என்ன என்று. அவர், 'நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா' என்றார். அவள், 'எனக்கு புருஷன் இல்லை' என்றாள். அவர், 'அது சரியே. உனக்கு ஐந்து பேர் இருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல' என்றார். அவள் என்ன சொன்னாள்? அவள், 'ஐயா, நீர் (என்ன?) தீர்க்கதரிசியென்று காண்கிறேன்' என்றாள். 'இப்பொழுது, நாங்கள் (சமாரியர்களாகிய நாங்கள்), நாங்கள் மேசியா வரும் போது அவர் இந்த காரியங்களைச் செய்வார் என்று அறிந் திருக்கிறோம். அவர் இக்காரியங்களை எங்களிடம் சொல்லுவார். ஆனால் நீர் யார்?' என்று கேட்டாள். அவரோ, 'உன்னுடனே பேசுகிற நானே அவர்' என்றார். அப்பொழுது அவள் தன் தண்ணீர் குடத்தை வைத்து விட்டு, பட்டணத்திற்குள் ஓடினாள். 72. அது மேசியாவின் அடையாளம். அது சரியா? யாரா வது பரிசுத்த யோவான் சுவிசேஷத்தின் 4- ம் அதிகாரத்தை எப்பொழுதாவது வாசித்திருக்கிறீர்களா, அது சரியா? யாராவது பரிசுத்த யோவான் சுவிசேஷத்தின் 1-ம் அதிகாரத்தை வாசித்த துண்டா, அதில் அந்த யூதன் இயேசுவிடம் வந்த போது, அவர், 'இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்' என்றார். அவன், 'ரபி, நீர் என்னை எப்படி அறிவீர்?' என்றான். இயேசு அவனை நோக்கி, 'பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ மரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்' என்றார். அதற்கு அவன், 'ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா' என்றான். அது யூதர்களுக்கு மேசியாவின் அடையாளமாகவும், புற ஜாதிகளுக்கு அல்லது சமாரியர்களுக்கு மேசியாவின் அடை யாளமாகவும் இருந்திருக்குமானால், புறஜாதிகளுக்கு அது என்னவாக இருக்கும்? இப்பொழுது, தேவன் இந்த கடைசி நாட்களில் தமது நாமத்திற்கென்று புறஜாதிகளை அழைத் திருக்கிறார். ஒரு சமாரியன் பாதி யூதனும் பாதி புறஜாதியுமாக இருக்கிறான். சரி. ஆனால் இப்பொழுது, அது நமக்கு என்னவாக உள்ளது? மேசியா மாறாதவராக இருப்பாரானால், அது அதே அடையாளமாக இருக்கும். அவர் மாறாதவர் என்று விசுவாசிக்கிறீர்களா? அவர் மாறாதவர் என்று வேதாகமம் கூறுகிறதா? 'இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நான் செய்கிற கிரியைகளை... கொஞ்ச காலத்தில் உலகம் (அதாவது இந்த வெளி ஆசாரமானது) என்னைக் காணாது. அவர்கள் கவனிக்க மாட்டார்கள், அவர்கள் கவனிக்கும்படி போதுமான நேரம் உட்கார்ந்திருக்க மாட்டார்கள். இனிமேலும் அவர்கள் என்னைக் காணமாட்டார்கள். நீங்களோ என்னைக் காண்பீர்கள் - என்னை, நான் என்பது தனிப்பட்ட பிரதிபெயர், உங்களுடன் இருப்பேன், உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களுக்குள் இருப்பேன்' இப்பொழுது அவர் அவர்களுடைய நாட்களில் அந்த ஜனங்களுக்கு செய்த பிரகாரமாக, அவர் உங்களுக்குத் தம்மை வெளிப்படுத்த வேண்டும், அல்லது அவர் அதே மாறாத இயேசுவாக இருக்கமுடியாது. அது சரியா. இப்பொழுது, அவர் சுகமாக்குவதில்லை, சுகமளித்த லானது கல்வாரியில் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது. அது மனிதனின் விசுவாசத்தை அந்த நிலைக்கு கொண்டு வருகிறது. அது சரியா? சுகமளித்தலும் இரட்சிப்பும் சரியாக அங்கேயே கிரயம் கொடுத்து வாங்கப்பட்டு விட்டது. நாம் செய்யக்கூடிய ஒரே காரியம் என்னவெனில் அங்கே ஜனங்களை சுட்டிக் காட்ட வேண்டும். ஜனங்களை அங்கே சுட்டிக் காண்பிப் பதற்கு தேவன் அவருடைய வார்த்தைக்கு அப்பால் வெளியே சபையில் வரங்களை வைத்திருக்கிறார். வார்த்தையானது அதை அறிவிக்கிறது. இப்பொழுது சகோதரியே, உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், உன்னுடன் பேசிய பிறகு, இப்பொழுது கர்த்தராகிய இயேசு நீ எதற்காக இங்கே இருக்கிறாய் என்றோ அல்லது நான் அறியாத ஆனால் நீ அறிந்த ஏதோவொன்றை நான் அறியும்படி செய்தோ அல்லது என் உதடுகளை பயன்படுத்தி உன்னிடம் அதை சொல்வதற்கு அனுமதிப்பாரானால், அது ஏதோவொரு ஆவிக்குரிய ஆதாரத்திடம் இருந்து வந்திருக்க வேண்டுமென்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அது சரிதானே? கூட்டத்தினரே, அதை விசுவாசிக்கிறீர்களா? நல்லது இப்பொழுது, நீங்கள் சுவிசேஷத்தின் ஒரு ஊழியக்காரராக இருக்கிறீர்கள். எப்படியும் நீங்கள் என்னை நான்கு வருடங்களாக அறிந்திருக்கிறீர்கள், நான், என்னால் அறிந்த மட்டும் என்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறேன். நீங்கள் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் என்பதை கர்த்தராகிய இயேசு தம்முடைய தகுதியற்ற ஊழியக்காரன் வழியாக உங்களிடம் பேசும்படி அவர் கிரியை செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு ஒருவேளை பணப்பிரச்சனை இருக்கலாம். ஒருவேளை குடும்பப் பிரச்சனை இருக்கலாம். நீங்கள் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர் அறிவார். இப்பொழுது, என்னுடைய ஸ்தானத்தில் உங்களையே பொருத்திக் கொள்ளுங்கள். சந்தேகப்படும் உங்களில் யாராவது மேலே வந்து, என்னுடைய ஸ்தானத்தை எடுக்கும்படி விரும்புகிறீர்களா? வாருங்கள். நீங்கள் சந்தேகப் படுபவர் என்றும், அது தேவனுடைய வல்லமையென்று நீங்கள் விசுவாசிப்பதில்லை என்றும் எங்களிடம் சொல்லுங் கள். மேலே வந்து முயற்சித்துப் பாருங்கள். நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். ஒருமுறை இந்தியாவிலும் அதைக்குறித்து கேட்டேன். ஒருமுறை ஆப்பிரிக்காவிலும் அதைக் கேட்டேன். ஆனால் நிச்சயமாக இந்த ஸ்திரீயைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவருக்குத் தெரியும். ஆனால் அவர் இந்த ஜனங்களுக்கு முன்பாக அவர் தாமே வெளிப்படுத்தினால், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும் அவர் மாறாதவராயிருக்கிறார் என்றும் அது ஒரு நிரூபணமாக இருக்கும். இப்பொழுது, நான் நிச்சயமாகவே தயங்குகிறேன். நான் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். நான் தரிசனத் திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த ஸ்திரீயைக் குறித்து அறியமுடியவில்லை, அவர் என்னிடம் பேசாதிருந்தால், நான் ஒன்றையும் சொல்ல முடியாது, நான் - நான் எதையும் கூற முடியாது. ஆனால் அவர் அந்த அபிஷேகத்தை ஒருமுறை தொடங்கி விட்டால், அது சரி தான். ஏனெனில் நான் பிரசங்கித்திருக்கிறேன், இப்பொழுது என்னை நானே குணமாக்கிக் கொள்ளவும் உங்களிடம் பேசவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் இங்கே இருக்கிறார். 73.கூட்டத்தினர் இன்னும் என் சத்தத்தை கேட்கக் கூடுமானால், இந்த ஸ்திரீ என்னிடமிருந்து அப்பால் செல்வதாக காணப்படுகிறது. அவள் தன்னுடைய பக்கத்தில் கோளாறைக் கொண்டிருக்கிறாள். அது அவளுடைய இடது பக்கம். மேலும் அவள்... மேலும் அவள் ஒரு - ஒரு மூச்சுத்திணறலை அல்லது ஏதோவொன்றைக் கொண்டிருப்பதை காண்கிறேன். மேலும்... குறிப்பாக அவள் படுத்திருக்கும்போது. அவளுடைய இருதயத்தில் இருக்கிற பிரச்சனை அவளுடைய இருதயத்தில் கோளாறு உண்டாக காரணமாகியது. அது உண்மை. நான் தொடர்ந்து வேறு யாரோ ஒருவர் உங்களிடம் வருவதைக் காண்கிறேன். அது நீங்கள் ஜெபிக்க விரும்பும் மற்றொரு நபர். யாரோ ஒருவர் தங்களுடைய காலில் ஏதோவொரு கோளாறைக் கொண்டுள்ளனர். அது காலிலுள்ள கோளாறாய் உள்ளது, அது காலில் உள்ள பரு. அது மிகவும் சரியே. அது உண்மை. இயேசு இங்கிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? என்னுடைய சகோதரியே, இங்கே வாருங்கள். பரலோகப் பிதாவே, உம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட ஜீவனானது இங்கே மிகவும் அருகில் உள்ளது. உம்முடைய ஆவியானது இங்கே தவறாத நிரூபணங்களுடன் ஜனங்கள் மத்தியில் அசைவாடிக் கொண்டிருக்கிறதை காணும்படியாக மனிதர்களாகிய எங்களுக்கு சிலாக்கியம் உள்ளது. பரலோகப் பிதாவே, நீர் இரக்கமாயிருக்க வேண்டுமென்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன், புற்று நோயால் தின்னப்பட்ட இந்த ஸ்திரீயை சுகமாக்கின உமக்கு இந்த காரியங்கள் எவ்வளவு சிறியதாய் உள்ளன. அப்படியானால், பரலோகப் பிதாவே, வார்த்தையானது, 'விசுவாசிப்பவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்: வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்' என்று கூறியுள்ளது. இயேசுவின் நாமத்தில் இதைச் செய்கி றேன். ஆமென். என்னருமை சகோதரியே, கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, தேவனுடைய ஆசீர்வாதங்களை உனக்கு அருள்வாராக. இப்பொழுது, கூட்டத்தினரே, நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, ஜெப அட்டைகளில்லாத நீங்கள், ஜெப அட்டைகள் இல்லாத நீங்கள் விசுவாசிக்கத் தொடங்குங்கள், தேவன் உங்களை சந்திக்க வேண்டுமென்று ஜெபித்துக் கொண்டிருங்கள். இப்பொழுது, அப்படியே விசுவாசம் கொண்டிருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 74.இப்பொழுது, ஸ்திரீயே, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம் என்று யூகிக்கிறேன். சரி. இப் பொழுது, இங்கே காட்சியானது மாறுகிறது. இது ஒரு வெள்ளை நிற ஸ்திரீ. இப்பொழுது, நம்முடைய ஜீவியத்தி லேயே முதன் முதலாக நாம் இங்கே நிற்கிறோம். ஆனால், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து நம் இருவரையும் அறிந்திருக்கிறார். நீ உண்மையாகவே விசுவாசிக்கிறாயா? இப்பொழுது அப்படியே விசுவாசம் கொண்டிரு. ஏதோவொன்று கூட்டத்தினரிடம் செல்கிறது; நான் அதைச் சரியாக புரிந்து கொள்ள வில்லை. இப்பொழுது, நீங்கள் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டு, விசுவாசித்துக் கொண்டிருங்கள். சுகமாயிருக்க வாஞ்சிக் கிறவர்களை சுகமாக்கும்படி தேவன் நிச்சயமாகவே இங்கே இருக்கிறார். இப்பொழுது, என்னருகில் நின்று கொண்டிருக்கும் இந்த ஸ்திரீ, நான் அப்படியே... நீ என்னையுமோ அல்லது எதையுமோ நோக்கிப் பார்க்க வேண்டியதில்லை, ஆனால் நான் அப்படியே உன்னிடம் பேசுகிறேன். நான் உனக்கு ஒரு அந்நியராக இருக்கிறேன். நிச்சயமாக தேவன் உன்னை அறி வார்; எனக்கு உன்னைத் தெரியாது. ஆனால் தேவன் இங்கே பேசி, உன்னைக் குறித்தோ அல்லது நீ எதற்காக இங்கே இருக்கிறாய் என்பதைக் குறித்தோ நான் அறியும் படியாக செய்வாரானால், நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசித்து, உன்னுடைய தேவைகள் எல்லாவற்றையும் கொடுப்பவராக கிறிஸ்துவை நீ ஏற்றுக் கொள்வாயா? சரி, அவர் அதை உனக்கு அருளுவாராக. நீ ஒரு சதை வளர்ச்சியால் அவதிப்படுகிறாய். அந்த சதை வளர்ச்சியானது உன்னுடைய மார்பில் உள்ளது. அது உன்னுடைய இடது மார்பில் உள்ளது. அது சரியே. நான்... நீயும் கூட ஒரு ஊழியக்காரரின் மனைவியாக இருக்கிறாய். நீ இந்த தேசத்திலிருந்து வரவில்லை; நீ மற்றொரு மாநிலத்திலிருந்து வருகிறாய், மிசௌரி மாநிலத்திலிருந்து. அந்த சிறு பட்டண மானது சுல்லிவன் அல்லது அவ்விதமாக ஏதோவொன்று என்று நம்புகிறேன். ஊ-ஊ. நீ வேறொருவருக்காகவும் கூட ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். நீ ஜெபிப்பதற்காக விரும்பும் நபருக்கு ஒரு கட்டி உள்ளது. உன்னுடைய பெயரானது கார்னர் என்பது போன்ற ஏதோவொன்று அல்லது அதைப் போன்ற ஏதோவொன்று, அது சரியல்லவா? இப்பொழுது, நீ கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கிறாயா? அது சரி. இப் பொழுது, பேதுரு யாரென்று அவர் அறிந்து கொண்டார்; அதேவிதமாகத்தான் நான் உன்னையும் அறிகிறேன். இப் பொழுது, நீ எதற்காக வந்தாயோ அவையெல்லாவற்றிற்காக வும் நீ அவரை ஏற்றுக் கொள்வாயா? நான் அவருடைய ஆசீர்வாதத்தைக் கேட்கையில் நீ இப்பொழுது என்னருகில் சமீபமாய் வருவாயா? இப்பொழுது, பரலோகப் பிதாவே, இந்தச் சிறு பெண் இச்சமயத்தில் உண்மையாகவே அருகில் இருக்கிறாள், ஏனெனில் இந்த மகத்தானதாய் பொழியப்பட்ட பரிசுத்த ஆவியானவர் அவள் மேல் அசைவாடிக் கொண்டிருக்கிறார். இக்காரியங்களை மனிதனால் செய்ய முடியாது என்றும் அது தேவனிடத்திலிருந்து மாத்திரமே வருகிறது என்பதையும் அவள் உணர்ந்து கொள்கிறாள். அவர் தரிசனத்தில் காண்பித்த எதையும் இந்த சமயத்தில் நினைவு கூராதவனாய் என் கரத்தை இந்த ஸ்திரீயின் மேல் வைத்து, அவளுடைய வாஞ்சை எதுவானாலும், பிதாவே, நீர் அதை அவளுக்கு அருள வேண்டு மென்று ஜெபிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 75.சரி. சகோதரனே, உங்களுடைய அடுத்த வியாதியஸ்தரை அழைத்துக் கொண்டு வருவீர்களா? நம்முடைய கர்த்தராகிய இயேசு, 'நீ விசுவாசிக்கக் கூடுமானால், எல்லாம் ஆகும்' என்று கூறினார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? எப்படியிருக்கிறீர்கள், ஐயா? அங்கே ஒரு வரிசையானது இந்த ஸ்திரீயிலிருந்து வந்து, அந்த ஸ்திரீயிலிருந்து இந்த மனிதரிடம் வருகிறது, ஆவி. என்னால் அதை விளக்கிச் சொல்ல முடியும் என்று விரும்புகிறேன்; என்னால் அதை செய்ய முடியாது. அது விளக்கிச் சொல்லப்பட வேண்டியதல்ல. அந்த ஸ்திரீ ஒரு விதமான இருதய கோளாறைக் கொண்டிருக்கிறாள், மூச்சு விட கஷ்டப்படுதல். ஆம், அது சரியே. இந்த மனிதருக்கும் கூட அதுவே உள்ளது. ஊ - ஊ. அந்தப் பிசாசு அதன் மூலமாக கொண்டு போக முயற்சிக்கிறது (நீங்கள் பாருங்கள்?), ஆனால் அவனால் அதைச் செய்ய முடியாது. உமக்கு எலும்பு முறிவும் கூட உள்ளது, இல்லையா, ஐயா? ஊ-ஊ. நீர் ஒரு போதகர் - பெந்தெகொஸ்தே போதகர் என்று கூறுகிறேன். நீர் எந்த சபையைச் சேர்ந்தவர் என்று நான் சொல்ல வேண்டுமென்று நீர் விரும்புகிறீரா? அசம்பிளிஸ் ஆஃப் காட் சபை. என்னுடைய சகோதரனே, போய் விசுவாசியுங்கள். உங்கள் இருவரையும் விட்டு அது போய் விட்டது. மேலும்... எனவே கர்த்தர் உம்மை ஆசீர் வதிப்பாராக. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள். 'உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்...' 76.சற்று நேரத்திற்கு முன்பாக சுகமான அந்த ஸ்திரீ இருக்கும் இடத்திலிருந்து அந்த வரிசையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் சிறு சீமாட்டியே, நீங்கள் உங்களுடைய பேரனுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்கள். அவன் உங்களுக்கு முன்னால் நிற்பதை நான் காண்கிறேன். அவன் காச நோயினால் கஷ்டப்படுகிறான். அவனுடைய தொண்டையிலுள்ள ஒரு வகையான இருமல். அவனுக்கு மூக்கழற்சிக் காய்ச்சலும் கூட உள்ளது, அது அவனை தொல்லைப்படுத்துகிறது. அது உண்மை. அது கர்த்தர் உரைக்கிறதாவது. நீ தேவனை நோக்கி உயர்த்தியுள்ள அந்த கைக்குட்டையை எடுத்து, அந்த பிள்ளையின் மேல் வை. விசுவாசி; சந்தேகப் படாதே. 'உன்னால் விசுவாசிக்க கூடுமானால், எல்லாம் கைகூடும்.' 77.எப்படியிருக்கிறீர்கள், ஐயா? நான் உம்மை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதேயில்லை, ஐயா. நான் முற்றிலுமாக உமக்கு அந்நியனாக உள்ளேன். நீங்கள் உங்கள் சகோதரனிடம் நடந்து வரவில்லை என்பதை நீர் அறிந்துள்ளீர், இல்லையா? நீர் அவருடைய பிரசன்னத்திற்குள் நடந்து வந்தீர் என்றும் ஒரு மனிதனிடம் வரவில்லை என்பதை நீர் அறிவீர். ஒரு மனிதனுடைய பிரசன்னம் உம்மை அவ்விதமாக உணரச் செய்யாது. ஆனால் அது அவரே. இப்பொழுது, தேவன் சுகமளிப்பவராக இருக்கிறார். உமக்கு ஒரு ஜெப அட்டை கொடுக்கப்பட்டு, இங்கே மேலே வந்திருக்கிறீர். இங்கே மேலே வராத அந்த ஜனங்களைப் பாரும்; அவர்களிடம் ஜெப அட்டை இல்லை. நீர் கொண்டிருக்க வேண்டிய ஒன்றே ஒன்று விசுவாசம் மாத்திரமே. இப்பொழுது, நீர் எதற்காக இங்கே இருக்கிறீர் என்பதை நான் அறியும்படி தேவன் செய்வாரானால், நீர் அதை ஏற்றுக் கொள்வீரா? நான் உமக்கு உதவி செய்ய முடிந்து, அதை செய்யாமலிருந்தால், நான் ஒரு இரக்கமற்ற கொடுமைக்காரனாக இருப்பேன். ஆனால் நான் - நான் உம்முடைய சகோதரன். நான் உம்முடைய கிறிஸ்தவ சகோதரனும் கர்த்த ராகிய இயேசுவின் ஊழியக்கரானுமாக இருக்கிறேன். கர்த்தராகிய இயேசு நீர் வாஞ்சிப்பதை உமக்குக் கொடுக்கும் படி நீர் அவரை ஏற்றுக்கொள்ளும் படியான விசுவாசத்தை கொண்டிருக்கும்படியாக, ஒரு தெய்வீக வரத்தின் மூலமாக என்னால் உமக்கு உதவி செய்ய முடியும். நீர் என்ன விரும்புகிறீர் என்பதை நான் அறியும்படி அவர் அனுமதிப்பாரானால், நீர் ஏற்றுக்கொள்வீரா? நீர் என்னிடம் கேட்பதை. நான் உமக்காக ஜெபிக்கும்படி நீர் என்னிடம் கேட்கப் போகும் முதலாவது காரியம் என்னவெனில், ஒரு நரம்புத் தளர்ச்சிக்காகத்தான். நீர் மிகவும் பயந்த சுபாவமுள்ளவர். அது சரியே. ஆனால் உமக்கு பெரிய பாரம் உள்ளது. அது சரியே. அவள் சுகமடைவாள் என்று நீர் விசுவாசிக்கிறீரா? தேவன் அவளை திரும்பவும் சுகத்தோடு கொண்டு வருவார் என நீர் விசுவாசிப்பீரா? அவள் பின்னால் அவளுடைய சரியான சிந்தையில் வந்து, அவள் சுகமடைவாள் என்று விசுவாசிப் பீரா? நீர் அவளை - உம்முடைய மகளை - மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்லுகிறீர், இல்லையா? அவள் பித்து படித்தவளைப் போல இருக்கிறாள்; அவளுடன் உம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. நீர் அவளைப் பின்னால் அழைத்துக் கொண்டு வர வேண்டி யிருந்தது. இந்த மணி நேரத்தில் அவள் இந்த நிலையில் தான் இருக்கிறாள். ஆனால், என்னுடைய சகோதரனே, நீர் விசுவாசிப்பீரா? உம்மால் விசுவாசிக்கக் கூடுமானால், உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கக் கூடுமானால், நீர் சென்று, நீர் விசுவாசித்தபடியே பிள்ளை இருக்கக் காண்பீர். நீர் விசுவாசிப்பீரா? பரலோகப் பிதாவே, இந்த விண்ணப்பத்தின் மேல் உம்முடைய ஆசீர்வாதங்கள் இருக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தராகிய தேவனே, அதை அருளும். கர்த்தாவே, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்முடைய மகிமைக்காக இந்த ஆசீர்வாதங்களை பயபக்தியோடு கேட்கிறேன், நான் இதைக் கேட்கிறேன். இதை அருளும், கர்த்தாவே. ஓ, தேவனே, உம்முடைய மகிமைக்காக இதை அருளும். ஆமென். ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நீர் விசுவாசித்த படியே நீர் இருக்கக் காண்பீர். 78.உன் கரத்தை மேலே உயர்த்தி வைத்துக்கொண்டு, இங்கே அந்த வரிசையின் கடைசியில் இருக்கும் சீமாட்டியே, உனக்கு கீல்வாதம் உள்ளது. நீ அதன் மேல் ஒரு சிறு கட்டு போட்டிருக்கிறாய். ஆம். நீ காலை நேரத்தில் உன் முட்டை எளிதில் மடக்க முடியாமல் படுக்கையிலிருந்து அசைக்க முயற்சிப்பதை நான் காண்கிறேன். தேவனும் கூட உன்னைக் கண்டார், உன் கரத்தை உயர்த்து. உன்னால் விசுவாசிக்கக் கூடுமா? சகோதரியே, கர்த்தராகிய தேவன் உன்னை ஆசீர் வதிப்பாராக. தரிசனமானது அடுத்த சீமாட்டியிடம் நகருவதைக் காண் கிறேன்; அவளும் கூட ஜெபித்துக்கொண்டிருக்கிறாள். சீமாட் டியே, நீ கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பாயானால், அந்த மலக்குடல் சார்ந்த கோளாறு உன்னை விட்டுப்போய் விடும். நீ விசுவாசிப்பாயா? உனக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும் சீமாட்டிக்கு காலில் கோளாறு உள்ளது. அது சரிதானே, சீமாட்டியே. நீயும் கூட கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பாயா? சரி. இருதய கோளாறைக் கொண்டு, சிறு வட்டமான தொப்பியை அணிந்துள்ள அந்த வயதான சீமாட்டியாகிய அடுத்து இருக்கிற சீமாட்டியின் மேல் உன் கரத்தை வை. நீ அவளுக்காக விசுவாசிப்பாயானால், நீ முழுவதுமாக சுகமாகி விடுவாய். நீ விசுவாசிக்கிறாயா? நாங்கள் உனக்காக ஒரு ஜெபத்தை ஏறெடுக்கட்டும். எங்கள் பரலோகப் பிதாவே, நீர் சுகப்படுத்த வேண்டு மென்றும், நலமாக்க வேண்டுமென்றும் கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். நித்திய ஆசீர்வதிக்கப்பட்ட தேவனே, உம்முடைய மகிமைக்காக இதை அருளும். முழு கூட்டத்தினர் மேலும் இந்த ஆசீர்வாதங்களை அருளும். பிதாவே, நீர் இதை அருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். உம்முடைய நித்திய ஆசீர்வாதங்கள் தங்கியிருக்கட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். சகோதரியே, நான் சிறிது நேரத்திற்கு முன்பாக உன்னிடம் பேசியிருந்தால், நீ அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கையில், தேவன் உன்னுடைய விண்ணப்பத்தை அருளுவார். நீ அதற்காக என்னுடைய வார்த்தையை எடுத்துக் கொள்வாயா? மேடையை விட்டுச் சென்று விசுவாசித்துக் கொண்டிரு. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 79.ஓ, அவர் அற்புதமானவராயில்லையா? தேவன் அற்புத மானவராக இருக்கிறார். அவர் அனைவரையும் சுகமாக்க முடியும், அது சரியல்லவா? நலமாகுங்கள், சுகமாகுங்கள்... சர்க்கரை நோயோ எதுவும் அவருக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டாக்குவதில்லை, அப்படித்தானே? அவர் அதை சம்பவிக் கப்பண்ண முடியும். மருத்துவர் அறுவை சிகிட்சை செய்து, உங்கள் கால் எல்லா நேரமும் இருந்ததை போல, அதை சுகப்படுத்த முடியாத நிலைக்கு அது வரும்போது, அவரால் அதை சுகப்படுத்த முடியும். சகோதரியே, நீ அதை விசுவாசிக்கிறாயா? அப்படியானால், நீ போய் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உன்னுடைய சுகத்தை ஏற்றுக்கொள். ஆமென். தேவனிடத்தில் விசுவாசமாயிரு. நீவிசுவாசிப்பாயா? கூட்டத்தினராகிய நீங்கள் எல்லாரும் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கிறீர்களா? இந்த நேரத்தில் வெளியே உள்ள எத்தனை பேர் விசுவாசிக்க ஆயத்தமா யிருக்கிறீர்கள்? அவர் அன்பானவராகவும், இனிமையானவரா கவும், இரக்கமானவராகவும் இருக்கிறார். அப்படியே விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். 80.அங்கே சக்கர நாற்காலிகளில் இருப்பவர்களைக் குறித்து என்ன? அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இந்த வழியாக நோக்கிப்பார்த்து விசுவாசியுங்கள். கட்டிடத்தில் எங்கிருந்தாலும், மேலே கூட்டத்தினரோ, எங்கிருந்தாலும், நோக்கிப்பார்த்து, ஜீவித்து, விசுவாசியுங்கள். சக்கர நாற்காலிகளில் இருப்பவர்களை ஒரு நிமிடம் பார்க்கலாம். நான் உங்களை சுகமாக்க முடியாது. உங்களை நீங்களே மறைக்க முடியாது. அவருடைய ஆவி இங்கே உள்ளது. கறுத்த நிழல் தன் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு சீமாட்டியைப் பார்க்கிறேன். ஒரு சக்கர நாற்காலியில் உட் கார்ந்திருக்கும் நரைத்த தலையையுடைய சீமாட்டி. அவளுக்கு புற்று நோய் உள்ளது, அவள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறாள். அது நுரையீரலிலும் கூட உள்ளது. அவள் பயங்கரமான நிலையில் இருக்கிறாள். ஆனால் சீமாட்டியே, உன்னைத் தொடர்ந்து அதைக்காட்டிலும் பெரிய கறுத்த வாய்க் காலைக்காண்கிறேன். உன்னுடைய இரட்சகராக இயேசு தேவைப்படுகிறார். நீ மனந்திரும்பவில்லை, கிறிஸ்து உன்னுடைய இரட்சகராக தேவைப்படுகிறார். அவரை இப்பொழுது உன்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்வாயா? நீ அதைச் செய்வாயா? அப்படியானால், அந்த சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து, அதை எடுத்துக்கொண்டு, அதை கதவுக்கு வெளியே தள்ளிக்கொண்டு, வீட்டிற்கு சென்று சுகமாயிரு, உன்னால் கூடுமானால்...?... உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது. கர்த்தருடைய நாமத்தில் போ. நீ உன்னுடைய காலூன்றி நிற்கும் போது, நீ கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பாயா? இப்பொழுது உன்னுடைய கரத்தை அவருக்கு நேராக உயர்த்து. நான் உன்னுடைய விசுவாசத்திற்கு சவால் விடுகிறேன். 81.ஓ கர்த்தாவே, வானத்தையும் பூமியையும் உண்டாக் கினவரே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, ஒவ்வொரு வரத்தையும் கொடுப்பவரே, நான் உம்மிடம் வருகிறேன், கர்த்தாவே. ஓ தேவனே, ஜனங்கள் அவிசுவாசத்தினால் எவ்வளவாக கூனிக்குறுக முடியும். உம்முடைய பரிசுத்த ஆவியை அப்படியே இந்த நேரத்தில் கூட்டத்தினரிடம் திரும்ப அனுப்பி, அவர் இந்த கட்டிடத்தை பிரகாசிக்கச் செய்வாராக. இப்பொழுது அவர் ஒவ்வொரு சந்தேகத்தின் ஆவியையும், எல்லா இருளையும் கடிந்து கொண்டு துரத்துவாராக. சாத்தான் அவர்களை கட்டியிருக்கிற கட்டிலிருந்து பிடியை தளத்துவானாக. கர்த்தாவே, நீர் இங்கே இருக்கிறீர் என்பதை நான் அறிவேன், இது அவர்கள் எப்போதும் கண்டிருப்பதிலேயே ஒரு மகத்தான இரவாக இருப்பதிலிருந்து தடை செய்வது என்னவெனில், அந்த சிறு அவிசுவாசமானது அவர்கள் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. நான் அந்த அவிசுவாசத்திற்கு சவால் விடுகிறேன். தேவனுடைய வார்த்தையின் மூலம் அதற்கு சவால் விடுகிறேன். பரிசுத்த ஆவியின் மூலமாக அதற்கு சவால் விடுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதற்கு சவால் விடுகிறேன். இந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே வா; இந்த ஜனங்களை விட்டு விலகு; இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களை விட்டு வெளியே வா. ஒவ்வொருவரும் பரிபூரணமாக சுகமடைந்து, தங்களுடைய கட்டில்களிலிருந்தும், இருக்கைகளிலிருந்தும் எழுந்து, அவருடைய மகிமைக்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நடப்பார்களாக. 2